May 31, 2010

விடைபெறுகிறேன்.....


நண்பர்களே!!


அநேகமாக இதுவே எனது இறுதி பதிவாகவும் இருக்கலாம். இப்போது இருக்கும் வேலையில் மாற்றம் (வேலை போயிருச்சுனு இல்லைங்க) அடுத்த பணியிடம், தங்குமிடம் எதுவும் உறுதியாகாததால். மீண்டும் எப்போது அடுத்த பதிவு போடுவேன் என்று எனக்கே தெரியாது. கணினி பயன்படுத்தக்கூடிய அலுவலுகமோ + வலையில் ஏறும் வாய்ப்பு கிடைத்தால், மடிக்கணினியோ வாய்க்கும் காலத்தில் மீண்டும் நிச்சயம் எழுத்தை தொடர்வேன்.

அதுவரை நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
இத்தனை நாள் ஆதரவு அளித்த அத்தனை நண்பர்களுக்கு நன்றி!!

:)) அன்புடன்
அஷ்வின்

May 8, 2010

நன்றிகள்.... (வாசகர்களகிய உங்களுக்கு)




வணக்கம், வணக்கம், வணக்கம்..........

என் வலைபூ படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களகிய உங்களுக்கு வண்க்கம். [வலைபூ-ல மூன்று தடவை வணக்கம் சொல்லிருக்கிறேன்னு யோசிக்கதீங்க, சன் டிவி காமெடி டைம் Archana style ல வண்க்கம் சொல்லிப்பார்தேன், அதான் மூன்று தடவை உங்களுக்கு வணக்கம்]

"ஏய், அடங்க மாட்டீயா நீ!" என்றது என் உள்மனம் உற்சாகத்திலும் சந்தோஷத்திலும்.

இது என் 25வது பதிவு!! அது மட்டுமல்ல இன்று என் வலைபூ பக்கம் வந்த வாசகர்களின் எண்ணிக்கை 1000 தண்டிவிட்டது.

என்னமோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நான் பெருமிதத்தில் தத்தளிக்க, என் மனம் என்னை அடக்கியது! :))

இது அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் பலருக்கு. ஆனால், என்னை பொறுத்தவரை நான் வாழ்க்கையில் உருப்படியாக செய்து மிக சில விஷயங்களில் இதுவும் ஒன்று!

பிடிச்ச விஷயங்கள் நிறைய .. குறிப்பா சொல்லணுமின்னா புத்தகம், திரைஇசை, அனிமேஷன் கார்டூன் படங்கள்… சொல்லிட்டே போகலாம்.(மேலும் என் Profile-ல இருக்கு).

சற்று வரலாற்றை புரட்டி பார்த்தால் (சரி முறைக்காதீங்க.... ), நான் எப்படி இந்த வலைப்பூ உலகிற்குள் வந்தேன்? என்று எனக்கே சற்று வியப்பாகத்தான் உள்ளது.

சும்மா....ஒரு நாள் நான் கூகுளில் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் என் கண்களுக்கு தென்பட்டது ஒரு வலைபூ திறந்து உள்ளே நுழைந்தேன். திகைத்து போனேன் தமிழில் தட்டச்சை செய்யபட்டிருந்தது. எனக்கும் அதை போல் திறக்க ஆசை, எனக்கு தெரிந்தவரைக்கும் ஒரு வலை உருவ வேண்டுமென்றால் அதற்கு நிறைய பணம் தேவை, பின் அதில் என் வசதிக்கேற்ப அதை மாற்றி அமைக்க முடியாது, தெரிந்தவர்கள் மட்டும் படிக்க முடியும்,

Blogger-ஒன்னு இருக்கு, G-mail ID இருந்தால் போதும் எனக்கு ஒரு சொந்த வலை ஆரமித்து விடலாம் என தெரிந்து கொண்டேன், அப்படி அரமிக்கபட்டது தான் இந்த வலை.

நான் ஒன்றும் பிறப்பிலேயே எழுத்தளானாய் பிறக்கவில்லை, பின் எப்படி இவன் மட்டும்.... என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

எதோ ஆர்வத்தில் எழுத்துக்களை சேர்த்து கிறுக்க கொண்டிருந்த என்னை நல்ல பதிவுகளை எழுத வைத்தது நான் கண்ட திரைப்படங்களின் மேல் உள்ள ஆர்வம்.

இந்த வலைபூ ஆரமித்த சில காலங்களில் பழக்க ஆரமித்து எல்லா நிலையிலும் என்னை ஊக்க படுத்தி கொண்டிருக்கும் என் நண்பர் கருந்தேள் கண்ணாயிரம் (ரஜெஷ்-கு) நான் ரொம்பவே நன்றிகடன் பட்டிருக்கிறேன்!....

இது வரையிலும் நான் என்ன எழுதி கிளிச்சளும் என்னை தட்டி கொடுக்கும் என் நண்பர்களாகிய நீங்கள்... என்னையும் மதிச்சு ஃபாலோ பண்ணுறவங்க..

இப்போ எனக்கென்று ஒரு இணையகுடும்பம் இன்றைய அளவில் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

என் வலைப்பூவை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!

என் எழுத்தில், கருத்தில்…..
பிழைகள் இருந்தால்
சுட்டிக் காட்டுங்கள்!
பிடித்திருந்தால்
தட்டிக் கொடுங்கள்!!

நான் எழுதுகையில்
பிறக்கின்ற என் எழுத்துக்கள்!!!
நீங்கள் வாசிக்கையில்
உயிரையும்
பெறுகின்றன,

உங்கள் ஊக்கமும் விமர்சனங்களும்தான் என்னை மேன்மேலும் எழுத தூண்டும்.

பிரியமுடன்
அஷ்வின்.

P2 (PARKING 2) - அழகிய தில்லர்


பிரச்சனை யாருக்கு எந்த வடிவில் எப்போழுது... யார் வடிவில் வரும் என்று யாருக்கும் தெரியாது. இதன் ஒரு பதில் "காலம்".. இதுவே பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..அவர்களது அழகே அவர்களுக்கு பிரச்சனை அப்படி ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனைதான் இந்த படத்தின் கதை... நேற்று சற்றும் எதிர்பாக்காமல் என் நண்பன் வீட்டில் 2007-ல் வெளிவந்த "PARKING TWO (P2)".பார்த்தேன்.

A christmas evening அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அவள் கார் நிறுத்தி இருக்கும் P2 parking-கு போகிறாள்... கார் ஸ்டார்ட் ஆகாமல் அடம் பிடிக்க அவள் நேராக செக்யூரிட்டியிடம் போய் விஷயத்தை சொல்கின்றாள்... செக்யூரிட்டியிடம் அதன் பிறகு டாக்சிக்கு போன் செய்கின்றாள்... டாக்சி வர 15 நிமிடம் ஆகும் என்று தெரிவிக்க...செக்யூரிட்டி தான் தனியாக இருப்பதாகவும் தனக்கு christmas Party கம்பெனி கொடுக்க, அவளை அலுவலகம் தன் அழைக்க... அவளும் டாக்சி வரும் வரையில் அவனுக்கு கம்பெனி கொடுக்கின்றாள்... டாக்சி வந்து விட்டது என்று அழைப்பு வர, அவள் மெயின் கேட்டுக்கு வரும் போது அது பூட்டி இருக்கின்றது. உள்ளிருந்து டாக்சியை நிக்க சொல்ல christmas பிசியில் டாக்சி போய் விடுகின்றது. திரும்பவும் அவள் P2 parking இருக்கும் தன் அந்த வரும் போது செக்யூரிட்டி அலுவலகம் பொழுது லைட் எல்லாம் அனைந்து விடுகின்றது.செல்போன் வெளிச்சத்தில் தடவி தடவி அவள் வரும் போது, இருட்டில் அவளுக்கு கம்பனி கொடுத்த அந்த செக்யூரிட்டி கையில் இருக்கும் கட்டையால் அவளை தாக்க அவள் மயக்கம் ஆகின்றாள். விழித்து பார்த்தாள் அவன் அவளை கட்டி போட்டு வைத்து இருக்கின்றான்...

சிறிது நேரம் கழித்து கண் திறக்கும் அவளிடன் நீ என்னுடன் தான் இந்த christmas-யை கொண்டா வேண்டும் என்றும் தனக்கு அவள் என்றால் ரொம்ப பிடிக்கும் அவன் கூற அவள் மறுக்கிறாள். அவளை தன் காரில் எடுத்து கொண்டு அதன் அடுத்த Parking Floor செல்லும் போது அங்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பனை கட்டி வைத்திருக்கிறான். அவளை அலுவகத்தில் தொட்டமைகாக கொலை செய்கிறான் ஒரு சைகோவை போல அவன்.

அவளுக்கு எல்லாம் புரிய வருகிறது அவன் செய்த திட்டம் தான் என்று... பின்னர் அவள் என்னவானாள்? எப்படி தப்பினாள்? எப்படி கஷ்டபட்டாள் என்பதை திரையில் காணுங்கள்...

படத்தில் நடித்த இருவரும் தங்கள் கொடுத்த பாத்திரங்களை கலக்கியிருக்கிறார்கள்.
Wes Bentley & Rachel Nichols hats off.

படத்திற்கு பலமே இசையும் ஒளிப்பதிவும் தான்....படம் முழுவதும் இருவர் மட்டுமே கொண்டு திரைக்கதை பயணிக்கிறது.

கதை முழுவதும் இரவில் நடப்பதால் லைட்டிங்கில் எந்த மாற்றமும் இல்லை...படத்தின் கடைசிவரை காஸ்ட்யூமும் கூட மாற்றமில்லை செலவுகளை மிகவும் குறைத்து இருக்கின்றது...

Rachel Nichols சொல்லிய ஆக வேண்டும் நேற்று இரவு என் துக்கத்தை களைத்தவள். படத்தில் Nichols-ன் பாத்திரத்தின் பெயர் "Angela' உன்மையில அவள் ஒரு "Angel"தான்.

முதல் காட்சியில் கதாநாயகியின் அலுவலகமும் அவளது அழகும் & உடையும் சான்சே இல்லை.. (தப்ப நீனைக்காதீங்க அழகை ரசிக்கலாம் தப்பில்லை.. எங்கோ படித்தது) நல்ல
body language.... நல்ல expressions....

முதலில் கார்பரேட் ஸ்டைலில் உடை உடுத்திய Nichols-யை பெண் Bentleyவிடம் மாட்டியதும் பெட்டிக்கோட்டுடன் அலைய வைப்பதும். அதனால் தான் படத்தை இன்னும் உன்னிப்பாக பார்க்க முடிகின்றது என்பது வேறு விஷயம்.... இருத்தும் ஒரு நல்ல டைம்பாஸ் தில்லர்-கு நான் பொறுப்பு..

*****PARKING 2 (P2)- எதுவும் நேரலாம் எங்கும் யாருக்கும்,.... *****

May 6, 2010

BLEU - France ( ஒரு வாழ்க்கை பயணம் )



வெகு நாட்களாக இந்த திரைப்படம் எழுத வேண்டுமென்று என் நினைவில் இருந்தாலும்...இந்த திரைப்படம் என் மனதில் விட்டு சென்ற வலி இன்னும் பசுமையாய்...

நாம் நமது வாழ்வில் எத்தனை உறவுகளை இழந்திருப்போம், எத்தனை உறவுகளை பெற்றிருப்போம்..பழைய உறவால் தொலையும் வாழ்க்கையும், புது உறவுகளால் புதுப்பிக்கப்படும் வாழ்வும் சில நினைவுடளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது இந்த திரைப்படம்.

94 நிமிடங்களில் ஒரு வாழ்க்கை, மரணம், கண்ணீர், சோகம், பிரிவின் வலி எதிர்கொள்ளல், போன்ற பல உணர்வுகள்.

1993 ஆம் ஆண்டு வெளிவந்த புகழ்பெற்ற போலந்து நாட்டு இயக்குனர் Krzysztof Kieslowski Trois couleurs: Bleu (Three Colors: Blue).

இப்படத்தை பற்றி சுறுங்க சொன்னால்....

சாலை விபத்தொன்றில் தன் கணவனையும் சிறுவயது மகளையும் பறிகொடுத்த ஜூலி அத்துயரத்தை எவ்வாறு எதிர்கொள்கிறாள். அவள் வாழ்வின் இன்ப துன்பங்கள்,....அவள் இந்த சப்பவத்தை தொடர்ந்து உறவுகளின் பாசப்பிணைப்புகளிலிருந்து விடுதலை அடைய (Spritual Suicide)மனக்கொலை செய்துகொள்ள விரும்புகிறாள். ஆனால் பாரிஸ் நகரத்தில் தெரிந்தவர்களும் புதிய அறிமுகங்களும் விரிக்கும் நேசவலைகள் அவளது வாழ்வை மீட்டெடுக்கின்றன என்பதை இப்படம் சித்தரிக்கிறது.

இந்த திரைப்படத்தை மாற்று கோணத்தில் பார்தால்...

இந்த சப்பவகளுடன் பிரெஞ்சுப் புரட்சியின் விடுதலை கருத்துக்ககளுடன் ஒரு வாழ்வியல் அனுபவத்தையும் இணைந்து திரைப்படத்தின் கதை.

ஜூலி கதாபாத்திரத்ததில் Spiritual Suicide எனப்படும் மனக்கொலை நிலை வெளிப்படுத்தப்படும்போது சற்றே அதிர்ந்து போகிறது மனது. ஒரு நிமிடம் நாம் சொந்த உறவுகளின் பிரிவுகளால் ஏற்படும் நிகழ்வுகள் காட்சி ஓவியங்களாக விரிகின்றன, சற்று வலிகளுடன்.... நமது மனதிரையில்.

உணர்வுகளை எந்த விதத்திலும் விலகிவிடாதவாறு காட்சிப்படுத்தலின் முழுமையைமிக நேர்த்தியுடன் படத்தொகுப்பு படைக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் இனணந்து பயணப்பட்டிருக்கிறது கேமரா.

படத்தில் பயணிக்கும் போது ஒரு மெல்லிய சலிப்புத்தன்மை கொண்டிருந்தாலும் நெடுகிலும் பட காட்சிகளால் மறக்க செய்கிறார் இயக்குனர்.

வெளிவந்த அதே ஆண்டில் வெனிஸ் திரைப்பட விழாவில் முன்று விருதுகளை அள்ளியது.
Silver Ribbon, Sant Jordi Award,César Award,Goya Award,CEC Award, Guild Film Award போன்ற பல பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது.இப்படத்தை தொடர்ந்து White and RED அகியவை வெளிவந்தன.
நாயகி தன் பின்கரத்தை சுவற்றோடு உராசிச்சென்று சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி, இப்படத்தில் வரும் காட்சியைப் போன்று "இந்திரா" திரைப்படத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.(நமது தமிழ் சினிமா இந்த படத்தையும் வீட்டுவைக்கவில்லை)

*****BLEU - one of the world's preeminent flims*****

May 3, 2010

எனக்கு பிடித்த பாடல்...(உங்களுக்கும் பிடிக்குமென்று)


எதோ எனக்கு சொல்ல தெரியவில்லை.. இந்த பாடல் வரிகள் பிடித்து நான் இந்த பதிவை போடுகிறேனா, இல்லை... இளையராஜாவின் இசையில் வந்த்தால் பிடித்து போயிற்றோ எனக்கு சொல்ல தெரியவில்லை... கடந்த வாரத்தில் இருந்து இன்று வரை என் கண்ணியில் ஓலிக்கும் இப்பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள..

படம்: கோழி கூவுது
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா.








கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.