November 24, 2010

The Disappearance of Alice Creed (2009) ஒரு கடத்தல் மிக நேர்த்தியாய்....

எல்லோரும் நலம் உடன் இருப்பீர்கள்...நீண்ட நாட்களுக்கு பிறகு சி(ச)ந்திக்க வருகிறேன் ஒரு சிறந்த படத்துடன் என்று நம்புகிறேன்.

இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாள் நீனைவில் இருந்தாலும் சமீபத்தில் என்னை ( நிறைய மக்களை பாதித்த ஒரு சம்பவம்).சமீபத்தில் கோவையில் பணத்திற்காக இரண்டு பள்ளி குழந்தகளை கடத்தி கொலை மற்றும் ஆந்திராவில் ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் நடந்த இந்த கொடூர கடத்தல் கொலைகளை பத்திரிக்கையில் எல்லோரும் படித்த செய்திதான்.. இந்த சின்ன குழந்தைகளின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்...

இந்த சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தன... இப்படியும் மக்கள் இருக்கதான் செய்கிறார்கள் இந்த சமுதயத்தில்....எல்லாம் தெரிந்தும் வாழ்க்கையை பணயம் வைத்து கடத்தல் நாடகம் தினமும் அரங்கேறியபடி உள்ளது எல்லாம் பணத்துக்காக.....

THE DISAPPERANCE OF ALICE CREED-கதையும் இது போல ஒரு கதைதான். சரி-படத்தின் கதைக்கு வருவோம்......

கடத்தலில் இரண்டு வகை இருக்கின்றது.. ஒன்று பணத்தை வாங்கி கொண்டு கடைசியில் உயிரோடு விட்டு விடுவது.. இரண்டாவது பணத்தை வாங்கி கொண்டு எப்படியும் நம்மை காட்டிகொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் கடத்தியவரை கொன்று விடுவது...

விக் & டேனி இரண்டு பேரும்... ஒரு வேன் திருடுகிறார்கள்...நம்பர்பிளேட் மாற்றபடுகின்றது...கடைக்கு சென்று சாமான்கள் வாங்குகிறார்கள்..உள்ளே என்ன கத்தினாலும் வெளியே கேட்காதது போல் ஒரு ரூம் அதில் ஒரு கட்டிலையும், அதில் ஒருவரை கட்டி போடுவதற்கு ஏற்றது போல் எல்லாம் ரெடி செய்து வைக்கிறார்கள்...

எல்லா முடிந்ததும் ஆலிஸ் என்ற பண்ணகாரர் வீட்டு பெண்ணை கடத்தி வருகின்றார்கள்..

கடத்தி வந்த பின் ஆலிஸ் சத்தம் போட்டாலும் வெளியே கேட்காத அறையில் அடைக்கபடுகிறாள்... அவள் எப்படியும் தப்பிவிடக்ககூடாது என்பதால் கை, கால்களை... கட்டிவிட்ட போதிலும் தங்களிடம் பேசி ஏதாவது மனதை மாற்றிவிடுவாள் என்பதால், வாயில் பால் கேங் வைத்து கட்டி விடுகிறார்கள்...

ஆலிஸ்யிடம் தெளிவாக சொல்லபடுகின்றது.. உன்னை துன்புறுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.. எங்களுக்கு வேண்டியது பணம் என்று.....

பின்.... கத்திரிக்கோல் எடுத்து ஆலிஸ்-யின் உடைகளை களைந்து முழு நிர்வாணமாக்குகிறார்கள்.. அவளின் பிறப்பு உறுப்பு மேல் ஒரு நியூஸ் பேப்பர் வைத்து மறைத்து விட்டு... அவளை அரைநிர்வாணமாக புகைபடம் எடுத்து அதனை அந்த பெண்ணின் அப்பாவுக்கு அனுப்பிகின்றனர்...

மீண்டும் ஆலிஸ்க்கு வேறு உடை அணிவிக்கின்றனர்.. அந்த உடை கூட எளிதில் அகற்றலாம் அது போல ஒரு உடை... அந்த பெண்ணின் கண்ணை பார்த்தால் இரக்கம் வரும் என்பதால் கறுப்பு துணி தலையில் போட்டு மூடுகின்றார்கள்..

வீடியோவில் துப்பாக்கி முனையில் அலிசை மிரட்டி அவள் அப்பாவிடம் கதறி பணம் கேட்க வைக்கின்றார்கள்....

இதில் ஒரு கட்டத்தில் விக்கி வெளியே செல்ல .. போகும் போது டேனியை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு போக...

டேனி தனியே இருக்கும் போது தனக்கு மலம் வருகின்றது என்று ஆலிஸ் கையால் செய்கை செய்கின்றாள்..... ஒரு பக்கெட் மற்றும் ஒரு பேப்பர் நாப்கின் பேப்ப்ர் ரோல், எடுத்து போய் அவள் பக்கத்தில் வைத்து விட்டு துப்பாக்கி முனையில் அவள் கால்கள் மற்றும் ஒரு கை விலங்கை அவுத்து விட்டு வாயில் இருக்கும் பாலை எடுத்து விடுகின்றான்...

அவள் உடைகளை களைந்து அந்த பக்கெட்டில் உட்கார. துப்பாக்கி முனையில் அவளை பார்த்துக்கொண்டே இருக்க... ஆலிஸ்…. டேனியிடம்... இப்படியே பார்த்துக்கொண்டு இருந்தால் எனக்கு எதுவும் வராது என்று சொல்லி அவனை திரும்பி நிற்க்க சொல்ல, டேனியும் பாவம் பார்த்து திரும்பி நிற்க்க...

ஆலிஸ் அப்படியே திரும்பி அந்த பாக்கெட்டை சத்தம் காட்டாமல் எடுத்து அவன் தலையில் ஒரு போடு போட்டு விட்டு அவனிடம் இருக்கும் துப்பாக்கியை பறித்து வைத்துக்கொள்கின்றாள்... இப்போது டேனி அலிஸ்ன் துப்பாக்கி முனையில்... அவள் தப்பி இருக்கலாம் அல்லவா??? இல்லை தப்பிக்க முடியலை ஏன்....

நிறைய ஷாட்ஸ், நிறைய டூவிஸ்ட்.. படம் பார்க்கும் போது சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால் நான் விரிவாய் சொல்லவில்லை...

இந்த படத்தின் சிறப்பு என்ன தெரியுமா???

படம் முழுக்க.... மூன்றே பேர்தான்.. அப்புறம் படத்தில் பயணிக்கும் கேமரா...

அதாவது முதலில் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் காண்பிக்கும் போது...அப்பா போனில் பேசுவது ... ஏதிர் வீட்டு அப்பார்ட்மென்ட்டில் கதவை திறந்து ஆள் போவது.. பார்க்கிங் ஏரியாவில் யாராவது நடந்து போய் கார் எடுப்பது...என்று லோ ஆங்கிளில் கேமரா பயணிக்கும் போது ஒரு ஆள் இருப்பது போல வரும்.... ஆனால் ஒரு ஆள் கூட பிரேமில் வராதது போல் எடுத்து இருக்கின்றார்கள்... அதை தவிர்த்து பார்த்தால் படம் முடியும் வரை... அந்த மூன்று பேர்தான்.

அது போலான திரைக்கதை மற்றும் பிரேமிங்...அபாரம்...

முக்கியமா கடத்துவதற்கு முன் டென்ஷனா விரல்கள் நடுக்குவது...ரூம் ரெடி செய்யும் போது வைத்து இருக்கும் ஷாட்டுகள்....

ஆலிஸ் உடம்புல கேமரா டிராவல் ஆகும் போது... அவள் தொப்புள் சுற்றி இருக்கும் எல்லா ரோமங்களும் சிலிர்த்து இருப்பது போன்ற காட்சியும்...

ஆலிஸ்ன்... மூத்திரத்தை டேனி பிடித்துக்கொண்டு போய் அதை டாய்லட்டில் கொட்டும் போதும் அதன் மஞ்சள் தன்மையும்...டாய்லட்டி தோட்டா பாகத்தை போட்டு விட்டு பிளஷ் செய்ய, அது போகாமல் அடம் பிடிக்க, என பல காட்சிகளால் நாமும் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிப்பதை தவிர்க்க முடியவில்லை....

கிளைமாஸ் என்னவென்று சொல்ல....இயக்குனரே சபாஷ்...

இதுல ஒரு கிஸ்சிங் சீன் அந்த சீனை நீங்க வாழ்க்கையில மறக்கவே முடியாது...மற்றும் டேனிக்கும் அலிஸ்க்கும் ஒரு டுவிஸ்ட் மேட்டர் சீன் வச்சி இருக்காங்க..அது போலான காட்சி அது...

ஆலிஸ்யாக நடித்து இருக்கும் Gemma Arterton... நடிப்பு செம நடிப்பு.... படம் முலுக்க கட்டி போட்டு இருப்பது போலான காட்சிதான் பின்னி எடுத்து இருக்குது பொண்ணு....

குறிப்பு: படம் டோரன்டோ,லண்டன் டிரேபிகா என மூன்று உலகபடவிழாவில் திரையிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது.

பார்த்தே தீர வேண்டியபடங்களின் ஒன்று….. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் கருத்துகள் போட மாறகதீர்கள்………………………………