December 30, 2009

3 IDIOTS - A GENIUS MOVIE!

நான் சில நாட்கள் முன் பாத்த ஹிந்தி படங்கள் (Blue, Wanted, London Dreams...etc..etc நீண்ட பட்டியல்......யாவும திருத்தி தரத வகையில்...ரொம்ப நாளைக்கு அப்புறம் வருட இறுதியில் பார்க்கும் ஒரு படம் மனதுக்கு நிறைவாய் அமைவது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!

எனக்கு பிடித்த ஒரு எழுத்தாளர் என்ற வகையில்...சேட்டன் பகத்தின் "FIVE POINT SOMEONE " நாவலைத் தழுவி எடுக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குனர்.இதற்கு முன் இவர் எழுதிய நாவல் (One Night @ Call Centre) படம் (Hello) என்னை கவரவில்லை என்றாலும்....


அந்த சந்தோஷத்தைத் தருகிறது 3 Idiots.

வாங்க கதையில் ............... விமானம் எடுக்கப்பட்டு விட்டது. சீட் பெல்ட் போட்டுக் கொண்டிருக்கும் மாதவனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. பணிப்பெண் செல்ஃபோனை ஆஃப் பண்ணச் சொல்லித் திட்டத்திட்ட எக்ஸ்யூஸ் கேட்டபடி பேசுகிறார். பேசி முடித்ததும் வியர்க்க விறுக்க எழுந்து, நிற்க முடியாமல் தடுமாறி விழுந்து மயக்கமாகிவிட, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்படுகிறது.


ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வைத்து, மாதவனை படு ஸ்பீடில் விமானநிலைய வாசல் நோக்கி மருத்துவக்குழு கொண்டு செல்ல கண்விழிக்கும் மாதவன் - எழுந்து - இரண்டு மூன்று சிம்பிள் எக்ஸர்சைஸ் செய்து காட்டி “I AM OK...... நீங்க போகலாம்” என்றுவிட்டு ஓடிவிடுகிறார்.

அங்கிருந்து கிளம்பும் மாதவன், தன் இன்னொரு நண்பன் ஷர்மானையும் அழைத்துக் கொண்டு அமீர்கானைத் தேடி புறப்படுகிறார்கள்.


படம் முழுவதுமே இந்தத் தேடல்தான். க்ளைமாக்ஸில்தான் அமீர்கானைக் காண்கிறார்கள். அதுவரை இவர்களின் கல்லூரி நினைவுகளின் ஃப்ளாஷ்பேக்தான்.

ஒரு நண்பன் விமானத்திலிருந்து இறங்கியும், இன்னொரு நண்பன் மனைவியை விட்டுவிட்டும் இப்படி ஒரு நண்பனைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்களா? இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்று ஒரு இடத்தில்கூட தோன்றவில்லை. அமீர்கானைப் போன்ற நண்பன் கிடைத்தால் இதற்கு மேலும் செய்யலாம்!

இடைவேளைக்கு முன் அமீர்கானைக் கிட்டத்தட்ட நெருங்கிய மாதவனும், ஷர்மானும் போய்ப் பார்க்கும்போது அங்கே ஜாவேத் ஜஃப்ரி அமர்ந்து கொண்டு ‘சொல்லுங்க நான் தான் ரஞ்சோர்தாஸ்’ என்று சொல்ல அதிர்ச்சியடையும் இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் அமீர்கானுக்குப் பதில் ஜாவேத் ஜஃப்ரி இருக்கிறார். அப்படியென்றால் அமீர்கான்?


இடவேளைக்குப் பிறகு சூடுபிடிக்கும் படத்தில் பாருங்கள்...... இறுதிக்காட்சியில் ‘நான் ஜெயிச்சுட்டேன்ல’ என்று அந்த படிப்பாளி நண்பன் சதூர் சொல்லும்போது அமீர்கான் தான் யார் என்பதை வெளிக்காட்டும் காட்சி வரை இந்த சஸ்பென்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் வருகிறது.


ஹிரானி & அபிஜத் ஜோஷி நல்ல சிரிப்பையும், சிரிப்பினூடே சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள். அதுவும் இந்திய கல்வித் திட்டத்தை படம் முழுக்க கேள்விகளால் கிழித்துத் தொங்க விட்டிருக்கும் என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.


கேமரா - முரளிதரன். சிம்லாவை இவ்வளவு அழகாய் நான் பார்த்ததில்லை. படத்தில் உள்ள எல்லா கேரக்டரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சின்னச் சின்ன கேரக்டருக்கும் இயக்குனர் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

அந்த "ALL IS WELL" எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டாலும், பிறந்த குழந்தை அழாமலிருக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்ச்சி... எழுத வார்த்தை இல்லை......

3 IDIOTS - எல்லோரும் பார்க்க / சிரிக்க நிச்சயம் சிறந்த படம்!இந்த வலையுலகில் என்னையும் சேர்த்த எல்லோரும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!


December 20, 2009

வேட்டைக்காரன்- மசாலா வேட்டை (காரம் துக்கல்....உப்பு கம்மி)


மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்-யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.

ரவி (DR.விஜய்) என்கிற போலீஸ் ரவி ஒரு தூத்துக்குடி பையன். +2-வை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் மாதிரி பெரிய போலீஸ் ஆஆ......பீஸர் ஆவது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார். வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார். அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.

இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, 'நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட' என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.

ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார். விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்... வேதநாயகத்தை அழிக்கிறார்... (ஹை... டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)

இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது......

எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம்.

கஷ்டப்பட்டு நடிக்க DR.விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே... இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.

அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.

கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். முடியல!.....டா சாமி

படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம்

முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்!

கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை.

விஜய் ஆண்டனி... பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் 'ஏன் இந்த கொல வெறி' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.
(இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!).

படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம "ஓடு..........ஓடு.......ஓடு........" என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்வதர்கோ...என்னவோ....


ஒரு வேண்டுகோள் : விஜய் இப்போது "காதலுக்கு மரியாதை" போல நல்ல ஸ்கிரிப்ட் தேடிகொண்டிருக்கிறார்..என்று ஒரு செய்தி...யாராவது நல்ல கதை இருந்தால் சொல்லுங்க....பா.....

December 2, 2009

THE OTHERS (2001)-தில்லர் ஒரு புதிய கோணத்தில்****IMDB RATING:7.8/10****ரொம்ப நாளா... பதிவு ஏதும் போட முடியல... உண்மையை சொன்னால் இப்போழுது எல்லாம் படங்கள் பார்ப்பது குறைவு.. இருந்தும் என் பதிவில் போட ரொம்ப நாளாய் எழுத நினைத்த ஒரு படம் ..

நாம் வாழும் வீட்டில் நம் கண்ணுக்கு தெரியாமல் மற்றொரு குடும்பமும் வாழ்ந்து வந்தால்? அதுவும் அவர்கள் அனைவரும் இறந்தவராக இருப்பின்....?

வழக்கமான பேய்ப்படங்கள் போல் அல்லாமல், வெறும் அமைதியை வைத்தே மிரட்டுகிறார் டைரக்டர் Alejandro Amenabar....ரத்தம், கொலை, கொடூரமான மேக்கப், துரத்தும் மர்மப்பேய், இவை எதும் இல்லாமல் நம்மை மிரட்டும் த்ரில்லர் திரைப்படம் "THE OTHERS".

முழுப்படமும் ஒரே வீட்டுக்குள் நடந்து முடிகிறது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்குவதாய் கதை. தன் வீட்டில் வேலை செய்து வந்த பணியாட்கள் அனைவரும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போக, புதிதாக வரும் மூன்று பணியாட்களுக்கு வீட்டை சுத்தி காண்பிப்பதிலிருந்து ...... ஒவ்வொரு அறைக்கும் செல்லும் முன் முன்னிருந்த அறையை பூட்டிவிடுகிறார் Grace. காரணம் அவளின் இரு குழந்தைகள்... Grace-ன் குழந்தைகளுக்கு Photo sensetive அலர்ஜி, எனவே பகல் வேளைகளில் அவர்கள் இருக்கும் அறைகளின் திரைகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். அறைகள் அனைத்தும் பூட்டபட்டே இருக்க வேண்டும். இதனாலேயே படம் முழுவதும் விளக்கு வெளிச்சத்திலேயே நகர்கிறது. ஆரம்பம் முதலே Grace-ன் காரக்டர் சற்று வித்தியாசத்துடனே கையாளப்படுகிறது. அதே போல் வரும் மூன்று பணியாட்கள், சற்று மர்மத்துடனே நடமாடும் ஆட்கள்.

முதல் இருவது நிமிடங்கள் படம் வெகு அமைதி. Anne, Graceயிடம் இந்த வீட்டில் நம்மை தவிர இன்னும் சிலர் இருப்பதாக கூறும்போது தான் படம் சற்று விறுவிறுப்புடன் தொடங்குகிறது. Victor என்ற சிறுவனை தான் அடிக்கடி பார்ப்பதாகவும் அவனுடன் பேசுவதாகவும் சொல்லும் Anne-யை நம்ப மறுக்கிறாள் Grace. பொய் சொல்வதாக தண்டிக்கவும் படுகிறாள் Anne .... Victor அவ்வப்போது Anne-ன் கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கிறான். இது அவனுடைய வீடு, நீங்கள் இந்த வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் தெரியப்படுத்துகிறான். முதலில் Anne சொல்லும் கதைகளை நம்ப மறுக்கிறார் Grace, ஆனால் அதற்க்கு பிறகு வரும் நிகழ்வுகளால், Grace Anne சொல்வது உண்மை தானோ என நம்ப தொடங்குகிறாள்.

Anne தினமும் இவர்களை இந்த வீட்டுக்குள் பார்ப்பதாக நான்கு உருவங்களை ஒரு தாளில் வரைந்து காண்பிக்கிறாள். ஒரு அப்பா,அம்மா மற்றும் சிறுவன் Victor. இவர்களுடன் சூநியிக்காரி போல் இருக்கும் ஒரு கிழவி. யார் அவர்கள் என்ற ஆராய்ச்சியிலும் சிறிது நேரம் இறங்குகிறார் Grace.யார் இந்த நான்கு பேர் ? மூன்று பணியாகளின் மர்மங்கள் ? Grace-ன் வித்தியாசமான கேரக்டரிசம் எதனால்...? - இவைதான் மீதிப் படம்.


படம் நகர நகர, எப்படி முடியுமோ என்று எதிர்பார்ப்பு கடைசி நிமிடங்கள் வரை கூடிக்கொண்டே தான் போகிறது. கடைசியில் படத்தின் முடிவு படு வித்தியாசம்.

படத்தின் மூழுக்கதையும் எழுத வார்த்தைகள் வரவில்லை..நான் பார்த்த தில்லர் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று..படத்தில் குறிப்பிட பட வேண்டிய விஷயங்கள்:

*மொத்தமே ஆறு கேரக்டர்ஸ் தான். இந்த ஆறு கேரக்டர்ஸ் நடிப்பு oowh...குறிப்பாக குழந்தைகள் நடிப்பு.. பிரதான கேரக்டர் Grace-யாக (Nicole Kidman).

*காமெரா மற்றும் படத்தின் பின்னனி இசை படத்தின் உயிர் நாடி என்றே சொல்லலாம். அந்த தனி வீடு, அது அமைந்துள்ள பனி மூட்ட லொகேஷன்,*என்ன படத்தின் சில காட்சிகள் Sixth sense படத்தை நினைவூட்டுக்கிறது.*குழந்தையின் அழுகுரல், பியானோ வாசிப்பது இந்த இரு காட்சிகளும், அற்புதம்.
etc etc. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்...!!