December 30, 2009

3 IDIOTS - A GENIUS MOVIE!

நான் சில நாட்கள் முன் பாத்த ஹிந்தி படங்கள் (Blue, Wanted, London Dreams...etc..etc நீண்ட பட்டியல்......யாவும திருத்தி தரத வகையில்...ரொம்ப நாளைக்கு அப்புறம் வருட இறுதியில் பார்க்கும் ஒரு படம் மனதுக்கு நிறைவாய் அமைவது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!

எனக்கு பிடித்த ஒரு எழுத்தாளர் என்ற வகையில்...சேட்டன் பகத்தின் "FIVE POINT SOMEONE " நாவலைத் தழுவி எடுக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குனர்.இதற்கு முன் இவர் எழுதிய நாவல் (One Night @ Call Centre) படம் (Hello) என்னை கவரவில்லை என்றாலும்....


அந்த சந்தோஷத்தைத் தருகிறது 3 Idiots.

வாங்க கதையில் ............... விமானம் எடுக்கப்பட்டு விட்டது. சீட் பெல்ட் போட்டுக் கொண்டிருக்கும் மாதவனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. பணிப்பெண் செல்ஃபோனை ஆஃப் பண்ணச் சொல்லித் திட்டத்திட்ட எக்ஸ்யூஸ் கேட்டபடி பேசுகிறார். பேசி முடித்ததும் வியர்க்க விறுக்க எழுந்து, நிற்க முடியாமல் தடுமாறி விழுந்து மயக்கமாகிவிட, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்படுகிறது.


ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வைத்து, மாதவனை படு ஸ்பீடில் விமானநிலைய வாசல் நோக்கி மருத்துவக்குழு கொண்டு செல்ல கண்விழிக்கும் மாதவன் - எழுந்து - இரண்டு மூன்று சிம்பிள் எக்ஸர்சைஸ் செய்து காட்டி “I AM OK...... நீங்க போகலாம்” என்றுவிட்டு ஓடிவிடுகிறார்.

அங்கிருந்து கிளம்பும் மாதவன், தன் இன்னொரு நண்பன் ஷர்மானையும் அழைத்துக் கொண்டு அமீர்கானைத் தேடி புறப்படுகிறார்கள்.


படம் முழுவதுமே இந்தத் தேடல்தான். க்ளைமாக்ஸில்தான் அமீர்கானைக் காண்கிறார்கள். அதுவரை இவர்களின் கல்லூரி நினைவுகளின் ஃப்ளாஷ்பேக்தான்.

ஒரு நண்பன் விமானத்திலிருந்து இறங்கியும், இன்னொரு நண்பன் மனைவியை விட்டுவிட்டும் இப்படி ஒரு நண்பனைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்களா? இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்று ஒரு இடத்தில்கூட தோன்றவில்லை. அமீர்கானைப் போன்ற நண்பன் கிடைத்தால் இதற்கு மேலும் செய்யலாம்!

இடைவேளைக்கு முன் அமீர்கானைக் கிட்டத்தட்ட நெருங்கிய மாதவனும், ஷர்மானும் போய்ப் பார்க்கும்போது அங்கே ஜாவேத் ஜஃப்ரி அமர்ந்து கொண்டு ‘சொல்லுங்க நான் தான் ரஞ்சோர்தாஸ்’ என்று சொல்ல அதிர்ச்சியடையும் இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் அமீர்கானுக்குப் பதில் ஜாவேத் ஜஃப்ரி இருக்கிறார். அப்படியென்றால் அமீர்கான்?


இடவேளைக்குப் பிறகு சூடுபிடிக்கும் படத்தில் பாருங்கள்...... இறுதிக்காட்சியில் ‘நான் ஜெயிச்சுட்டேன்ல’ என்று அந்த படிப்பாளி நண்பன் சதூர் சொல்லும்போது அமீர்கான் தான் யார் என்பதை வெளிக்காட்டும் காட்சி வரை இந்த சஸ்பென்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் வருகிறது.


ஹிரானி & அபிஜத் ஜோஷி நல்ல சிரிப்பையும், சிரிப்பினூடே சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள். அதுவும் இந்திய கல்வித் திட்டத்தை படம் முழுக்க கேள்விகளால் கிழித்துத் தொங்க விட்டிருக்கும் என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.


கேமரா - முரளிதரன். சிம்லாவை இவ்வளவு அழகாய் நான் பார்த்ததில்லை. படத்தில் உள்ள எல்லா கேரக்டரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சின்னச் சின்ன கேரக்டருக்கும் இயக்குனர் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

அந்த "ALL IS WELL" எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டாலும், பிறந்த குழந்தை அழாமலிருக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்ச்சி... எழுத வார்த்தை இல்லை......

3 IDIOTS - எல்லோரும் பார்க்க / சிரிக்க நிச்சயம் சிறந்த படம்!இந்த வலையுலகில் என்னையும் சேர்த்த எல்லோரும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!


5 comments:

King Viswa said...

அஷ்வின்,

அருமையான விமர்சனம். நன்றி. இன்றுதான் இந்த படத்தை பார்க்கப் போகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸின் எதிர்காலம் பற்றிய ஒரு சிறப்பு கண்ணோட்டம்

King Viswa said...

சொல்ல மறந்து விட்டேனே, மீ த பேக்.


கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ்
காமிக்ஸின் எதிர்காலம் பற்றிய ஒரு சிறப்பு கண்ணோட்டம்

King Viswa said...
This comment has been removed by the author.
அண்ணாமலையான் said...

நல்ல நண்பன் கிடைக்காமல் நான் இதுவரை தடுமாறிக்கொண்டிருக்கிறேன்..

அஷ்வின் நாரயனசாமி said...

@king viswa

Too much busy in work...sry for the late reply..
மீண்டும் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க... எப்படி இருக்கீங்க நலமா?....

@அண்ணாமலையான்
நான் உங்கள் வலைபூவை தினமும் படிக்க்கும் ஒரு ரசிகன்...உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...தங்கள் என் வலைபூவில் வந்தமைக்கு நன்றி.. மீண்டும் வாருங்கள்...

பிரியமுடன்
அஷ்வின்..