May 27, 2009

WALL-E....

****IMDB RATING: 8.6/10*****


Best Animated Feature Film of the Year
Winner:
WALL·E (2008) - Andrew Stanton

இந்த படத்தை பற்றி நான் சொல்ல வேண்டிதில்லை....நான் இப்படம் வெளிவந்த சில நாட்களில் பார்த்துவிட்டேன், அன்று என் டையிரில் எழுதியதை இன்று என் முதல் பதிவாக பதிக்கிறேன்,அது மட்டும் அல்ல PIXER-films தயரிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் அருமை... அனைத்தும் பார்த்து விட்டேன்... பின் வரும் நாட்களில் எழுதுகிறேன்...

உங்கள் ஆதரவு எப்பவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...

Waste Allocation Load Lifter - Earth Class (WALL-E).


1975ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான ஆபத்தை முதல் காட்சியிலே கன்னத்தில் அறைந்து சொல்கிறது PIXER நிறுவனம். பின்னர் தான் தெரிகிறது, அவை கட்டிடம் அல்ல குப்பைக் குவியல் என்று. மனிதர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை அள்ளியெடுத்து சிறு சிறு சதுரகட்டிகளாக்கி, அவற்றை கட்டிடம் போல அடுக்கி வைப்பது WALL-E என்ற தனியொரு ரோபா. இன்றிலிருந்து 700 வருடங்கள் கழித்து மனிதர்கள் நுகர்வு கலாச்சரத்திற்கும், அதீத தொழில்நுட்பத்திற்கும் அடிமைப்பட்டு இயற்கை வளங்களையும், மனிதத்தன்மையும் இழந்து எந்திரமயமாகியிருக்க,
WALL-E அவர்களை மீண்டும் மனிதர்களாய் மாற்றும் அழகான கவிதை.

தினந்தோறும், குப்பைகளை அள்ளி சீர் செய்யும் போது தென்படும் வித்தியாசமான பொருட்களை தனது தனி அறையில் சேகரிக்கும் பழக்கம் கொண்டது WALL-E. அழிந்து போன உலகத்தின் கடைசி மூச்சாய் முளைவிட்ட சிறு செடி ஒன்றை அவ்வாறு கண்டெடுக்கும் WALL-E, அதை ஷீ ஒன்றில் வைத்து பாதுக்காப்பது அழகு.

அழகிய iPod வடிவத்தில் அதிரடியாய் பூமியை சோதனையிட வரும் ஈவா (நாயகி) எனும் மற்றொரு ரோபோவிடம் காதல் கொள்ளும் WALL-E அதற்கு செடியை பரிசாய் அளிக்கிறது. அச்செடியை ஆசையாய் பெற்றுக் கொண்டதும் ஈவா செயலிழந்து விடுகிறது. ஈவாவை பூமியில் இறக்கிவிட்ட எந்திரம் மீண்டும் அதை எடுத்துச் செல்லும் பொது அதைத் தொடர்ந்து WALL-E செல்லும் போது துவங்குகிறது கதை.


BUY LARGE என்ற நிறுவனம், வாண்வெளியில் பிரம்மாண்டமான விமானம் ஒன்றில் மனிதர்களை குடியமர்த்துகிறது. அங்கே அதீத நவீன வசதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறார்கள். நவீனம் என்றால் அங்குள்ள மனிதர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அந்தரத்தில் மிதக்கும் சொகுசு இருக்கை ஒன்றில் அமர்ந்தபடியே அவர்கள் வேண்டும் பொருட்களை அவர்கள் அருகில் எடுத்துவர ரோபோ பணியாட்கள். முகத்திற்கு நேரே உள்ள Virtual Monitorல் வேண்டியவர்களின் முகத்தை பார்த்தப்டியே பேசிக்கொள்ளலாம். உண்ணும் உணவு, உடையின் நிறம் அனைத்தையும் கூட தேர்வு தீர்மானிப்பது BUY LARGE நிறுவனம் தான். விளைவு மனிதர்கள் உடல் பருமனடைந்து, நடக்கக் கூடத்தெரியாதவர்களாய், ஸ்வ்விம் பூலில் நீந்தத் தெரியாதவர்களாய், கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரியும் நட்சத்திரங்களையும், அண்ட வெளியையும் ரசிக்கத்தெரியாதவர்களாய் கிட்டத்தட்ட ஜடமாய் ஆகியுள்ளார்கள்.
700 வருட விண்வெளி சொகுசு வாழ்க்கையில் மனிதர்கள் மெல்ல மெல்ல பொம்மைகளைப் போல மாறிவருவதை காலவரிசைப்படி தொங்கவிடப்பட்டுள்ள அவ்விமான கேப்டன்களின் புகைப்படங்களில் தெரிகிறது. பழுதடைந்த ஈவாவை சரி செய்யும் போது அதனுள் உயிருள்ள செடியைக் கண்டெடுக்கிறார்கள். முதன்முதலாக செடியைப்பார்க்கும் விமான கேப்டன் தனது கம்யூட்டரிடம் விளக்கம் கேட்டு செடிகளைப் பற்றிய புத்தகத்தைப் பெறுகிறான். புத்தகத்தை எப்படி பிரித்து படிக்க வேண்டும் என்பதைக் கூட அக்கம்யூட்டர் தான் சொல்லித்தருகிறது. செடியைப் பற்றி அறியும் போது, நடனம் என்னும் புது வார்த்தையையும் கேள்விப்படுகிறான். நடனம் என்றால் என்ன என்பதைக்கூட கம்ப்யூட்டர் தான் வீடியோவுடன் விளக்குகிறது. தனது முன்னோர்களின் நடனக் காட்சியைப் பார்த்து வியக்கும் கேப்டன் தன்னால் நடக்கக் கூட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறான். தொடர்ந்து முன்னோர்களைப் பற்றி அறியும் போது, பூமியைக் குறித்தும், தண்ணீர், கடல், தாவரம் இன்ன பிறவற்றை பற்றியும் தெரிந்து கொள்கிறான். இதுவரை, மனித குலம் இழந்த இயற்கையோடு இயைந்த வாழ்வை உணர்ந்து, மீண்டும் தாய்பூமிக்கு திரும்ப முயற்சிக்கிறான். தாயகம் திரும்ப விரும்பும் கேப்டனை அதுவரை அடிமாய் சேவகம் செய்த கம்ப்யூட்டர் அவர்களை பூமிக்கு திரும்பவிடாமல் தன் சுயரூபத்தைக் காட்டுகிறது. பசுமை பூத்த அச்செடியை சாவியாய் கொண்டு அனைவரும் பூமி திரும்ப WALL-Eயும், ஈவாவும் உதவுகிறார்கள்.

பூமி திரும்பும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்தல், மீன்பிடித்தல், வீடு கட்டுதல் என உடல் உழைப்புடன் வாழ்வதைப் பார்க்கும் போது, நாம் அனைவரும் நகரமயமாக்கலின் அபாயத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிளாஸ்டிக், ரசாயனக்கழிவுகள், தொழில்நுட்ப உபகரணங்களின் கழிவுகள் சேர்ந்து பூமியை கொஞ்சம் கொஞ்சமாக குப்பைக் கூடமாக்கி வருகிறது. அதன் அபாயத்தை வெகு அழுத்தமாக, அழகாக கற்பனை கலந்து சொல்லியிருக்கிறது WALL-E. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்குமான இப்படத்தை செம்மையாக எடுத்து சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறது PIXER ......இனி செய்ய வேண்டியது நாமதானே........


My Rating: 10/10

3 comments:

King Viswa said...

அஷ்வின் நாரயனசாமி,

நீங்கள் யாரோ, எவரோ தெரியாது. ஆனால் உங்கள் தளத்தை பார்த்தது முதல் என்னுடைய கருத்துக்களை கூறவேண்டும் என்று ஆசைப் பட்டு தான் அந்த கமெண்ட்'ஐ MSK தளத்தில் இட்டேன்.

உங்கள் வலைப்பூவின் அமைப்பு மிகவும் அழகாக இருக்கிறது. ஒரு நேர்த்தியும் ரசனையும் அதில் மிளிர்கிறது. நீங்கள் (எனக்காகவேணும்) தொடர்ந்து பதிவுகளை இட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

இந்த WALL-E விமர்சனத்தில் எனக்கு பிடித்த விஷயமே, நான் படத்தை எப்படி பார்த்தேனோ, அதே கண்ணோட்டத்தில் எழுதியது போல இருந்தது. அதனால் தான் கமெண்ட் ஆப்ஷன் பற்றி கேட்டேன்.

பிக்சர் படங்களை பற்றி நாள் முழுவதும் பேசலாம், சலிப்பே தட்டாது. அந்த பட வரிசையில் எனக்கு பிடித்தது பைன்டிங் நீமோ. நான் முதலில் பார்த்த பிக்சர் படம் என்பதால் கூட இந்த ஈர்ப்பு இருக்கலாம். பல வருடங்களாக அனிமேஷன் படங்களை பார்க்காமல் இருந்த என்னை மீண்டும் அனிமேஷன் படங்களை பார்க்க தூண்டியது இந்த படம் தான்.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

King Viswa said...

சொல்ல மறந்து விட்டேன். இந்த படத்தின் வெற்றி, பிக்சர் நிறுவனத்தாரை படம் சார்ந்த காமிக்ஸ் ஒன்றையும் வெளியிட தூண்டியது. அந்த காமிக்ஸ் புத்தகம் லேண்ட்மார்க்கில் கிடைத்து, நானும் வாங்கினேன். சற்று மொக்கையாக இருந்தாலும், மேமொரபில்யா தானே?

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்

அஷ்வின் நாரயனசாமி said...

@ King Viswa

///நீங்கள் யாரோ, எவரோ தெரியாது.

Profile-ல பார்த்த தெரியும் நண்பா..நீங்க நினைக்கிற மாதிறி அவ்வளவு பெரிய மனுசன் இல்லை நான்..உங்கள் தளத்தில் எட்டி பார்த்த பின்பு.....

ஆதரவுக்கு ரொம்ப நின்றிங்க...என் வலைத்தளத்தில் வந்தமைக்கு...