****IMDB RATING: (VOL-I)-8.2/10****TOP 250#143***
****IMDB RATING: (VOL-II-8.0/10****TOP 250#233***
சற்றும் ஒரு புள்ளியை கொண்டு 360 டிகிரி ஒரு வலையம் வரைந்து,அந்த வலையத்தை வலைமாக பார்க்கும் தட்டையான மனபாங்கு கொண்ட படைப்பாளிகிளுக்கு நடுவே வேறுகோணத்தில் அந்த வட்டத்தை புள்ளி, புள்ளியாக பிரித்து பார்க்கமுற்படுபவர்களை மனநிலை பிறழ்ந்தவன் என சமுதாயம் முத்திரை குத்தும்.
நாள் முழுதும் நடக்கும் நிகழ்ச்சிகளை மனது அட்டவணைப்படுத்துகையில் சில காட்சிகள் முன்னுக்கு பின்னாக பதியும், காலக்குழப்பம், காட்சிக்குழப்பம் என ஒரு தெளிவான அட்டவணை அமைய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்.அப்படி ஒரு தேர்ந்த புதிரைப்போல மிகுந்த ஆவலை நம்முள் கிளர்த்தும் திறன் கொண்டவை Quentin-னின் படைப்புகள். திரைமொழி அரிச்சுவட்டில் ஒரு திரையில் பல புதிய வார்த்தைகளை, கதைவேறு, களம் வேறு, அனுபவம் வேறு என்று புகுத்திய பெருமை இவருக்கு உண்டு. தன் படைப்புகளுக்கென கட்டமைக்கப்பட்ட படிமங்களுடனே ஒவ்வொரு புதுமுயற்சியையும் தருவதால், பழைய மொந்தை பழைய கள் என ஒதுக்கிவிட முடியாது.
இப்படி பழைய மொந்தை பழைய கள்(ளில்) ஒன்று தான் 2003 மற்றும் 2004-ல் வெளிவந்த KILL BILL VOL I & II.. இரண்டாம் பாகத்தில் கதைக்கான பின்புலனும், முதல் பாகத்தில் அரைவாசி கதையும் சொல்லப்படும் மிகவும் ஆர்வத்திற்குரிய படம்.
முதல் பாகத்தில் மண ஒத்திகை கோலத்தில் கொல்லப்படும் ஒரு பெண், தப்பி பிழைத்து தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் கதை பழிவாங்கல் ஒரு கலையாக, மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம். அறுந்து விழும் கால்கள் கைகள் தலைகள், ரத்தம், கத்தி என படம் ஒருவித வன்முறை உலகில் நமை ஆழ்த்துகிறது.
இரண்டாம் பாகத்தில் அந்த மணப்பெண் யார் எதற்காக கொல்லபடுகிறால் என விரிகிறது. முதல் பாகத்தின் விறுவிறுப்போ, ஈர்ப்போ இந்த படத்தில் இல்லை, எனினும் பார்த்தாக வேண்டிய படம். இந்த படத்தைப் பற்றியோ அல்லது படத்தின் கதையையோ எழுத ஆரம்பித்தால், பக்கம் பக்கமாக எழுத வேண்டிவரும்.
இவரது படத்தில் அவர் கையாலும் அடிப்படை யுத்திகள் என்னை பொறுத்த வரை:
*கேமராக்கோணம் என பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகவும் இயல்பான கோணங்கள் ஆனால் பாத்திரங்கள் வித்தியாசமான கோணங்களில் தென்படுகிறார்கள்.
*கூர்மையான வசனம், இயல்பான மொழியில் பக்கம் பக்கமாக பேசும் பாத்திரங்கள் பார்க்கும் போது நமக்கு எதோ ஒரு நாவல் படிப்பதை போன்ற உண்ர்வு வரும்..
*கதைக்களத்தில் நம்மை மெதுமெதுவாக மூழ்கடிக்கும் அவசரமற்ற கதைநகர்த்தல்.
*பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்.
*ஒருவர் பேசும்போது, பேசுபவரி விட்டு கவனிப்பவரை காண்பிப்பது.
*ஒரு படைப்பிற்கும் அடுத்த படைப்பிற்கும் படிமங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்துவது.
*பழைய இசையின் மீதான் அதீத விருப்பம். எப்போழுதும் கார், பப்’களில் வழியும் jAZZ, Country types.
இவரது மற்ற படைப்புகள்: Pulp Fiction, Resrvior Dogs, Jackie Brown, Death Proof & Inglourious Basterds.
மனதை உருக்கும் படங்கள் ஆயிரம் இருக்கிறது. வெவ்வேறு மொழிகளில், அவரவர் கலாச்சாரத்தை முன்வைத்து அவை செல்லும் கருத்துக்கள் ஆயிரம் இருக்கலாம். Quentin-னின் படைப்புகள் அத்தகையன அல்ல. நிச்சயம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் ஒரு மிக சிறந்த சினிமா அனுபவத்திற்காக..
திரையுக்தி, ஒருவித அழகியல் வன்மம், அதிர்ச்சி எனும் பிரிவிகளில் தவிர்க்க முடியாத இயக்குனர். அவரின் அனைத்து படங்களையும் நீங்கள் ரசிக்கலாம். திரையனுபவத்தின் இன்னொரு பரிமாணம் Quentin Tarantino
My Rating: 8.5/10