October 20, 2009

Eternal Sunshine of the Spotless Mind - நினனவுகளை தொலைத்தல்****IMDB RATING: 8.5/10****

நாம் எல்லோரும் எதோ ஒரு தருணத்தில் இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம், இந்த வாழ்க்கையை
நாம் எல்லோரும் எதோ ஒரு தருணத்தில் இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்,......

இந்த வாழ்க்கையை நாம் எப்போழுது வேண்டுமானலும் அடித்து திருத்தி எழுத முடியுமென்றால்? நினைவுகளை நம்மால் அழிக்க முடியுமானால்? மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தால்?...... அப்படி ஒரு களத்தை கொண்டு 2004-ல் வெளிவந்த திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற திரைப்படம் தான் Eternal Sunshine of the Spotless Mind.


Joel & Clementine-னும் இருவேறு துருவங்கள். இருவரும் தற்செயலாக சந்தித்து காதல் வயப்படுகின்றனர். சீராகச் செல்லும் அவர்களது உறவில் சிறு சிறு ஊடல்கள். சண்டைகள். எதற்குமே எளிதில் உணர்ச்சி வசப்படும் Clementin Joel-லுடனான உறவைத் துறக்க நினைக்கிறாள்.

Lacuna என்ற நிறுவனம் மூளையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளை மட்டும் அழிப்பதை அறிந்த Clementine அவர்கள் மூலமாக Joel குறித்த நினைவுகளை அழித்துவிடுகிறாள்.

இதை நண்பர்கள் மூலம் அறியும் Joel தானும் அதே நிறுவனத்தின் மூலமாக Clementine-னின் நினைவுகளை அழிக்கச் செல்கிறான். தற்காலத்தில் இருந்து ஆரம்பித்து கடந்த கால நினைவுகள் அழிக்கப்படுகின்றன. அவன் Clementine-னுடன் கழித்த இனிமையான பொழுதுகள் அவன் ஆழ்மனதிற்கு தெரிகின்றது. அவன் Clementine-னை முழுமையாக இழக்கப் போவதை உணர்கிறான். அவளின் நினைவுகளை அழியாமல் காப்பதற்கு முயல்கிறான்.

அவன் அதில் வென்றானா, கடந்த கால நினைவுகள் அழிந்த க்ளெம்ன்டைனும் Joel -லும் மீண்டும் இணைவார்களா?........

படத்தில் Joel -Clementine-ன் காதலைத் தவிர Lacuna நிறுவனத்தின் தலைமை மருத்துவருக்கும் அதில் பணிபுரியும் மேரிக்கும் இடையேயான உறவு ஒரு சிறுகதை. இது சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரைக்கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வரும் கிளைக்கதை.

அதேபோல் Clementine-னின் நினைவுகளை அழித்த Patrick அவள்பால் ஈர்க்கப்பட்டு Clementine Lacuna நிறுவனத்திடம் ஒப்படைத்த Joel -லின் அன்பளிப்புகளைக் கொண்டே அவளது அன்பைப் பெற முயற்சிப்பது சுவாரசியம்.


என்னை மன்னிச்சுடுங்க!.....இந்த படத்தின் முழுக்கதையும் கூறிவிட்டால் படம் பார்க்கும்போது அடுத்தடுத்த காட்சிகள் தரும் ஆச்சரியங்களைத் தவறவிடக்கூடும்.

கதாநாயகன் Joel-யாக Jim Carrey நடித்திருக்கிறார். Jim Carrey -யின் வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து வெகுவாக மாறுபட்ட Joel கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞனாகவும் நினைவுகள் அழிக்கப்படும்போது அதை தடுத்து நிறுத்த துடிக்கும் ஆழ் மனதின் மூலமாக Clementine-னின் நினைவுகளை அசைபோடும் போதும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

Kate Winslet Clementine-னாக நடித்திருக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வேகமாக பேசுவதிலும் முகபாவங்களை சட்டென மாற்றுவதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Kirsten Dunst, Elijah Wood, Mark Ruffalo ஆகியோரும் நடித்துள்ளனர்.

காலத்தில் முன்பின்னாக செல்லும் காட்சியமைப்புகள் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. Clementine கதாபாத்திரத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர் தலைமுடி நிறத்தையும் மாற்றிக்கொள்வது போல் அமைத்திருப்பது காட்சி நடக்கும் காலத்தை எளிதாக அறிய உதவுகிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் திரைக்கதையில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்களும் நம்மைப் படத்துடன் ஒன்றவைக்கின்றன.

ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படம் குறித்து எழுத நினைத்து ஆரமிக்க இந்த படம் குறித்த நினைவுகள் என்னை கட்டிப்போட்டு விடுகின்றன.

நினைவுகளை அழிப்பது குறித்தும், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்தும் காதல் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் குறித்துமான சிந்தனைகள் மனதை ஆட்கொள்கின்றன. உலகில் யாராலும் எளிதில் தீர்க்க முடியாத புதிர் மனித மனம். அதை விடக் கடினமான புதிர் காதல் தான் இல்லையா?.......

3 comments:

Saravana Kumar MSK said...

நான் எழுதணும்ன்னு நெனச்சிட்டே இருந்தேன். Anyway, thanks.. :)

Saravana Kumar MSK said...

செம படம். Jim Carrey's மற்ற படங்களையும் பாருங்க. குறிப்பா Truman show, Man on the moon..

அஷ்வின் நாரயனசாமி said...

@சரவணன்
///முதன் முறையாக என் வலைத்தளத்தில் உங்கள் கருத்துகளை பார்க்கிறேன்...
உங்கள் கருத்துகளை பார்த்த எனக்கு மிகவும் சந்தோஷ்ம்.... வந்தமைக்கு மிக்க நின்றி.. மிண்டும் வருவீர்கள் என நம்புகிறேன்.

நட்புடன்
அஷ்வின்