July 25, 2010

CHILDREN'S OF HEAVEN (1997)



நல்ல படம் எடுக்க லட்சம் லட்சமாக பணம் வேண்டுமென்று யார் சொன்னது?? ஒரு ஜோடி ஷூ போதுமென்பது மஜித்தின் வாதம்!

உலகதிரைப்பட பிரியர்களின் பட்டியலில் முக்கிய இடம்பெறும் தலைசிறந்த இயக்குனர். இவரது திரைப்படங்களில் இது தான் தேவையென்று என்ற வரையறைக்குள் அடங்காமல் ஒரு நிகழ்வை, சராசரி மனிதனின் வாழ்க்கை, அவன் வாழ்வின் ஒரு சில நாட்கள், சில மணிதுளிகளை அப்படியே சொல்லுவது இவரது பாணி. இவரது திரைப்படங்கள் வாழ்வின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை சொல்லும் நகைசுவையோடு கூடிய கதைகளே மேலும் சொல்ல போனால்.... இவரது பல திரைப்படங்கள் உலக பிரசத்தி பெற்றவை

இந்த திரைப்படம் 95 நிமிடங்கள் மட்டுமே ஓடினாலும், நினைவில் அழுத்தமாக இடம் பிடிக்கிற படம். நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று எனக்கு பிடித்தமான நான் கண்டு ரசித்த முதல் வேற்று மொழி திரைப்படம் Children of heaven இந்தப்படத்தை பற்றி பலர் எழுதியிருந்தாலும் நானும் எழுத வேண்டும் என்ற சின்ன ஆசை.

சரி படத்திற்கு வருவோம்,

அழகான பிங்க் நிற ஷூ ஒன்றை தைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். மீண்டும் அணிவதற்கு ஏதுவாக அதை மாற்றுகிறார் அதை பெற்றுக் கொண்டு புறப்படுகிறான் பத்து வயது இருக்கும் அலி.

உருளைக்கிழங்குகள் வாங்க காய்கறிக் கடைக்கு வெளியே ஷூ இருக்கும் தன்னுடைய பைகளை வைத்து விட்டு செல்கிறான். காய்கறிக்கடைக்கிறார் இதற்கு மேல் கணக்கில் வைத்துக் கொள்ள முடியாதென அடுத்த முறை பணத்தை கொடுக்குமாறு அலியிடம் சொல்கிறார்.

அழுகிய காய்கறிகளை அள்ளிச் செல்லும் தள்ளுவண்டி அங்கு வருகிறது. தவறுதலாக அந்த ஷூ இருக்கும் பை எடுத்துச் செல்லப்பட்டுவிடுகிறது. அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லுவதாக கூறிவிட்டு வெளியே வந்தால், ஷூக்களை காணவில்லை.., தேடிப் பார்க்கையில் தவறுதலாக காய்கறி கூடைகளை கீழே தள்ளிவிட காய்கறிக் கடைக்காரர் அவனை அங்கிருந்து துரத்திவிடுகிறார்.

வேகமாக வீட்டுக்கு ஓடுகிறான் அலி. தெருவில் நுழையும் போதே அவர்கள் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு அம்மாவை சத்தம் போட்டுக்கொண்டிருப்பது தெரிகிறது. வீட்டின் உள்ளே அவனது ஆறு வயது தங்கை சாரா சில நாட்களுக்கு முன்னால் பிறந்த தம்பியை தூங்க வைத்துக்கொண்டிருக்கிறாள். தயங்கி தயங்கி அவளிடம் ஷூக்கள் தொலைந்ததை சொல்கிறான். அடுத்த நாள் தான் பள்ளிக்கு போகமாட்டேனென அழுகிறாள்.

அம்மாவிடம் இதை சொல்ல வேண்டாமென கெஞ்சுகிறான்.ஷூக்களை எப்படியும் கண்டுபிடித்துவிடுவதாக கூறுகிறான்.ஷூக்களை மீண்டும் தேட செல்கிறான்.

அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்று தெரிந்தும் அவளுக்கு எந்த உதவியையும் அலி செய்வதில்லை என்று அப்பாவுக்கு கோபம். அலியும் சாராவும் அமைதியாக வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சாரா யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு,

“நாளைக்கு நான் பள்ளிக்கு எப்படி செல்வது?” என்று நோட்டில் எழுதி அலியிடம் காண்பிக்கிறாள். அப்பா அம்மாவுக்கு தெரியாமல் இப்படி எழுதியபடி அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இரானில் பெண்களுக்கு அதிகாலை முதல் மதியம் வரையும், ஆண்களுக்கு மதியம் முதல் மாலை வரை பள்ளி வகுப்புகள் நடைபெறும். ஆக, சாரா காலையில் அண்ணனுடைய ஷூவை அணிந்து கொண்டு பள்ளிக்கு போவதாகாவும், பள்ளி முடிந்ததும் வழியில் காத்துக்கொண்டிருக்கும் அண்ணனிடம் ஷூக்களை தந்துவிடுவதாகவும் முடிவு செய்கிறார்கள். இப்படியாக அப்பா அம்மாவுக்கு தெரியாமல் சமாளிக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.இரு வெவ்வேறு கோடிகளில் இருக்கிறது இருவரின் பள்ளிகளும். பள்ளி முடிந்ததும் . வழியில் அண்ணன் காத்துக்கொண்டிருக்க மூச்சு வாங்க ஓடுகிறார்கள். யாருமில்லாத சந்து ஒன்றில் காத்திருக்கும் அலியும் அவளும் ஷூக்களை மாற்றிகொண்டு ஒரு வார்த்தை பேசாமல் எதிர் எதிர் பக்கம் ஓடுகிறார்கள் இருவரும்.

சில நாட்கள் இப்படியே ஒடுகிறது. ஒரு நாள் காலையில் பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் நின்றபடி தன் ஷூவையும் மற்றவர்களில் ஷூக்களையும் ஏக்கமாக பார்க்கிறாள் சாரா. வரிசையாக ஒவ்வொரு ஷூவாக பார்த்தபடி வருகையில் கண்ணில் படுகிறது அந்த பிங்க் ஷூ. இடைவேளையில் சாரா வெளியே வந்து அந்த மைதானம் முழுக்க இருக்கும் குழந்தைகளின் கால்களை பார்த்தபடி இருக்க ஒரு சிறுமி பிங்க் நிற ஷூ-வை அணிந்து இருக்கிறாள்.அவள் பெயர் ரோயா, இருவருக்கும் இடையே மலர்கிறது நட்பு.

வீட்டின் ஏழ்மையை அத்தனை சிறு வயதில் புரிந்துகொண்டு இந்த இருவரும் ஒரு ஜோடி ஷூவிற்காக படும் அவஸ்தைகளை கவிதைக்கு உரிய அழகோடு விவரிக்கிறது படம்!

ஒரு நாள் அப்படி அவள் ஓடுகையில் ஒரு ஷூ சாலையோர கால்வாயில் விழுந்து அடித்து கொண்டு செல்ல, சாரா அதை துரத்தி கொண்டு செல்லும் காட்சி நான் இதுவரை பார்த்திலேயே மிகச் சிறந்த காட்சி! கிழிந்த காலணியுடன் ஓடி பந்தயத்தில் வென்ற சிறுவனின் ரணப்பட்ட கால்களை, அவனது காயங்களை மீன்தொட்டியிலுள்ள மீன்கள் மெல்ல கடிப்பதுபோல அமைத்திருப்பார் சினிமாவில் கவிதை சொல்ல முடியும் என்பதற்கு அந்த க்ளைமாக்ஸ் அழுத்தமான உதாரணம்!

ஏழ்மையை இத்தனை அழகாக சொல்ல முடியுமா? அத்தனை அழகான சாராவும் பொறுப்பான அண்ணனாக அலியும், .சட் சட்டென சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும், சாமர்த்தியமாக ஷூ இல்லாமல் சமாளிப்பதும் அத்தனை அறிவும் அழகும் அக்குழந்தைகள்! உடம்பு முடியாத அம்மாவுக்கு உதவுவது, கஷ்டப்படும் அப்பாவிடம் ஷூ கேட்கக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளும் சாகசங்களென, தலைப்புக்கு ஏற்ப “CHILDREN'S OF HEAVEN”.

2 comments:

உலக சினிமா ரசிகன் said...

நான் உலக சினிமாவுக்குள் புகுந்ததே இப்படம் பார்த்துதான் .எளிமையான உத்தியில் வலிமையான கருத்துக்களை சொல்வதில் மன்னர் மஜிதி

அஷ்வின் நாரயணசாமி said...

@ உலக சினிமா ரசிகன்
மிக்க நன்றி... மீண்டும் வாருங்கள்...