September 9, 2011

House of Sand and Fog (2003)- 'சொந்த வீடு' என்பதே கனவாகிப்போன குடும்பங்களின் கதைஇப்போழுதுதான் நேரம் கிடைத்தது.. உங்களை சந்திக்க....

ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் . நமது வாழ்க்கையும கூட ஒரு விசித்திர நாவல் என்றே தோன்றுகிறது.

House of Sand and Fog அதன் மற்றுமொரு அத்தியாயம்.

குடிபழக்கத்தால், மனம் உடைந்து இருந்து மீண்டு வரும் Kathy . வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியின் உச்சத்தில் இருப்பவள். அவளுக்காக தந்தை விட்டுச் சென்ற வீடு, வரி செலுத்தாத காரணத்திற்காக ஏலம் விடப்படுகிறது.

ஓய்வு பெற்ற ஈரானிய இரானுவ அதிகாரியான Behrani அந்த வீட்டை வாங்குகிறார். ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிய வீட்டை மேம்படுத்தி நல்ல விலைக்கு விற்க நினைக்கிறார். கடற்கரையோரம் இருக்கும் அந்த வீடு அவருக்கு ஈரானில் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை நினைவுபடுத்துகிறது. ஆதலால்  மனைவி &மகனுடன் அந்த வீட்டுக்கு குடிவருகிறார்.

வீட்டை இழந்ததை வெகு தாமதமாக உணரும்  Kathy  வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறாள். அது தன் தந்தையின் வீடென்றும் அதை விட்டால் தனக்கு வேறெதுவும் இல்லையென்றும் அரசாங்கத்தின் குளறுபடியால் ஏலம் விடப்பட்டதாகவும் கூறி காலி செய்ய மறுக்கிறாள்.

தன் சேமிப்பு முழுவதையும் வீடு வாங்க செலவிட்ட Behrani  அவளுடன் சண்டையிடுகிறார். தான் வீட்டை வாங்கியதற்கு ஆதாரங்களைக் காட்டி அவளை வெளியேறச் சொல்கிறார்.

Lester  போலீஸ்காரர் Kathyயின் மேல் ஈர்க்கப்பட்டு அவளுக்கு உதவுகிறார். Behrani யை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார். குடும்பத்தினரை  அறையில் அடைத்து வைத்து மிரட்டுகிறார்.


இறுதியில் Behrani அரசாங்கத்திடம் வீட்டை திருப்பிக்கொடுத்து தான் கட்டிய பணத்தை வாங்கி Kathyயிடம் கொடுத்துவிடுவதாயும் தன் பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்குமாறும் ஒரு தீர்வைச் சொல்கிறார்.

அரசு அலுவலகத்துக்கு செல்கையில்  எதிர்பாராத சமயத்தில் Behrani மகன் Lester துப்பாக்கியைப் பறித்து தங்களை விட்டுவிடுமாறு மிரட்டுகிறான். இதை கண்ட அங்கு வரும் காவலாளிகள் Behrani   மகனை சுட்டுவிடுகின்றனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறக்கிறான்.

Lester  போலீஸிடம் அவருடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் குற்றத்தை ஒத்துக்கொள்கிறான். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

மகனை இழந்த அதிர்ச்சியில் வீடு திரும்பவரும் Behrani தன் மனைவிக்கு தேநீரில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு, இரானுவ உடை அணிந்து முகத்தை பாலித்தீன் பையால் மூடி மூச்சு முட்டி தற்கொலை செய்துகொள்கிறார்.


வீட்டுக்கு வரும் Kathy அவர்கள் இறந்துகிடப்பதைப் பார்த்து உடைந்து அழுகிறாள்.

இறுதியில் வரும் போலீஸ் அது அவளுடைய வீடா எனக் கேட்க அவள் "இது என்னுடைய வீடு இல்லை" எனக் கூறி சென்றுவிடுகிறாள். 

யாருக்குமற்றதாய் அந்த வீடு அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறது.

தான் செய்வது தவறென உணர்ந்தாலும் குற்றவுணர்ச்சி தடுத்தாலும்  இழந்த தன் வாழ்வை மீட்கப் போராடும் Kathy , புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை எதிர்நோக்கும் Behrani, ......என இரு கதாபாத்திரங்களுக்கிடையேயான போராட்டம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்களின் மேலான பச்சாதாபம் படம் முடிகையில் எந்த உருவமும் கொள்ளலாம். அதுவே இந்த படத்தின் சிறப்பும் கூட.இறுக்கமான காட்சிகள் காட்சிகளுடன் ஒத்துப்போகும் பின்னணி இசை நம்மை கதையுடன்  ஒன்ற வைக்கின்றன. .


 பி.கு: மகிழ்வான தருணங்களில் பார்ப்பதற்கு அல்ல....

5 comments:

Kumaran said...

ரொம்ப நல்ல விமர்சனம்.தொடர்ந்து உங்கள் எழுத்துகளை படித்து வருகிறேன்.வாழ்த்துகள்.நன்றி

கருந்தேள் கண்ணாயிரம் said...

வெல்கம் பேக். கதை நன்றாக இருந்தது. இதுவரை கேள்விப்படவேயில்லை. நம்மூரில் விசு எடுத்த சில பழைய படங்களில் இந்தக் கரு லேசாகத் தொடப்பட்டிருந்தாலும், அவை பயங்கர நாடகத்தனமாக இருக்கும். ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட படங்கள் வருவது அரிதுதான். அவசியம் பார்த்துவிடுகிறேன். keep writing :-)

அஷ்வின் நாரயணசாமி said...

நன்றி குமரன்... தொடர்ந்து வாருங்கள்..

அஷ்வின் நாரயணசாமி said...

நீங்கள் பார்க்கவில்லை என்றால் ஆச்சிரியம் தான் (Rajesh) .கண்டிப்பாக பாருங்கள்.. நன்றி வந்தமைக்கு... மீண்டும் எழுத தொடங்கிவிடுகிறேன்..

arul said...

arumai