October 6, 2009

ஈரம் - சமூக செய்தியோடு ஒரு திர்ல்லர்..


தமிழில் சமிபத்தில் நான் கண்ட மெகா படங்கள் எல்லாம் என்னை கவிழ வைக்க.....சிறிய செலவில் கதையை மட்டும் நம்பி வெளிவந்த எனக்கு பிடித்த படங்கள் நாடோடிகள், சுப்பிரமணியபுரம், யாவரும் நலம்,......இப்போது இந்த பட்டிலில் இடம் பிடித்த படம் தான் "S" பிக்ச்சரிலிருந்து வெளிவந்திருக்கும் "ஈரம்"தமிழில் மீண்டும் ஒரு தில்லர்.

சிந்து மேனன் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.........

கள்ள காதல் தெரிய வந்த அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டதாக என்று அப்பார்ட்மென்ட் அக்கம் பக்கத்தினர் முதல், சிந்துவின் கணவன் 'நந்தா' வரை நம்புகின்றனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் அசிஸ்டென்ட் கமிஷனர் 'ஆதி'. சிந்துவின் முன்னாள் காதலன். சிந்து இவரது முன்னால் காதலி என்பதால் இவர் கொஞ்சம் அதிகமா அக்கரை எடுத்து கொள்கிறார்.


பின்பு அந்த அப்பார்ட்மென்ட்டில் இருக்கும் சிலரும் தொடர்ந்து சாக தொடங்க, போலிசின் கவனம் தீவிரமாகிறது. எல்லா மரணத்திலும் இருக்கும் ஒரே தொடர்பு தண்ணீர். படம் மரணங்கள், விசாரணை, சிந்துவை திருச்சியில் கல்லூரியில் படித்த போது காதலித்த ஆதியின் நினைவுகள் என்று மாறி மாறி அழகாய் செல்கிறது.

ஒரு கட்டத்தில், இந்த மரணங்களுக்கு காரணம் "தண்ணீர்" என்னவென்பதை ஆதி அறிகிறார்.
என்ன நடந்தது? என்ன காரணம்? "Invesgation Begins".......

படத்தில் எனக்கு பிடித்ததே படத்தை குளிர்ச்சியா அழகா காட்டுது. மேலும் படத்தின் சுவாரஸ்யம் கெடாமல் படத்தை கொண்டு சென்றது.படத்தின் பின்னனி இசையும், ஒளிபதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டெக்னிக்கலா நல்லா இருக்கு.

படத்தின் மிக முக்கியமான கேரக்டர் தண்ணீர். அதுவும் செமையா இருக்கு படம் முழுதும். நாயகன் ஆதி செம ஸ்டைலா இருக்கிறார். நல்லாவும் நடிச்சிருக்கிறார். நந்தா திரையில் காதல் & நகைச்சுவை பார்த்த எனக்கு இதில் அழுத்தமான நடிப்புடன் கொஞ்சம் வித்தியாமாக தெரிகிறார்.

சிந்து மேனன், சரண்யா இவங்களும் நல்லா பண்ணி இருக்காங்க. (என்னை பொறுத்த வரையில் சிந்து இந்த ப்டத்தில் கொஞ்சம் அழகாய்.......!)

படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள், அதில் ஒன்று தீம் Music. இருக்கும் 'தரை இறங்கிய' மிக அழகான வரிகளை கொண்ட மிக அழகான பாடல்.

படத்தின் சில குறைகள் இருக்கு. படத்தின் நீளம் போன்றவை. ஆனா மேக்கிங் அதை மறைக்கிறது. சில கிளிஷே காட்சிகளை தவிர்த்திருந்தாலும், திர்ல்லர் படத்தில் அப்பார்மேன்ட்டை கீழிருந்து மேலாக எடுத்து போன்ற கிளிஷேக்களையும் தவிர்த்திருந்த்திருக்கலாம்.

படத்தை இன்னொரு பாதையில் பார்த்தால்........

பெண்களுக்கு எதிரான சமூக அவலத்தை படமாக்கி இருக்கிறார்கள். மேலும் இன்றைய நகர கலாச்சாரத்தில் எங்கோ நடக்கும் சில தப்புகளுக்கு, சில அப்பாவி பெண்களும் தவறுதலாக பலியாகின்றனர் என்பதையும்.... இந்த நுகர்வு கலாச்சாரத்தில் மனிதர்களின் குணங்கள் பற்றியும் பேசுகிறது "ஈரம்"- மனதில் ஈரம் இல்லாத மனிதர்களுக்காக.......


My Rating : 8.5/10

September 27, 2009

மெமண்டோவிலிருந்து.....கஜினிக்கு (எனது பயணம்)
















எல்லோருக்கும் தெரிந்த செய்தியாக இருந்தாலும்....ஏனோ இப்டத்தை பற்றி எழுதனும் தோனுச்சு....என் மனசுல....

"மெமண்டோ” - கிறிஸ்டோபர் இயக்கத்தில், 2000-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான. இந்தப் படத்தினை தழுவி, முருகதாஸ் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் “கஜினி”.

நினைவுகள் மறப்பது என்ற பொதுவான அம்சம் இந்த இரண்டு படங்களிலும் இருந்தாலும், கதை சொல்லிய விதத்தில், இரண்டு படங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.


தலையில் பலமாக அடிபட்ட கதாநாயகனால், புதியதாக நினைவுகள் எதையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை. பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை, அந்த பதினைந்து நிமிடங்களில் நடந்த அனைத்தும் மறக்க, மீண்டும் புதிய நினைவுகளுடன் அடுத்த பதினைந்து நிமிடங்களை எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. இந்த நிலையிலும், தனது மனைவியை கொன்றவனின் முகம் மட்டுமே நினைவினில் இருக்க, அவனை பழிவாங்கும் நோக்கத்தில் கதாநாயகன் போராடுவதுதான் இரண்டு படங்களின் கதை.

ஆனாலும், கதை சொன்ன விதத்தில் மெமண்டோ பல படிகள் கஜினியை விட மேலே நிற்கிறது. எப்போதும் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி இப்படி பார்த்த நமக்கு, கடைசி காட்சியில் ஆரம்பித்து முதல் காட்சியை நோக்கி கதையைக் கொண்டு செல்கிறது மெமண்டோ.
தவிர, ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யும் போது, தமிழுக்கு ஏற்ப கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பார் இயக்குனர் முருகதாஸ். இந்த மாற்றங்கள்தான் கஜினியின் வெற்றிக்குக் காரணமென நான் நினைக்கிறேன்.

•திரைக்கதை சொல்லும் பாணி-
ஒரு தமிழ் படத்தின் திரைக்கதை எவ்வாறு இருக்க வேண்டுமோ, அதன்படி கஜினியில் திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர். ஒரு புள்ளியில் ஆரம்பித்து, முற்றுப் புள்ளியை நோக்கி நகரும் வழக்கமான பாணிதான். மெமண்டோவைப் போல திரைக்கதையை இடியாப்பச் சிக்கல் ஆக்கியிருந்தால் படம் பப்படம் ஆகியிருக்கும்.

•சூர்யா-
அசின் காதல் காட்சிகள் - தமிழில் இது ஒரு குறிப்பிடத்தக்க அழகான மாற்றம். ஆங்கிலத்தில் காதல் காட்சிகளென்று எதுவும் கிடையாது. ஆனால் தமிழில் இரண்டு மூன்று டூயட்டுகள் இல்லையென்றால், படம் ஓடுவது கடினமாயிற்றே. அதனால் அசின் அறிமுகம். ஆனால் அந்தக் காட்சிகளும், "சுட்டும் விழி சுடரும்" படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

•வில்லன்-
தமிழ்க் கதாநாயகர்கள் அடித்து வீழ்த்த வில்லன்கள் தேவை (விஜய் போன்ற கதாநாயகர்களுக்கு குறைந்த பட்சம் 50 பேராவது தேவை!).கஜினியிலும், ஒன்றல்ல, இரண்டு வில்லன்கள். இப்பத்தின் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. அதிலும் இறுதி சண்டைக் காட்சியில் தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்பாக செய்திருந்தனர். ஆனால், மெமண்டோவில் சண்டைக்காட்சிகளே இருக்காது.

•மசாலாப் பாட்டு-
'சி' வகுப்பு ரசிகனையும் திருப்திப் படுத்த வேண்டுமே, அதற்காக நயன்தாராவும், அந்த ஒரு பாட்டும். இந்த மாதிரியான பாடல்களை வைக்க மட்டும் தமிழ் இயக்குனர்களுக்கு எப்படியாவது ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.
 
தமிழ்ப் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த காலங்களிலும், பத்திரிக்கைகளில் 'தமிழ் மசாலாத்தனங்கள் நிறைந்த படம்' என்று வரும் போது, பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரிந்ததில்லை. ஆனால், இப்போது மற்ற மொழிப் படங்களை பார்க்க ஆரம்பிக்கும் போதுதான் 'தமிழ் மசாலா'வின் அர்த்தம் தெரிகிறது. :) இப்படி, தமிழ்ப் படங்களுக்க்காக, தன் சுயத்தை இழந்த நல்ல திரைக்கதைகள் ஏராளம்.
 
இவ்வாறு திரைக்கதையில் வித்தியாசம் காட்டிய மற்ற தமிழ் படங்கள் ஆய்த எழுத்தும், விருமாண்டியும் ஓரளவுக்கு வெற்றி பெற்றன.


MY Rating: 8 / 10 (Memento)

September 8, 2009

Casablanca - 1942 (காலத்தை வென்ற காதல் / காவியம்)




எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை........உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் இந்த திரைப்படம்

Humphrey Bogart நடிப்பு- வசன உச்சரிப்பு, Ingrid Bergman அழகு, வசனங்கள், இனிமையான பின்னணி இசை, பாடல்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் - Casablanca திரைப்படத்தைப் பரிந்துரைக்க இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.


இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள Casablanca என்ற ஊரில் நடக்கும் கதை.

புரட்சியாளர்களும் பொதுமக்களும் Casablanca வழியாக, போலி விசா மூலமாக ஜெர்மன் நாசி படைகளிடமிருந்து அமெரிக்காவிற்கு தப்பிக்கிறார்கள். விக்டர் ஜெர்மனிக்கு எதிராக கலகம் செய்யும் புரட்சியாளன். மனைவி இல்சாவுடன் (Ingrid Bergman) அமெரிக்கா தப்பிச் செல்ல கேசபிளாங்கா வருகிறான். ஆனால் ஜெர்மன் இராணுவ அதிகாரி உள்ளூர் காவல் அதிகாரி மூலமாக அவர்களுக்கு விசா கிடைக்காமல் தடுக்க முயல்கிறார். ஒரு தரகன் மூலமாக போலி விசா வாங்குவதற்கு ரிக் (Humphrey Bogart) நடத்தும் கஃபே-விற்கு வருகிறார்கள். அந்த தரகன் விசா பத்திரங்களை பாதுகாப்பிற்காக ரிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வரும்போது போலீசாரால் கொல்லப்படுகிறான்.



ரிக் இல்சாவின் முன்னாள் காதலன். புரட்சியாளனான ரிக், சில வருடங்களுக்கு முன் இல்சாவை பாரீஸில் சந்திக்கிறான். ஏற்கனவே விக்டரை மணந்த இல்சா, விக்டர் போராட்டத்தில் இறந்துவிட்டதாக தகவலறிந்து துக்கத்தில் இருக்கிறாள். ரிக்-கும் இல்சாவும் காதல் வயப்படுகிறார்கள். பாரீஸை ஜெர்மன் ரானுவம் கைப்பற்றிய நாளில் ரிக்-கும் இல்சாவும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் விக்டர் உயிருடன் இருப்பதாக இல்சாவிற்கு செய்தி வருகிறது. ரிக்கைப் பிரிந்து விக்டரைத் தேடிச் செல்கிறாள் இல்சா. அவளைக் காணாத ரிக் கேசபிளாங்காவிற்கு தனியாகக் கிளம்பி வந்து கஃபே நடத்துகிறான். அங்கிருந்தபடியே போராளிகளுக்கும் மறைமுகமாக ஆதரவளிக்கிறான்.பல நாட்களுக்குப் பிறகு கஃபேயில் சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் ரிக்-கும் இல்சாவும் அதிர்ச்சியடைகிறார்கள். விக்டரும் இல்சாவும் தப்பிச் செல்லத் தேவையான விசா பத்திரங்கள் ரிக் வசம் உள்ளன. விக்டரும் இல்சாவும் பத்திரமாகத் தப்பிச் செல்வார்களா, ரிக்-இல்சா மீண்டும் இணைவார்களா, ஜெர்மன் இராணுவ அதிகாரியால் விக்டருக்கும் ரிச்சர்டிற்கும் இருக்கும் ஆபத்து நீங்குமா என்பதை வெள்ளித் திரையில் காண்க.



முக்கோனக் காதல் கதைகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறத்தக்க அளவு மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் Casablanca. அதே நேரத்தில் இதை காதல் படம் என்று வகைப்படுத்தவும் முடியாது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாஜிப்படைகள் செய்த கொடுமைகளையும், பொதுமக்கள் பட்ட அவதிகளையும், புரட்சியாளர்கள் சந்தித்த போராட்டங்களையும் வசனங்கள் மூலமாகவும் சிறுசிறு கதாபாத்திரங்கள், ரிக் நடத்தும் கஃபேயில் நடக்கும் காட்சிகள் மூலமாகவே உணர்த்தியிருப்பார்கள்.

அமெரிக்கா தப்பிச் செல்ல விசா வாங்குவதற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராய் இருப்பதும், ஜெர்மன் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தங்களை ஆங்கிலேயர்களாகக் காட்டிக்கொள்ள அரைகுறை ஆங்கிலம் பேசும் தம்பதிகளும், தனக்கு விசா கிடைக்காவிட்டாலும் தன் குடும்பத்தார் தப்பித்தால் போதுமெனத் துடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் மிகச் சிறப்பாக அன்றைய சூழலை படம்பிடித்திருக்கிறார்கள்.



இருதலைக் கொள்ளியாகத் துடிக்கும் இல்சா, அவள் மீது கொண்ட காதல் சற்றும் குறையாத ரிக், அதைப் பற்றி ஏதுமறியாமல் தன் மனைவி மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் விக்டர் என மூன்று கதாபாத்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

ரிக்-கிற்கும் இல்சாவிற்கு மிடையேயான காதல் காட்சிகளும் வசனங்களுமே இந்த படத்தைத் திரும்பத் திரும்ப என்னை பார்க்க வைக்கிறது.



ரிக்-காக (Humphrey Bogart). வசன உச்சரிப்பும் Body language Facial Expressions ...அவரின் ரசிகனாகிவிட்டன. அதே போல் Ingrid Bergman அழகு, நடிப்பு. ஒரே காட்சியில் வசனங்களுக்கேற்றவாறு சட்டென மாறும் முகபாவங்கள் ரசிக்கவைக்கும். படத்தில் பாடல்களும் உண்டு. குறிப்பாக ரிக்-கின் கஃபேயில் பாடகராக இருக்கும் சாம் இல்சாவின் விருப்பத்திற்காக பாடும் ஒரு பாடல். அந்த பாடலின்போது Ingrid Bergman நடிப்பும் பாடலின் முடிவில் போகார்ட்டின் எண்ட்ரியும் அட்டகாசம். ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும்.



My Rating: 9.5/10