May 30, 2009

One Flew Over The Cuckoo's Nest (1975)







**** IMDB RATING 8.9/10****TOP 250: #8****

ஒரு திரைப்படம் எற்படுத்தி செல்லும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு அதன் நிலைகுலையாமல் மனதில் நிற்கும் ஆனால் அது உலக அளவில் சிறந்த படமாக கருதப்படும். அப்படிபட்ட ஒரு சில படங்களில் ஒன்றுதான் ......
"ONE FLEW OVER THE "CUCKOO'S NEST.


1975-ல் வெளியான இப்படம் ஆஸ்கரில் பல விருதுகளை (சிறந்த திரைக்கதை,சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை)என வாங்கிவிட்டது. இந்தபடத்தை பற்றி நான் தெரிந்துகொண்டது என் வலைதள நண்பர் திரு.சரவணன் தளத்தில் இருந்துதான். என்னை மீண்டும்..மீண்டும் பார்க்க தூண்டும் சில திரைபடங்களில் இதுவும் ஒன்று... ஒவ்வொரு முறையும் புது புது பரிமாற்றத்தில்.

மேலும் இப்படத்தை பற்றி பல கருத்துகளை பலர் எழுதிவிட்ட நிலையில் நான் இறுதியாக ஒரு சில வரிகள்....


ரம்மிமான இசையில் அழகான காலை பொழுதில் சாலையில் ஒரு கார் செல்கிறது... மன நல காபகத்தின் எல்லாம் உறங்கி எழுகின்றனர் என்று படம் துவங்குகிறது. (R.C McMurphy) கதையின் நாயகன் சிறைச்சாலையில் தன் அடங்காசம் தாங்க முடியாத அதிகரிகள்....மனநோய் இருப்பதாகச் சொல்லி மனநல காப்பகத்திற்குக் கொண்டுவரப்படுகிறான்.

அந்த மனநலக் காப்பகத்தில் மனநோயின் பல்வேறு கட்டத்தில் இருப்பவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். நாயகன் பதினேழு மன நோயாளிகள் இருக்கும் வார்டில் அனுபதிக்கபடுகிறான். (Ratched) என்னும் நர்ஸ் அந்த வார்டின் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். நோயாளிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களின் மனநோய்க்கான காரணத்தை நினைவூட்டியே அவர்களின் பயத்தை அதிகரித்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

வாழ்க்கையின் ஓவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்று கொள்கை கொண்ட McMurphy Ratched-ன் கண்டிப்புக்கு அடங்க மறுக்கிறான். Ratched அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் மன நோயாளிகளாகவே வைத்திருப்பதாகச் சொல்கிறான் McMurphy. இதனால் இருவருக்கும் இடையில் கருந்து வேறுபாடு எற்ப்படுகிறது.

Ratched-யுடன் சண்டை போடுவதும், கருத்தில் மறுத்து பேசுவதும் என சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பதை கண்ட மற்ற நோயாளிகள் அவனிடம் நட்பு கொள்கின்றனர். ஆரம்பத்தில் McMurphy வாழ்க்கை மேல் உள்ள பயம் காரணமாக ஊமை செவிடனாக நடிக்கும் Cheif என்ற நோயாளியிடம் நெருங்கிப் பழகுகிறான்.பின்னர் இவர்களின் நட்பு வலுவடைகிறது

அத்தனை நாட்களாக Ratched-ன் கட்டுப்பாட்டில் நோயாளிகளின் பயத்தை குறைக்க காபகத்தின் கண்னில் மண்னை தூவி-விட்டு, அந்த வார்டில் உள்ள நண்பர்களை அழைத்து கொண்டு கப்பல் ஓட்ட,மீன் பிடிக்க கற்றுதருதல்.. என ஒரு நாள் பொழுதை கழிக்க வைக்கிறான்.


இதனால் Ratched-க்கும் McMurphy-க்கும் சண்டை வலுக்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில்,Ratched இருக்கும்வரை தன்னால் காப்பகத்தில் இருந்து வெளியேற முடியாது என்று உணரும் McMurphy தனது நண்பன் Cheif தப்பிக்க முடிவெடிக்கின்றனர்.

தப்புவதற்கு முந்தைய இரவு நோயாளிகளுடன் குடித்து உல்லாசமாகக் கழிக்கிறான். இரவு எல்லாம் முடிந்து புறப்படம் நேரத்தில்.... அவர்களில் ஒருவன் தன் அழைத்து வந்த பெண்னிடம்..காதல் கொள்ள...அவர்கள் இருவரையும்...போதையில் அனைவரும் உறங்க அடுத்த நாள் அத்தனை பேரும் Ratched-யிடம் சிக்கிவிடுகின்றனர்.

அப்போது நடந்த உரையாடல் எல்லை தாண்ட...Ratched-ன் தோழியின் மகன் தற்கொலை செய்து கொள்கிறான்.இதனால் ஆத்திரம் அடைந்த McMurphy Ratched-யை தாக்க முற்படுகிறான். அதற்குள் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு தனியாக அழைத்துச் செல்லப்படுகிறான்.

பின்பு அறுவை சிகிச்சை மூலம் மூளையின் ஒரு பகுதியை துண்டித்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட நடைபிணமான நிலையில் அவனை மீண்டும் ஒரு விடியலில் கொண்டு வருகிறார்கள். அவனை அந்த நிலையில் காணத் தாங்காமல் Cheif McMurphy-யை கொன்றுவிட்டு தப்பிக்கிறான். வலிமையான பின்னணி இசையுடன் படம் முடிகிறது.


முடிவாக......திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாகக் கழிக்கும் McMurphy, காப்ப்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்டிப்பான நர்ஸ் Ratched, மனநோயின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் நோயாளிகள் என இப்படத்தின் கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் தங்குபவை.அத்தனை நடிகர்களுமே தங்கள் தேர்ந்த நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலுவூட்டியிருக்கிறார்கள். நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பல காட்சிகள் நம்மை கவரும். McMurphy மனநல காப்பகத்திற்கு வரும் ஆரம்பகட்ட காட்சிகள், நோயாளிகள் தங்கள் தயக்கம் நீங்கி அவனுடன் பழகும் காட்சிகள், அவன் தப்பிப்போகும் முன்னிரவு நோயாளிகள் உல்லாசமாக இருக்கும் காட்சி, இறுதியில் Cheif அவனைக் கொன்றுவிட்டு தப்பிக்கும் காட்சிகள் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் பெரிது.


One Flew Over the Cuckoo's Nest கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

My Rating: 10/10

3 comments:

King Viswa said...

அஷ்வின் நாரயனசாமி,

மற்றுமொரு நல்ல விமர்சனம். இதனை விமர்சனம் என்று கூறுவதை விட ரசிப்பு என்றே கூற வேண்டும்.

ச்சே, அற்புதமான இந்த படத்தை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது என்பது தான் மனவருத்தம் தருகிறது.

இந்த படத்தில் எனக்கு பிடித்தது இரண்டு காட்சிகள் (இன்னமும் மறக்க முடியவில்லை).

முதல் முறையாக சீஃப் பேசுவது (ஜூசி கம் என்று கூறுவர் என்று நினைக்கிறேன்).

கிளைமாக்சில்ஜாக் நிக்கல்சனை சீஃப் பார்த்து துடித்து, அவரை கொள்வது. என்னை பொறுத்த வரை அது தான் நட்பின் உச்ச கட்ட எல்லை

King Viswa said...

இதனைப் போன்றே இரண்டு நண்பர்களை பற்றிய கதை Shawshank Redemption.

என்ன, இதில் மன நல காப்பகத்தில் நட்பு மலரும், அதில் சிறைச்சாலையில் நட்பு மலரும். அந்த படத்தை பார்த்து விட்டீர்களா? பார்த்தால் அதற்கும் நீங்கள் என்று 10/10 மதிப்பெண் வழங்குவீர்கள் என்றே நினைக்கிறேன்.

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்

அஷ்வின் நாரயணசாமி said...

@ King viswa:

\\மற்றுமொரு நல்ல விமர்சனம். இதனை விமர்சனம் என்று கூறுவதை விட ரசிப்பு என்றே கூற வேண்டும்.

ரொம்ப நின்றிங்க...

நீங்கள் கூறிய படத்தை பார்க்கிறேன்...தகவல் தந்தமைக்கு நன்றி....

மீண்டும் வருங்கள்....உங்கள் விமர்சனம் தான் என்னை மேலும்,மேலும் எழுத தூண்டும்...