
****IMDB RATING:4.4 /10****
கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் 2006 நவம்பர்-ல் வெளிவந்த நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் "Deck The Halls"
சரி வாங்க கதையின் ஒரு சின்ன அறிமுகம்......
Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போது தான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.
Hall ஒரு கார் விற்பனையாளார். மிக குறைந்த வருமானம். அவன் மனைவியோ எப்போதும் அவனை பணத்திற்காக அவனை நச்சரிக்கிறாள். Hall தான் எதாவது சாகசம் செய்து புகழ் பெறவேண்டும் என நினைக்கிறான். அதன் முயற்ச்சியாக கிறிஸ்மஸ் பண்டிகையின் போது வீட்டை விளக்குகளால் அலங்கரித்து வானில் இருந்து பார்த்தாலும் தெரியும் படி செய்ய பல முயற்சிகளை மேற் கொள்கிறான்.
ஆனால் பல ஆண்டுகளாய் வாழும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் Steve குடும்பமே கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சனையாக கொண்டாடி புகழ் பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் புதிதாக குடி வந்த Buddy யின் முயற்சிகளை கெடுக்க Steve செய்யும் குளறுபடிகளும் அதை Buddy எப்படி முறியடிக்கிறான் என அடிக்கும் லுட்டிகள்...

என்னதான் இவர்கள் இருவரும் போட்டி பொறாமையுடன் இருந்தாலும்.... இவர்கள் குழந்தைகளும் மனைவிகளும் இதை விரும்புவதில்லை. அவர்க்ள் ஒரே குடும்ப்மாக இருக்க வேண்டும் என எவ்வளவோ முயற்ச்சிகின்றனர்.
ஆனால் Buddy , Steve இருவரும் அவர்களின் பேச்சை கேட்க மறுப்பதால் இரு மனைவிகளும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்மஸ் பண்டிகையை விடுதியில் கொண்டாட போவதாய் சொல்லி விட்டு போய் விடுகின்றன்ர். இறுதியில் Buddy & Hall தான் நினைத்ததை நிறைவேற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட நேரத்தை கொள்ளை கொள்ளும்....அத்தனை பேரின் இயல்பான நகைச்சுவை நடிப்பும் பார்பவர்களுக்கு 100% பொழுது போக்கு.....
குறிப்பாக கிறிஸ்மஸ் பாடல்கள் குறும்பாடல்களாக வந்து போவது இனிமை.
My Rating:6.5/10
1 comment:
ரொம்ப நல்ல விமர்சனம்.இன்னும் படம் பார்க்கவில்லை.உண்மையை சொல்ல வேண்டும் எனில் இப்பொழுதுதான் இந்த திரைப்படத்தின் பெயரையே கேள்விபடுகிறேன்.விரைவில் பார்த்துவிட்டு சொல்கிறேன்.தொடரட்டும் உங்கள் கைவண்ணம்.நன்றி.வணக்கம்.
Post a Comment