Showing posts with label Animation. Show all posts
Showing posts with label Animation. Show all posts

June 6, 2009

UP-2009 (Summer Special)




****IMDB RATING:9/10**
****TOP 250#15****









என் வலைபூ நண்பர் விஷ்வா & சரவணா அவர்களுக்கு......
நான் இந்த வலைபூ ஆரமித்தால் இருந்து என் பதிவகளுக்கு மறவாமல் பின்னுட்டி கொண்டிருக்கும் ஒரு நண்பர்...இந்த பதிவு.

இதோடு சேர்த்து மொத்தம் பத்தே படங்கள். போன ஒன்பது படங்களில் மொத்தம் 22 ஆஸ்கர் விருதுகள். ஒரு படம் கூட ஆஸ்கர் வாங்காமல் வந்ததில்லை. So...வரும் வருடம் இன்னும் ஒன்னு / இரண்டு.... வாங்க, UP இப்பவே ரெடி.

அது எப்படி... Pixer மட்டும்.. ஒவ்வொரு வருடமும் சொல்லி சொல்லி அடிக்குது? ஒவ்வொரு Pixer-ரின் படங்களும் அதனோட எதிர்பார்ப்பு எல்லையை உயர்த்திக்கிட்ட இருக்கும் இத்தருணத்தில், மனதில் பல கேள்விகள் ஏல...அதில் ஒன்று தான்....இவர்களால் மட்டும் வெற்றியின் சிகரத்தை எப்படி எட்டிப்பிடிக்க முடிகிறது தளராமல்?.....

Diseny-யின் (தனியான) தயாரிப்போ, Dream Works தயாரிப்போ.. Characterகளை திரையில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் போது, Pixer Films-ல் இருந்து வெளியே வரும் பொம்மைகள்,மீண்கள்,எறும்புகள்,எலிகள்,கார்கள், என எந்த ஒரு பொருளாக இருக்கட்டும்.. அந்த பாத்திரங்களோடு நமக்கு ஒரு இனம் புரியாத ஒட்டுதல் வந்திருக்கும்.

போன ஒன்பது படங்களில் இவ்வறான என அன்னியப்பட்ட Characterகளை வைத்து வித்தை காட்டி நம்மை கட்டி போட்டவர்கள், முதன் முறையாக மனிதர்களை மையமாக வைத்து எடுக்கும் போது... விட்டுவிடுவார்களா....என்ன??

Pixar's Family...., They came back & just done it again.


Carl-லும், Ellie-யும் சிறுவர்களாக இருக்கும் போதே உலகம் சுற்றும் Exploxer ஆகனும்னும், தென் அமெரிக்காவில் இயற்க்கையை அறிந்து அங்கிருக்கும் ‘Pirates Falls’ என்ற அருவியை பார்க்கனும் அவர்களின் விருப்பம்.
கதையின் நாயகன் Carls..... ‘Pirate Falls’-ல் இருக்கும், "Swenni" என்கிற கற்பனையான ஒரு பறக்க முடியாத பறவையின் எலும்புக்கூட்டை Carls, விஞ்ஞானிகளுக்கு காட்ட, அவரை ஏமாற்றுகாரன் என் சொல்லி பட்டம் கட்டி அனுப்பி விடுகிறார்கள். எப்படியாவது ஒரு "Swen"-ஐ பிடித்து காட்டுறேனா இல்லையான்னு பாரு’-ன்னு Carl's சபதம் போட்டுவிட்டு சென்று விட...,

Carl-லும் Ellie-யும் இப்பொழுது வளர்ந்து, பலூன் விற்க ஆரம்பித்து, குழந்தையில்லாமலேயே வயதாகிவிட..., Ellie இறந்துவிட.. இப்பொழுது கார்ல் தனி ஆளாய் அந்த ப்யானோவின் பின்னணி இசை......, அற்புதம்.
Carl's Character நம்மோடு ஒன்றியது அப்போதுதான்!

ஒரு பிரச்சனையில் Carl-லுக்கு, முதியோர் இல்லத்துக்கு போக வேண்டிய கட்டாயம். Ellie-யோடு இருந்த, வாழ்ந்த வீட்டை விட்டு போக மனமில்லாத Carl's, சிறு வயது ‘Pirate Falls’ ஆசையை நிறைவேற்ற, பலூனை வீட்டு மேல் கட்டி, வீட்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தென் அமெரிக்கா கிளம்பிவிட, வேண்டாத ஒட்டுதலாக Charles என்ற சிறுவன் சேர்ந்து கொள்கிறான்.

‘Pirate Falls’ நெருங்கும் நேரத்தில்...,
Falls-ன் எதிர்புறத்தில் வீடு ‘லேண்ட்’ ஆகிவிட.... கலர்ஃபுல்லான ஒரு Swen பறவையும், அந்த பறவையை வேட்டையாட வரும் சில பேசும் நாய்களும் என சேர்ந்து கொள்கின்றன.
பாலுன் உள்ள Helium இறங்குவதற்குள் வீட்டை சரியான இடத்திற்கு கொண்டு போக வேண்டிய கட்டாயத்தில் Carl's, வேட்டையாட துடிக்கும் நாய்களிடமிருந்து, Swen-னைப் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் Charle's,

தன் ‘ஃஏமாற்றுகாரன்’ பெயரை மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் Carl's....
Chaseing, Action, Adventure, செண்டிமெண்ட் (எப்பவும் போல்) என... தியேட்டரில்.. குட்டிகளுக்கும், அவ்வளவு ஏன்.... வளர்ந்தவர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

டெக்னிகல் தொழில் நுட்பங்களின் நேர்த்தியை, இனிமேல் வேறு யாராவது சொல்லித்தான் Pixer-ரை பற்றி தெரியத்தேவையில்லை என்றாலும்,....
இது Pixer-ரின் முதல் 3D படம். சும்மா... புகுந்து விளையாடி கலக்கி இருக்காங்க சொல்ல நினைச்ச.....
Diseny-யின் Monsters VS Aliens -ல் வரும் 3D Effects கூட இல்லாத 3D படம் என்பது தான் பெரிய சோகம்.

இந்த படத்தின் Depth பெரும்பாலும் Flat-யாகவே இருப்பது, மொத்த படத்திற்கும் ‘திருஷ்டி பொட்டு’ வேச்சமாதிறி..

இதை 3D-ன்னு சொல்லி விற்றது, Diseny-யின் வியாபார தந்திரம்....

2D-யில் பார்த்திருந்தாலும் ஒன்றும் கெட்டிருக்காது; Atleast Title-காவது இன்னும் Better-யாக இருந்திருக்கும் என்பது என்னோட கருந்து.

இந்த படத்தில் மனிதர்களை ‘டீல்’ செய்வதாலோ என்னவோ... மற்ற ஒம்பது படங்களை விட இதில் செண்டிமெண்ட் அதிகம் (Wall-E -ஐ விடவும்). அதுவே படத்தின் வேகத்தையும் குறைக்கிறது. Wall-E-யில் முயற்சித்தை போலவே இதிலும், தொடர்ச்சியாக சில நிமிடங்களுக்கு வசனங்களே இல்லாத, பியானோ பின்னணியிசை காட்சிகள்.

ஆனால் Carl's-லோ, Charles-லோ சிரித்தால் நாமும் சிரிப்பதும், அவர்கள் சோகமானால் ஒட்டு மொத்த தியேட்டரும் சோகமாவதும் Pixer படங்களில் மட்டுமே நடக்கும் ஒரு அதிசயம்.

ஒரு ஆச்சரியம்/அதிர்ச்சி....! கார்ட்டூன் படங்களில், ‘காட்சி வன்முறை’ என்பது ரொம்ப சகஜம் என்றாலும்... எனக்கு நினைவு தெரிந்த வரை... முதன்முதலில் ‘இரத்தம்’ காட்டும் Pixer படம் இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன் இறப்பது மாதிரியான காட்சிகள் (Finding Nemo, The Incredibles) வந்திருந்தாலும் ‘இரத்தம்’ வந்திருக்காது. ஒருவேளை "Rated G" படங்களின் ‘அடுத்த கட்டம்’ போலிருக்கிறது.

Up... Pixer-ரின் (என்னை பொறுத்தவரையில்) ‘The Best' இல்லையென்றாலும், இது வரை வெளிவந்துள்ள கோடை விடுமுறை படங்களில், சந்தேகமில்லாமல் The Best..!

(ஒரு சிறு தகவல் Diseny-யின் எல்லா அனிமேசன் படங்களும் இனி 3D-யில் மட்டுமே வருமாம்).
My Rating: 8.9/10

June 2, 2009

Ratatouille... ஆசை யாருக்குதான் இல்லை.



**** IMDB RATING 8.2/10****TOP 250:#161****


Pixer தயாரிப்பில் 2007-யில் வெளிவந்த மற்றொரு படம் தான் Ratatouille நான் பார்த்து என்னை மறந்த ஒரு படம்.. ஒரு எலிக்கு சிறந்த சமையல்காரர் ஆகும் ஆசை வருகிறது. அதை எப்படிச் சாதிக்கிறது என்பது தான் கதை. இந்த படத்தை பற்றி உங்களுடன்....

உலகின் தலைசிறந்த உணவு வகைகள் செய்யும் நாடான பாரீஸ், அதில் தலைசிறந்த உணவகம் தான் Chef Auguste Gusteau உணவகம் என்றும்,,அவர் எழுதிய புத்தகம் "Anyone Can Cook "மிகவும் பிரபலம் என்று ஒரு தொலைக்காட்சியில் அவரை பற்றி .. என படம் தொடங்குகிறது...




REMY-இப்படத்தின் கதாநாயகன் அல்ல கதையின் நாயகன்.. இவன் மற்ற எலிகளில் இருந்து சற்று மாறுபட்டவன்..இவனிடன் வாசனை பிரிந்து பார்க்கும் சத்தி கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறது... இதனால் தன் வாழ்கையை உன்னும் உணவை பிரிந்து பார்த்து உன்னும் பழக்கம் கொள்கிறான்.இவனது திறமையை கண்டு அவன் அண்னன் மட்டும் ஆச்சிரியப்பட,வெறு யாரும் எற்று கொள்வதாய் தெரியவில்லை..

ஒரு கட்டத்தில் தன் திறமையை வைத்து தன் கூட்டத்தை ஒரு கட்டத்தில் உன்னும் உணவில் விசம் இருப்பாதாக கண்டு பிடித்து ஆபயாத்தில் இருந்து காப்பாற்ற.. உணவு பரிசோதிக்கும் பணியை கொடுக்கிறார் அவன் அப்பா "எலிகளின் தலைவர்"..... இந்த சம்பவம் நடந்த பிறகு,, தன் அப்பாவிடம் உணவை திருட தான் சாப்பிட வேண்டும்மென்றால் அதையை சமையில் இருந்து திருடலாமே என்று விவாதம் செய்ய,தன் அப்பா நாம் எலிகள்,மனிதர்களிடம் விலகி வாழ வேண்டும் என்று சொல்கிறார்,,


தன் அப்பாவுக்கும் தெரியாமல் சமையல் அறையில் செல்ல கழிக்க,,அங்கே உணவுகளின் வகைகள், அதனை தாயரிக்கும் முறை..எப்படி என்பதையும்
Chef Auguste Gusteau- வின் புத்தகங்களில் மற்றும் அவரது தொலைகாட்சி தொடரில் தெரிந்து கொள்ள தன் நேரங்களை கழிக்கிறான்.

ஒரு நாள் தன் அண்னனை அழைத்து சமையல் அறைக்கு செல்ல தன் குருவாக எற்று கொண்ட Gusteau பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதை சொல்லும் காட்சியை கண்டு அதிர உறக்கத்தில் இருந்த வீட்டின் உரிமையாளர் விழித்து கொள்ள....அவர்கள் இடத்தில் இருந்து தப்பிக்க முயலும் போது தன் குடும்பத்தில் இருந்து பிரிய நேர்கிறது..
தன்னை காப்பற்ற யாரேனும் வருவார்கள் என தன் கையில்யுள்ள புத்தகத்த வாசித்து கொண்டிருக்கிறது..நேரங்கள் நகர..யாரும் வரவில்லை..பசியும் தனிமையும் தன்னை கொள்ள உணவை தேடி புறப்படும் தருணத்தில் தான்... Gusteau-வின் உணவகத்தை கண்டு இத்தனை நாள் தான் பாரீஸ் நகரத்தில் வசிக்கிறோம் என்ற உண்மையை உணர்கிறது..


தன்க்குரிய ஆவலில் அந்த உணவகதிற்கு செல்கிறது..அந்த நேரத்தில் அங்க வேலை செய்யும் Alfredo Linguini (Garbage Boy) ஒரு உணவை சற்று கீழே சிந்த அதை மறைக்க தன் கைக்கு வந்த அத்தனை பொருகளையும் அள்ளி போட்டு குளமாக்கிறான். இதனை கண்ட Remy அவற்றை திருத்தி அமைக்கிறது....
தன் யாரேனும் பார்த்து விடுவார்கள் என்ற நோக்கில் தப்பிக்க முயலும் போது கண்டு Linguiniயிடம் மாற்றி கொள்கிறது. மீண்டும் தப்பிக்க முயலும் போதுதலைமை Chef Remyயை காண Linguini ஒரு bottle-யில் அடைக்க, தலைமைChef அதனை கொள்ளுமாறு சொல்கிறான்.

தன்னை காப்பாற்றிய ஒருவனை கொலை செய்ய மறுத்து Remy-யை விடுவிக்கிறான்.அதற்கு நன்றி கடன் செலுத்தும் வகையில், Linguini-க்கு உணவு தாயரிக்கும் பணியில் உதவுகிறது.

இதற்கிடையில் தன் உடன் வேலை செய்யும் Colette-யிடம் காதல் கொள்கிறான்.காதல் மலர்கிறது என காட்சிகள் நகர்கிறது.......


ஒரு கட்டத்தில் தன்னை குடும்பத்திரை காண நேர்கிறது,.... கண்டு மகிழ்ச்சியில் அவர்களுக்கு உதவும் முயற்ச்சியில் உணவகத்தில் உள்ள பொருகளை எடுத்து தர முயற்ச்சிகள் மேற்கொண்டபோது Linguini-தான் Gusteauவின் மகன் என்ற உண்மையை கானும் போது தலைமைchef (வில்லன்)பார்த்து விட....Remy அவனிடம் இருந்து தப்பிய உண்மையை Linguini-யிடம் சொல்ல.. Linguini தான் அப்பாவின் உணவகதிற்கு முதாலளி ஆயிகிறான்..
Anton Ego (ஒரு பழைய வில்லன் போல) உணவு விமர்சன்ம் மூலம் Gusteauவின் உணவகம் பற்றி எழுத தான் உணவத்திற்கு இருந்த five Star rating குறைக்க படுகிறது.



Gusteauவின் வளர்ச்சியை பத்திரிக்கையில் கண்ட Ego... Linguini Press meet நடக்கும் இடத்திற்கு வருகை தந்து.. தான் மீண்டும் Gusteauவின் உணவகம் பற்றி எழுத உணவத்திற்கு வருகை தர இருப்பதாக சொல்லிவிட்டு செல்கிறார்.

எல்லோரும் Egoவின் உணவை தாயரிக்க சொல்ல தடுமாறுகிறான். அப்போளுது Linguini உண்மையை சொல்ல எல்லோரும் அதனை எற்று கொள்ள மறுத்து சமையில் அறையில் இருந்து வெளியே செல்கிறார்கள்.

இதன் பின், Linguini எல்லாம் முடிந்து விட்டது என்று கவலை கொள்ள, Remy-யை தன் குடும்பத்தினர் வந்து அலைக்க... சற்று தடுமாறிய மீண்டும் உணவகத்திற்கு மீண்டும் உணவகத்திற்கு செல்ல வழியில் தலைமை Chef-யிடம் மாட்டிக் கொள்கிறது.

பின்னர் தான் குடும்பத்தின் உதவியுடன் விடுவிக்கப்பட்டு....பொத்த குடும்பமும் Ego மற்றும் மற்ற Customers காண உணவு வகைகளை தயாரிக்கும் பணியில் இடுபடுகிறார்கள். இதன் இடையில் Health Inspector ஒருவர் அங்கு வருகை தர.....

கோபித்து செல்லும் அவன் காதலி வழியில் Gusteauவின் "Anyone Can Cook " புத்தகம் கண்டு மனம் மாறி மீண்டும் திரும்ப....Remy-யுடன் சேர்ந்து Egoவிற்க்காண உணவை தயரிக்க உதவுகிறாள்.

உணவு Egoவிற்க்கு மிகவும் பிடித்து போக,.. Remy தயரித்த உணவை Linguini தயாரித்தாக எண்ணி பாரட்டுகிறார்.ஆனால் Linguini உண்மையை சொல்ல சற்று குழ்ப்பத்தில் செல்லும் Ego.. விமர்சனத்தில் proclaiming " the chef to be "the finest in Paris" while neglecting to reveal the chefs' true identity என எழுதிகிறார்.

ஆனால் சந்தோஷ்ச நிகழ்வுகள் நீண்ட நாள் நிடிப்பதில்லை,தலைமை Chef-வும், Health Inspector-யும் சேர்ந்து உணவகத்தில் சுகதார கேடு இருப்பதாக சொல்ல உணவகம் சீல் வைக்க படுகிறது.Ego-வும் தன் வேலை இழ்க்கிறார்.


முடிவாக இவ்முவரும் சேர்ந்து Colette, Linguini and Remy சேர்ந்து "La Ratatouille" என்ற பெயரில் உணவகம் ஒன்றை தொடங்க...படம் சுபம் என் முடிகிறது.

நான் எழுதிய வார்த்தைகளை விட பார்த்தல் அசத்தல் என்று நினைக்கிறேன். காட்சிகள் சற்றும் தடுமாறமல் செல்கிறது. நினைத்தைச் செய்வதற்கு அடிப்படை, பிறப்பு, சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் தேவை இல்லை என்பது தான் படத்தின் அடிப்படைக் கரு.
தப்ப நீனைக்காதிங்க Pixer மீது இருந்த ஒரு நன்மதிப்பு சில காட்சிகளில் சற்று குறைபோயிற்று.. எத்தனை நாள் தான் Sentiment Touch-யோட படத்தை.... இரண்டு மணி நேரம் கவலை மறந்து தாராளமாகப் பார்க்கலாம். Pixar animation studios தயாரிப்பு என்பதால், தனியாக animationஐப் பாராட்டத் தேவை இல்லை தானே?....
My Rating: 9/10

May 27, 2009

WALL-E....

****IMDB RATING: 8.6/10*****


Best Animated Feature Film of the Year
Winner:
WALL·E (2008) - Andrew Stanton

இந்த படத்தை பற்றி நான் சொல்ல வேண்டிதில்லை....நான் இப்படம் வெளிவந்த சில நாட்களில் பார்த்துவிட்டேன், அன்று என் டையிரில் எழுதியதை இன்று என் முதல் பதிவாக பதிக்கிறேன்,அது மட்டும் அல்ல PIXER-films தயரிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் அருமை... அனைத்தும் பார்த்து விட்டேன்... பின் வரும் நாட்களில் எழுதுகிறேன்...

உங்கள் ஆதரவு எப்பவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...

Waste Allocation Load Lifter - Earth Class (WALL-E).


1975ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான ஆபத்தை முதல் காட்சியிலே கன்னத்தில் அறைந்து சொல்கிறது PIXER நிறுவனம். பின்னர் தான் தெரிகிறது, அவை கட்டிடம் அல்ல குப்பைக் குவியல் என்று. மனிதர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை அள்ளியெடுத்து சிறு சிறு சதுரகட்டிகளாக்கி, அவற்றை கட்டிடம் போல அடுக்கி வைப்பது WALL-E என்ற தனியொரு ரோபா. இன்றிலிருந்து 700 வருடங்கள் கழித்து மனிதர்கள் நுகர்வு கலாச்சரத்திற்கும், அதீத தொழில்நுட்பத்திற்கும் அடிமைப்பட்டு இயற்கை வளங்களையும், மனிதத்தன்மையும் இழந்து எந்திரமயமாகியிருக்க,
WALL-E அவர்களை மீண்டும் மனிதர்களாய் மாற்றும் அழகான கவிதை.

தினந்தோறும், குப்பைகளை அள்ளி சீர் செய்யும் போது தென்படும் வித்தியாசமான பொருட்களை தனது தனி அறையில் சேகரிக்கும் பழக்கம் கொண்டது WALL-E. அழிந்து போன உலகத்தின் கடைசி மூச்சாய் முளைவிட்ட சிறு செடி ஒன்றை அவ்வாறு கண்டெடுக்கும் WALL-E, அதை ஷீ ஒன்றில் வைத்து பாதுக்காப்பது அழகு.

அழகிய iPod வடிவத்தில் அதிரடியாய் பூமியை சோதனையிட வரும் ஈவா (நாயகி) எனும் மற்றொரு ரோபோவிடம் காதல் கொள்ளும் WALL-E அதற்கு செடியை பரிசாய் அளிக்கிறது. அச்செடியை ஆசையாய் பெற்றுக் கொண்டதும் ஈவா செயலிழந்து விடுகிறது. ஈவாவை பூமியில் இறக்கிவிட்ட எந்திரம் மீண்டும் அதை எடுத்துச் செல்லும் பொது அதைத் தொடர்ந்து WALL-E செல்லும் போது துவங்குகிறது கதை.


BUY LARGE என்ற நிறுவனம், வாண்வெளியில் பிரம்மாண்டமான விமானம் ஒன்றில் மனிதர்களை குடியமர்த்துகிறது. அங்கே அதீத நவீன வசதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறார்கள். நவீனம் என்றால் அங்குள்ள மனிதர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அந்தரத்தில் மிதக்கும் சொகுசு இருக்கை ஒன்றில் அமர்ந்தபடியே அவர்கள் வேண்டும் பொருட்களை அவர்கள் அருகில் எடுத்துவர ரோபோ பணியாட்கள். முகத்திற்கு நேரே உள்ள Virtual Monitorல் வேண்டியவர்களின் முகத்தை பார்த்தப்டியே பேசிக்கொள்ளலாம். உண்ணும் உணவு, உடையின் நிறம் அனைத்தையும் கூட தேர்வு தீர்மானிப்பது BUY LARGE நிறுவனம் தான். விளைவு மனிதர்கள் உடல் பருமனடைந்து, நடக்கக் கூடத்தெரியாதவர்களாய், ஸ்வ்விம் பூலில் நீந்தத் தெரியாதவர்களாய், கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரியும் நட்சத்திரங்களையும், அண்ட வெளியையும் ரசிக்கத்தெரியாதவர்களாய் கிட்டத்தட்ட ஜடமாய் ஆகியுள்ளார்கள்.
700 வருட விண்வெளி சொகுசு வாழ்க்கையில் மனிதர்கள் மெல்ல மெல்ல பொம்மைகளைப் போல மாறிவருவதை காலவரிசைப்படி தொங்கவிடப்பட்டுள்ள அவ்விமான கேப்டன்களின் புகைப்படங்களில் தெரிகிறது. பழுதடைந்த ஈவாவை சரி செய்யும் போது அதனுள் உயிருள்ள செடியைக் கண்டெடுக்கிறார்கள். முதன்முதலாக செடியைப்பார்க்கும் விமான கேப்டன் தனது கம்யூட்டரிடம் விளக்கம் கேட்டு செடிகளைப் பற்றிய புத்தகத்தைப் பெறுகிறான். புத்தகத்தை எப்படி பிரித்து படிக்க வேண்டும் என்பதைக் கூட அக்கம்யூட்டர் தான் சொல்லித்தருகிறது. செடியைப் பற்றி அறியும் போது, நடனம் என்னும் புது வார்த்தையையும் கேள்விப்படுகிறான். நடனம் என்றால் என்ன என்பதைக்கூட கம்ப்யூட்டர் தான் வீடியோவுடன் விளக்குகிறது. தனது முன்னோர்களின் நடனக் காட்சியைப் பார்த்து வியக்கும் கேப்டன் தன்னால் நடக்கக் கூட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறான். தொடர்ந்து முன்னோர்களைப் பற்றி அறியும் போது, பூமியைக் குறித்தும், தண்ணீர், கடல், தாவரம் இன்ன பிறவற்றை பற்றியும் தெரிந்து கொள்கிறான். இதுவரை, மனித குலம் இழந்த இயற்கையோடு இயைந்த வாழ்வை உணர்ந்து, மீண்டும் தாய்பூமிக்கு திரும்ப முயற்சிக்கிறான். தாயகம் திரும்ப விரும்பும் கேப்டனை அதுவரை அடிமாய் சேவகம் செய்த கம்ப்யூட்டர் அவர்களை பூமிக்கு திரும்பவிடாமல் தன் சுயரூபத்தைக் காட்டுகிறது. பசுமை பூத்த அச்செடியை சாவியாய் கொண்டு அனைவரும் பூமி திரும்ப WALL-Eயும், ஈவாவும் உதவுகிறார்கள்.

பூமி திரும்பும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்தல், மீன்பிடித்தல், வீடு கட்டுதல் என உடல் உழைப்புடன் வாழ்வதைப் பார்க்கும் போது, நாம் அனைவரும் நகரமயமாக்கலின் அபாயத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிளாஸ்டிக், ரசாயனக்கழிவுகள், தொழில்நுட்ப உபகரணங்களின் கழிவுகள் சேர்ந்து பூமியை கொஞ்சம் கொஞ்சமாக குப்பைக் கூடமாக்கி வருகிறது. அதன் அபாயத்தை வெகு அழுத்தமாக, அழகாக கற்பனை கலந்து சொல்லியிருக்கிறது WALL-E. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்குமான இப்படத்தை செம்மையாக எடுத்து சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறது PIXER ......இனி செய்ய வேண்டியது நாமதானே........


My Rating: 10/10