Showing posts with label Comedy. Show all posts
Showing posts with label Comedy. Show all posts

September 17, 2011

Little Miss Sunshine (2006) தோல்விகளையும் தடைகளையும் தாண்டி வெல்லும் தருணங்கள்

"There's two kinds of people in this world, there's winners and there's losers. Okay, you know what the difference is?               " Winners don't give up."



வெகுநாட்களாக இந்த திரைப்படத்தை பற்றி உங்களுடன் பரிர்ந்து கொள்ள ஆசை எதோ சில காரணங்கள்... மீண்டும் இந்த படத்தை நேற்று பார்த்த போது  மீண்டும் பழைய நினைவுகள்.. என்னை பெரிதும் பாதித்த ஒரு திரைப்படம்.
தோல்விகளை சந்திக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைக்கதையின் காட்சியமைப்புகளும் முடிவும் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நம் மனதைக் கனமாக்கும் விதமாகவுமே அமைக்கபட்டிருக்கும்.இங்கு தோல்வி என்பது அவரவர்க்கான அளவீட்டைக் குறித்தே அமைகிறது.
அந்த தருணங்கள் நம் அனுபவங்களையும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன.

அத்தகைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு தோல்வியடைந்தவர்கள் குறித்தும் அவர்கள் தோல்விகளைத் தாண்டி வாழ்வை எதிர்கொள்வது குறித்தும்  மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம் இது.

முதல் சில காட்சிகளிலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் உணர்த்திவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பயணத்தினூடே அவர்களுடன் சேர்ந்து நாமும் சகபயணியாய் பயணிக்க முடிகிறது. அவர்கள் வாழ்வை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
 மேலாண்மை பேச்சாளராக ரிச்சர்ட் முயன்று கொண்டிருப்பவர். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையாளர். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுபவர். அவரது மனைவி ஷெரில். .

. குடும்பத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்ட மூத்த மகன் ட்வெயின். விமானப் படையில் சேரும்வரை யாரிடமும் பேசுவதில்லையென முடிவெடுத்து ஊமையாயிருப்பவன்

 தந்தை எட்வின். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். முதுமையில் வாழ்வின் மீதே விரக்தியில் இருப்பவர். .

ப்ராங்க் ஷெரிலின் அண்ணன். ஓரினச் சேர்க்கையாளன். பேராசிரியர்  தற்கொலைக்கு முயன்று இப்போது தங்கையின் பாதுகாப்பில் இருப்பவன்.

இவர்கள் அனைவரையும் இணைத்திருக்கும் பாலமாக சுட்டிப் பெண் ஆலிவ், ரிச்சர்ட்-ஷெரிலின் மகள்.

ஆலிவிற்கு Little Miss Sunshine என்ற சிறுமியருக்கான அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து தோல்விகளையே எதிர்கொள்ளும் ரிச்சர்ட் குடும்பத்தினர் ஒரே நம்பிக்கையாய் இருப்பது அழகிப்போட்டி.


ஆலிவ்வின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற மனநிலையுடனே போட்டியில் கலந்துகொள்ளக் கிளம்புகிறார்கள்.அந்த பயணத்தினூடே நடைபெறும் உரையாடல்கள், அவர்களின் வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் சம்பவங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், இழப்புகள், மனக்கசப்புகள், பிணைப்புகள் இவைதான் Little Miss Sunshine திரைப்படம்.

எந்தவிதமான நாடகத் தன்மையுமில்லாமல் இயல்பான காட்சியமைப்புகளும் நகைச்சுவை மிளிரும் வசனங்களும்  எதிர்பாராத திருப்பங்களோ ஆச்சரியங்களோ திணிக்கப்படாமல் வெகு இயல்பாய் அமைக்கப்பட்ட திரைக்கதை.

ஒவ்வொரு காட்சியிலும் யாராவது ஒருவர் மற்றவர்களை கிண்டலடிக்கிறார். அது கதாபாத்திரங்களின் விரக்தி நிலையை எடுத்துச் சொல்கிறது.

பிடித்த காட்சிகளைப் நிறையவே இருக்கின்றது பகிர வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்துவிடக்கூடாதென்று தவிர்க்கிறேன்.சில காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும் மொத்தத்தில் சுவாரசியமானத் திரைப்படம்.
 போட்டியில் ஜெயிக்க முடியுமா என்று பயப்படும் ஆலிவிடம் தாத்தா  சொல்லும் இந்த வசனமே.............. 

"Losers are people who are so afraid of not winning, they don't even try."
தோல்விகளைக் கடந்து வாழ்வை எதிர்கொள்ளும் விதத்திலேயே வெற்றிகள் நிச்சயிக்கப்படுகின்றன.   

January 31, 2010

THE BUCKET LIST (2007) - எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.


வாழ்க்கை குறித்தும் வயோதிகம் குறித்தும் மரணம் குறித்துமான எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் தன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.

கார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.

எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.
மரணத்திற்காகக் காத்திருக்கும் இரண்டு வயோதிகர்களின் கதை என்றாலும் மரணத்தின் வாசனையில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. தத்துவார்த்தமான உரையாடல்களிலும் மெல்லிய நகைச்சுவை நிறைந்திருக்கிறது. குறிப்பாக எட்வர்ட்டுக்கும் அவரது உதவியாளர் தாமஸுக்குமான நக்கல் நையாண்டி உரையாடல்கள் அட்டகாசம்.

எட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.

June 23, 2009

Deck The Halls......100% பொழுது போக்கு



****IMDB RATING:4.4 /10****




கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் 2006 நவம்பர்-ல் வெளிவந்த நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் "Deck The Halls"

சரி வாங்க கதையின் ஒரு சின்ன அறிமுகம்......

Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போது தான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.

Hall ஒரு கார் விற்பனையாளார். மிக குறைந்த வருமானம். அவன் மனைவியோ எப்போதும் அவனை பணத்திற்காக அவனை நச்சரிக்கிறாள். Hall தான் எதாவது சாகசம் செய்து புகழ் பெறவேண்டும் என நினைக்கிறான். அதன் முயற்ச்சியாக கிறிஸ்மஸ் பண்டிகையின் போது வீட்டை விளக்குகளால் அலங்கரித்து வானில் இருந்து பார்த்தாலும் தெரியும் படி செய்ய பல முயற்சிகளை மேற் கொள்கிறான்.

ஆனால் பல ஆண்டுகளாய் வாழும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் Steve குடும்பமே கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சனையாக கொண்டாடி புகழ் பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் புதிதாக குடி வந்த Buddy யின் முயற்சிகளை கெடுக்க Steve செய்யும் குளறுபடிகளும் அதை Buddy எப்படி முறியடிக்கிறான் என அடிக்கும் லுட்டிகள்...





என்னதான் இவர்கள் இருவரும் போட்டி பொறாமையுடன் இருந்தாலும்.... இவர்கள் குழந்தைகளும் மனைவிகளும் இதை விரும்புவதில்லை. அவர்க்ள் ஒரே குடும்ப்மாக இருக்க வேண்டும் என எவ்வளவோ முயற்ச்சிகின்றனர்.

ஆனால் Buddy , Steve இருவரும் அவர்களின் பேச்சை கேட்க மறுப்பதால் இரு மனைவிகளும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்மஸ் பண்டிகையை விடுதியில் கொண்டாட போவதாய் சொல்லி விட்டு போய் விடுகின்றன்ர்.
இறுதியில் Buddy & Hall தான் நினைத்ததை நிறைவேற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட நேரத்தை கொள்ளை கொள்ளும்....அத்தனை பேரின் இயல்பான நகைச்சுவை நடிப்பும் பார்பவர்களுக்கு 100% பொழுது போக்கு.....

குறிப்பாக கிறிஸ்மஸ் பாடல்கள் குறும்பாடல்களாக வந்து போவது இனிமை.


My Rating:6.5/10

June 11, 2009

"காதலிக்க நேரமில்லை".(1964)


நாடகத்தனமாக சென்று கொண்டிருந்த சினிமாவை இயல்பான கலை வடிவமாக்கியவர் கதை மட்டும் இருந்தால் போதும் யாரை வேண்டுமானலும் நடித்து ஹிட் செய்லாம் என்பது இவரின் ஆணிதானமான கருத்து. அதற்கு எற்றவாறு குறுகிய காலத்திலேயே பல அருமையான படங்களை தந்தவர்.எனது மனம் கவர்ந்த இயக்குனர்களுள் இவரும் ஒருவர்.

இன்னும் நூறு ஆன்டுகள் கழித்து யாரும் தமிழ்சினிமாவின் டாப் டென் காமெடி படங்கள் லிஸ்ட் போட்டாலும் இந்த படம் அதில் இருக்கும்.இந்த இயக்குனர் சிகரம் ஸ்ரீதர் இயக்கி 1964யில் வெளிவந்த "காதலிக்க நேரமில்லை".


நான் இப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன்.இப்பொது பார்த்தாலும் இருக்கையில் இருந்து எழவிடாது.

முத்து ராமன், ரவிச்சந்திரன்,பாலையா,நாகேஷ், காஞ்சனா,சச்சு நடித்தது. "காதலிக்க நேரமில்லை"விஸ்வனாதன் வேலை வேணும்" என்ற பாடல் மிக பிரபலம். டைரெக்டராக ஆசைப்படும் நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் சீன் கிளாசிக்.(இப்பவும் பல தொலைக்காட்சி வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நிச்சியம் வரும்)

அதே போல் சச்சுவை நடிகையாக மாற்றும் முயற்சிகளும். காதலுக்காக சொல்லும் பொய்கள், ஆள்மாறாட்டம், மோதலில் ஆரமித்து காதல்... என படத்தின் ஒவ்வோரு காட்சிகளும் 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கையாண்ட கதை களங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

படத்தை பற்றி நான் அதிகம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.. சுறுக்கமாக நீங்கள் தமிழில் ஒரு அருமையான நகைச்சுவை படம் பார்க்க விரும்பினால்.. மாறவமல் இந்த படத்தை பாருங்கள்.

மீண்டும் இப்படம் தமிழில் Re-make செய்ய கொண்டிருக்கிறார்கள் என ஒரு செய்தி...என்னை பொறுத்த வரையில் "Original Magic-யை Re-create செய்ய முடியாது.

மேலும் அவர் இயக்கத்தில் வந்து இன்னும் காலத்தால் அழிய காவியங்களில் சில வற்றை....

கல்யாணப்பரிசு (1959), தேன் நிலவு (1961), நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), சுமை தாங்கி, வெண்ணிற ஆடை (1965).

இவரை பற்றி ஒரு சில தகவல்கள்:(வலைபூவில் இருந்து கிடைத்தது)..

ஜெயலலிதா வை அறிமுகப்படுத்தியவர், இந்தி திரைஉலகின் கனவுக்கன்னி ஹேமமாலினி-யை மேக்கப் டெஸ்டில் நிராகரித்தவர்,ஜெமினி கணேசன் முதல் விக்ரம் வரை மூன்று தலைமுறையையும் இயக்கியவர். பக்கவாத நோய்தாக்கிய நிலையிலும் தினமும் சினிமா பார்க்கும் பழக்கத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை இவர்.

இந்த ஒரு பதிவு போதது இவரை பற்றி எழுத....என்னும் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள்..

My Rating: 9/10