நாடகத்தனமாக சென்று கொண்டிருந்த சினிமாவை இயல்பான கலை வடிவமாக்கியவர் கதை மட்டும் இருந்தால் போதும் யாரை வேண்டுமானலும் நடித்து ஹிட் செய்லாம் என்பது இவரின் ஆணிதானமான கருத்து. அதற்கு எற்றவாறு குறுகிய காலத்திலேயே பல அருமையான படங்களை தந்தவர்.எனது மனம் கவர்ந்த இயக்குனர்களுள் இவரும் ஒருவர்.
இன்னும் நூறு ஆன்டுகள் கழித்து யாரும் தமிழ்சினிமாவின் டாப் டென் காமெடி படங்கள் லிஸ்ட் போட்டாலும் இந்த படம் அதில் இருக்கும்.இந்த இயக்குனர் சிகரம் ஸ்ரீதர் இயக்கி 1964யில் வெளிவந்த "காதலிக்க நேரமில்லை".
நான் இப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன்.இப்பொது பார்த்தாலும் இருக்கையில் இருந்து எழவிடாது.
முத்து ராமன், ரவிச்சந்திரன்,பாலையா,நாகேஷ், காஞ்சனா,சச்சு நடித்தது. "காதலிக்க நேரமில்லை"விஸ்வனாதன் வேலை வேணும்" என்ற பாடல் மிக பிரபலம். டைரெக்டராக ஆசைப்படும் நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் சீன் கிளாசிக்.(இப்பவும் பல தொலைக்காட்சி வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நிச்சியம் வரும்)அதே போல் சச்சுவை நடிகையாக மாற்றும் முயற்சிகளும். காதலுக்காக சொல்லும் பொய்கள், ஆள்மாறாட்டம், மோதலில் ஆரமித்து காதல்... என படத்தின் ஒவ்வோரு காட்சிகளும் 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கையாண்ட கதை களங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.
படத்தை பற்றி நான் அதிகம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.. சுறுக்கமாக நீங்கள் தமிழில் ஒரு அருமையான நகைச்சுவை படம் பார்க்க விரும்பினால்.. மாறவமல் இந்த படத்தை பாருங்கள்.
மீண்டும் இப்படம் தமிழில் Re-make செய்ய கொண்டிருக்கிறார்கள் என ஒரு செய்தி...என்னை பொறுத்த வரையில் "Original Magic-யை Re-create செய்ய முடியாது.
மேலும் அவர் இயக்கத்தில் வந்து இன்னும் காலத்தால் அழிய காவியங்களில் சில வற்றை....
கல்யாணப்பரிசு (1959), தேன் நிலவு (1961), நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), சுமை தாங்கி, வெண்ணிற ஆடை (1965).
இவரை பற்றி ஒரு சில தகவல்கள்:(வலைபூவில் இருந்து கிடைத்தது)..
ஜெயலலிதா வை அறிமுகப்படுத்தியவர், இந்தி திரைஉலகின் கனவுக்கன்னி ஹேமமாலினி-யை மேக்கப் டெஸ்டில் நிராகரித்தவர்,ஜெமினி கணேசன் முதல் விக்ரம் வரை மூன்று தலைமுறையையும் இயக்கியவர். பக்கவாத நோய்தாக்கிய நிலையிலும் தினமும் சினிமா பார்க்கும் பழக்கத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை இவர்.
இந்த ஒரு பதிவு போதது இவரை பற்றி எழுத....என்னும் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள்..
My Rating: 9/10
2 comments:
என் மனதுக்கு பிடித்த மானசீக இயக்குநரின் பதிவிற்கு நன்றிகள் ஆயிரம்.
திரைக்காதலன் ஸ்ரீதர் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
@வண்ணத்துபூச்சியார்
மீண்டும் வந்தமைக்கு நன்றிகள்.......உங்களுக்கு பிடிந்த அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.
Post a Comment