June 14, 2016
12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்
1957-இல் வந்த இந்த திரைப்படம் பல மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் திரையிடப்படுகின்றது. இரண்டு மணி நேரம் ஒரே அறையில் 12 பேர் பேசிக்கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியுமென்றால் இந்த படம் கண்டிப்பாக தவற விடக்கூடாத ஒன்று
ஒரு கொலை வழக்கு. குற்றம் சாட்டப்பட்டுள்ள 20 வயது இளைஞன். 12 ஜூரிகள். பத்துக்கு பத்து அளவில் ஒரு அறை. இதை வைத்து மிகச் சிறப்பாக சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம் 12 Angry Men.
ஒரு இளைஞன் தன் தந்தையைக் கொன்றதாக கைது செய்யப்படுகிறான். சாட்சிகளும் ஆதாரங்களும் அவனுக்கெதிராக இருக்கின்றன. அவன் தொலைத்ததாக சொல்லும் கத்தி கொலை நடந்த இடத்தில் கிடைக்கிறது. ஆனால் அவனோ குற்றத்தை மறுக்கிறான். வழக்கு முடிந்ததும் நீதிபதி 12 நடுவர்களை வழக்கு குறித்து முடிவெடுக்கச் சொல்கிறார். குற்றவாளியென நடுவர்கள் முடிவு செய்தால் அந்த இளைஞனுக்கு மரண தண்டனை உறுதி. நடுவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சாட்சிகள் அந்த இளைஞனுக்கு எதிராக இருப்பதால் பதினோரு நடுவர்களுமே அவன் குற்றவாளி என ஏகமனதாக முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கு இடமிருப்பதாகவும் அவன் நிரபராதியாகக் கூட இருக்கலாம் என்றும் கூறுகிறார். வழக்கு விசாரனையில் தனக்கு திருப்தியில்லை எனவும் அந்த இளைஞன் தவறுதலாக தண்டிக்கப்படக் கூடாதென்றும் கூறுகிறார். எந்த முன்முடிவும் இல்லாமல் நடுவர்கள் வழக்கு குறித்து் தீர ஆராய வேண்டுமென்கிறார்.
மற்ற நடுவர்கள் விவாதிப்பது நேர விரயம் எனக் கூறி மறுக்கின்றனர். அந்த இளைஞன் கொலை செய்தது குறித்து தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்கின்றனர். அவரோ அந்த இளைஞன் சார்பான வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுமெனக் கூறி அவற்றை முன் வைக்கிறார். விவாதத்தினிடையே நடுவர்களிடையே வாக்குவாதங்களும் சிறு மோதல்களும் நிகழ்கின்றன. வழக்கு குறித்து பேசப் பேச ஒவ்வொரு நடுவர்களாக மனதை மாற்றிக் கொள்கின்றனர். இறுதியில் அவன் குற்றவாளியென நிருபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையென அந்த இளைஞனை விடுதலை செய்ய முடிவெடுக்கின்றனர்.
இந்த எளிமையான கதையின் பலமே நடுவர்களாக வரும் 12 கதாபாத்திரங்கள்தான். சமூகத்தின் வெவ்வேறு நிலைகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 12 கதாபாத்திரங்களும் வெகு சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நடுவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களும் அவர்களின் பின்புலமும் இந்த வழக்கு குறித்த அவர்களது பார்வையை எப்படி மாற்றுகிறது என்பதை மிகச் சிறப்பாக படம்பிடித்திருப்பார்கள். வெற்றிகரமான தொழிலதிபர் முதல் வாழ்வில் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஏழை வரை, இனவெறியாளன் முதல் மிகவும் கனிவான கதாபாத்திரம் வரை என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனி அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும். வழக்கு குறித்த விவாதத்தினிடையே நடுவர்களுக்குள் தனிப்பட்ட மோதல்களும் அவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நடுவர்கள் குழுக்களாக சார்புநிலை எடுப்பதும் மிக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
அதே போல் கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப அவர்களுடைய பேச்சு வழக்கிலேயே வசனங்கள் அமைந்திருக்கும். அந்த இளைஞனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடக்கும் விவாதங்களில் நம்மையே ஒரு சார்பை எடுக்க வைக்கும் அளவுக்கு வசனங்களும் காட்சியமைப்புகளும் கூர்மையாக இருக்கும். நடுவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் மிகச் சிறப்பாக தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்திருப்பார்கள்.
.
வெகு நாட்கள் கழித்து..
மீண்டும் எழுத தொடங்க ஒரு புது உணர்வு.. பிழை இருந்தால் மன்னிக்கவும்.. நன்றி..
September 17, 2011
Little Miss Sunshine (2006) தோல்விகளையும் தடைகளையும் தாண்டி வெல்லும் தருணங்கள்
வெகுநாட்களாக இந்த திரைப்படத்தை பற்றி உங்களுடன் பரிர்ந்து கொள்ள ஆசை எதோ சில காரணங்கள்... மீண்டும் இந்த படத்தை நேற்று பார்த்த போது மீண்டும் பழைய நினைவுகள்.. என்னை பெரிதும் பாதித்த ஒரு திரைப்படம்.
தோல்விகளை சந்திக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைக்கதையின் காட்சியமைப்புகளும் முடிவும் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நம் மனதைக் கனமாக்கும் விதமாகவுமே அமைக்கபட்டிருக்கும்.இங்கு தோல்வி என்பது அவரவர்க்கான அளவீட்டைக் குறித்தே அமைகிறது.
அந்த தருணங்கள் நம் அனுபவங்களையும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன.
அத்தகைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு தோல்வியடைந்தவர்கள் குறித்தும் அவர்கள் தோல்விகளைத் தாண்டி வாழ்வை எதிர்கொள்வது குறித்தும் மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம் இது.
முதல் சில காட்சிகளிலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் உணர்த்திவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பயணத்தினூடே அவர்களுடன் சேர்ந்து நாமும் சகபயணியாய் பயணிக்க முடிகிறது. அவர்கள் வாழ்வை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
மேலாண்மை பேச்சாளராக ரிச்சர்ட் முயன்று கொண்டிருப்பவர். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையாளர். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுபவர். அவரது மனைவி ஷெரில். .
. குடும்பத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்ட மூத்த மகன் ட்வெயின். விமானப் படையில் சேரும்வரை யாரிடமும் பேசுவதில்லையென முடிவெடுத்து ஊமையாயிருப்பவன்
தந்தை எட்வின். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். முதுமையில் வாழ்வின் மீதே விரக்தியில் இருப்பவர். .
ப்ராங்க் ஷெரிலின் அண்ணன். ஓரினச் சேர்க்கையாளன். பேராசிரியர் தற்கொலைக்கு முயன்று இப்போது தங்கையின் பாதுகாப்பில் இருப்பவன்.
இவர்கள் அனைவரையும் இணைத்திருக்கும் பாலமாக சுட்டிப் பெண் ஆலிவ், ரிச்சர்ட்-ஷெரிலின் மகள்.
ஆலிவிற்கு Little Miss Sunshine என்ற சிறுமியருக்கான அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து தோல்விகளையே எதிர்கொள்ளும் ரிச்சர்ட் குடும்பத்தினர் ஒரே நம்பிக்கையாய் இருப்பது அழகிப்போட்டி.
ஆலிவ்வின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற மனநிலையுடனே போட்டியில் கலந்துகொள்ளக் கிளம்புகிறார்கள்.அந்த பயணத்தினூடே நடைபெறும் உரையாடல்கள், அவர்களின் வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் சம்பவங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், இழப்புகள், மனக்கசப்புகள், பிணைப்புகள் இவைதான் Little Miss Sunshine திரைப்படம்.
எந்தவிதமான நாடகத் தன்மையுமில்லாமல் இயல்பான காட்சியமைப்புகளும் நகைச்சுவை மிளிரும் வசனங்களும் எதிர்பாராத திருப்பங்களோ ஆச்சரியங்களோ திணிக்கப்படாமல் வெகு இயல்பாய் அமைக்கப்பட்ட திரைக்கதை.
ஒவ்வொரு காட்சியிலும் யாராவது ஒருவர் மற்றவர்களை கிண்டலடிக்கிறார். அது கதாபாத்திரங்களின் விரக்தி நிலையை எடுத்துச் சொல்கிறது.
பிடித்த காட்சிகளைப் நிறையவே இருக்கின்றது பகிர வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்துவிடக்கூடாதென்று தவிர்க்கிறேன்.சில காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும் மொத்தத்தில் சுவாரசியமானத் திரைப்படம்.
போட்டியில் ஜெயிக்க முடியுமா என்று பயப்படும் ஆலிவிடம் தாத்தா சொல்லும் இந்த வசனமே..............
"Losers are people who are so afraid of not winning, they don't even try."
தோல்விகளைக் கடந்து வாழ்வை எதிர்கொள்ளும் விதத்திலேயே வெற்றிகள் நிச்சயிக்கப்படுகின்றன.
September 9, 2011
House of Sand and Fog (2003)- 'சொந்த வீடு' என்பதே கனவாகிப்போன குடும்பங்களின் கதை
ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் . நமது வாழ்க்கையும கூட ஒரு விசித்திர நாவல் என்றே தோன்றுகிறது.
House of Sand and Fog அதன் மற்றுமொரு அத்தியாயம்.
குடிபழக்கத்தால், மனம் உடைந்து இருந்து மீண்டு வரும் Kathy . வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியின் உச்சத்தில் இருப்பவள். அவளுக்காக தந்தை விட்டுச் சென்ற வீடு, வரி செலுத்தாத காரணத்திற்காக ஏலம் விடப்படுகிறது.
ஓய்வு பெற்ற ஈரானிய இரானுவ அதிகாரியான Behrani அந்த வீட்டை வாங்குகிறார். ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிய வீட்டை மேம்படுத்தி நல்ல விலைக்கு விற்க நினைக்கிறார். கடற்கரையோரம் இருக்கும் அந்த வீடு அவருக்கு ஈரானில் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை நினைவுபடுத்துகிறது. ஆதலால் மனைவி &மகனுடன் அந்த வீட்டுக்கு குடிவருகிறார்.
வீட்டை இழந்ததை வெகு தாமதமாக உணரும் Kathy வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறாள். அது தன் தந்தையின் வீடென்றும் அதை விட்டால் தனக்கு வேறெதுவும் இல்லையென்றும் அரசாங்கத்தின் குளறுபடியால் ஏலம் விடப்பட்டதாகவும் கூறி காலி செய்ய மறுக்கிறாள்.
தன் சேமிப்பு முழுவதையும் வீடு வாங்க செலவிட்ட Behrani அவளுடன் சண்டையிடுகிறார். தான் வீட்டை வாங்கியதற்கு ஆதாரங்களைக் காட்டி அவளை வெளியேறச் சொல்கிறார்.
Lester போலீஸ்காரர் Kathyயின் மேல் ஈர்க்கப்பட்டு அவளுக்கு உதவுகிறார். Behrani யை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார். குடும்பத்தினரை அறையில் அடைத்து வைத்து மிரட்டுகிறார்.
இறுதியில் Behrani அரசாங்கத்திடம் வீட்டை திருப்பிக்கொடுத்து தான் கட்டிய பணத்தை வாங்கி Kathyயிடம் கொடுத்துவிடுவதாயும் தன் பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்குமாறும் ஒரு தீர்வைச் சொல்கிறார்.
அரசு அலுவலகத்துக்கு செல்கையில் எதிர்பாராத சமயத்தில் Behrani மகன் Lester துப்பாக்கியைப் பறித்து தங்களை விட்டுவிடுமாறு மிரட்டுகிறான். இதை கண்ட அங்கு வரும் காவலாளிகள் Behrani மகனை சுட்டுவிடுகின்றனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறக்கிறான்.
Lester போலீஸிடம் அவருடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் குற்றத்தை ஒத்துக்கொள்கிறான். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.
மகனை இழந்த அதிர்ச்சியில் வீடு திரும்பவரும் Behrani தன் மனைவிக்கு தேநீரில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு, இரானுவ உடை அணிந்து முகத்தை பாலித்தீன் பையால் மூடி மூச்சு முட்டி தற்கொலை செய்துகொள்கிறார்.
வீட்டுக்கு வரும் Kathy அவர்கள் இறந்துகிடப்பதைப் பார்த்து உடைந்து அழுகிறாள்.
இறுதியில் வரும் போலீஸ் அது அவளுடைய வீடா எனக் கேட்க அவள் "இது என்னுடைய வீடு இல்லை" எனக் கூறி சென்றுவிடுகிறாள்.
யாருக்குமற்றதாய் அந்த வீடு அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறது.
தான் செய்வது தவறென உணர்ந்தாலும் குற்றவுணர்ச்சி தடுத்தாலும் இழந்த தன் வாழ்வை மீட்கப் போராடும் Kathy , புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை எதிர்நோக்கும் Behrani, ......என இரு கதாபாத்திரங்களுக்கிடையேயான போராட்டம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்களின் மேலான பச்சாதாபம் படம் முடிகையில் எந்த உருவமும் கொள்ளலாம். அதுவே இந்த படத்தின் சிறப்பும் கூட.இறுக்கமான காட்சிகள் காட்சிகளுடன் ஒத்துப்போகும் பின்னணி இசை நம்மை கதையுடன் ஒன்ற வைக்கின்றன. .
பி.கு: மகிழ்வான தருணங்களில் பார்ப்பதற்கு அல்ல....
May 8, 2010
P2 (PARKING 2) - அழகிய தில்லர்
பிரச்சனை யாருக்கு எந்த வடிவில் எப்போழுது... யார் வடிவில் வரும் என்று யாருக்கும் தெரியாது. இதன் ஒரு பதில் "காலம்".. இதுவே பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..அவர்களது அழகே அவர்களுக்கு பிரச்சனை அப்படி ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனைதான் இந்த படத்தின் கதை... நேற்று சற்றும் எதிர்பாக்காமல் என் நண்பன் வீட்டில் 2007-ல் வெளிவந்த "PARKING TWO (P2)".பார்த்தேன்.
அவளுக்கு எல்லாம் புரிய வருகிறது அவன் செய்த திட்டம் தான் என்று... பின்னர் அவள் என்னவானாள்? எப்படி தப்பினாள்? எப்படி கஷ்டபட்டாள் என்பதை திரையில் காணுங்கள்...
Wes Bentley & Rachel Nichols hats off.
முதல் காட்சியில் கதாநாயகியின் அலுவலகமும் அவளது அழகும் & உடையும் சான்சே இல்லை.. (தப்ப நீனைக்காதீங்க அழகை ரசிக்கலாம் தப்பில்லை.. எங்கோ படித்தது) நல்ல
body language.... நல்ல expressions....
முதலில் கார்பரேட் ஸ்டைலில் உடை உடுத்திய Nichols-யை பெண் Bentleyவிடம் மாட்டியதும் பெட்டிக்கோட்டுடன் அலைய வைப்பதும். அதனால் தான் படத்தை இன்னும் உன்னிப்பாக பார்க்க முடிகின்றது என்பது வேறு விஷயம்.... இருத்தும் ஒரு நல்ல டைம்பாஸ் தில்லர்-கு நான் பொறுப்பு..
*****PARKING 2 (P2)- எதுவும் நேரலாம் எங்கும் யாருக்கும்,.... *****
February 27, 2010
A Walk to Remember (2002).....காதலின் நினைவில்

காதல் என்று பெயரில் எழுதப்படும் எந்த ஒரு வார்த்தையும் கவிதையாகிவிடும்..என்று எங்கோ படித்த நினைவில்...
நம்மில், இதுவரை காதலிக்காதவர்கள் எத்தனை பேர்? அந்த காதல் வெற்றியில் முடிந்திருந்தாலும்...... தோல்வில் மூழ்கியிருந்தாலும் சரி, வாழ்வில் ஒருமுறையாவது காதல் நம்மை தொட்டுபார்த்திருக்கும் , ஒருவரையாவது நாம் காதலித்திருக்கிறோம்.
நம் நினனவில் அழிய சித்திரமான அந்த ஒருவர், இந்தக் தருணத்தில் கணத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணமும் நமக்குப் பலமுறை வந்திருக்கும்.
எதோ ஒரு இடத்தில் காதலர்களை பார்க்கும் போது, நமது காதலனோ அல்லது காதலியோ நம்மருகே இல்லாமல், ஒரு பெரும் தனிமையைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம். . . காதலில் மூழ்கியிருந்த நாட்களை எண்ணி நமக்குள்ளே புன்னகைத்திருக்கிறோம்! அவர்களுடன் நாம் சிலகாலமே இருந்தாலும், நமது வாழ்க்கை முழுமைக்குமே அது போதும் என்ற ஒரு நிம்மதியை அளிக்கக்கூடியதே காதல்.
அப்படிப்பட்ட ஒரு அழகான காதல் கதையே இந்த "A WALK TO REMEMBER"..இந்தப் படம். அதே பெயரில் வந்த ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
இரவு சுமார் பத்து மணி. ஐந்தாறு இளைஞர்கள் கொண்ட கூட்டம் தனித்தனியாக காரில் வந்து இறங்குகின்றது. அவர்கள் நண்பர் குழாமில் புதிதாக ஒருவன் சேர விரும்புகிறான். அவனுக்கு அதற்காக வைக்கப்பட்டிற்கும் ஒரு பந்தயம் – இருபதடி உயரத்திலிருந்து ஒரு குளத்தில் குதிப்பது. அவனை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பொறுப்பற்ற அந்த கூட்டம். குதித்தவனுக்கு படுகாயம். காவல்துறையினரின் கார் சத்தம் அருகில் கேட்கிறது. அடிபட்டவனை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் காரில் பறக்கிறார்கள். ஒருவன் மட்டும் மாட்டிக்கொள்கிறான் – லேண்டன்.
லேண்டண் அம்மாவுடன் தனித்து வாழுகிறான். அவனுடைய அப்பா வேறு பெண்ணுடன் இருக்கிறார். அதனால் அவனுக்கு அவர் மேல் வெறுப்பு. அவரோ அவனிடமும் முந்நாள் மனைவியிடமும் நட்பாகவே இருக்க முயல்கிறார். லேண்டன் அதை ஏற்றுக்கொள்வதாயில்லை. அப்பா இல்லாததால் தான் அவன் இத்தகைய காரியங்கள் செயதாக தாய் வருத்தப்படுகிறாள். காவல்துறையின் பரிந்துரையின் பேரில் அவனுடைய பள்ளி அவனுக்கு சில பணிகளை விதித்திருக்கிறது. சேவை மையத்தில் சிறுவர்களுக்கு பாடம் சொல்லித்தருதல் மற்றும் உள்ளூர் நாடக குழுவின் நாடகத்தில் பங்குபெறுதல். வேண்டா வெறுப்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அவன் அந்த இடங்களுக்கு செல்கிறான்.
அந்த இடங்களுக்கு ஜேமியும் தவறாமல் வருகிறாள். அவளை ஏற்கனவே அவன் அறிந்திருக்கிறான். தேவாலய போதகரின் ஒரே மகள். சதா படித்துக்கொண்டேயிருப்பதற்காகவும், சேவை மையங்களில் நேரம் செலவழிப்பதற்காகவும், அவள் அணியும் அசுவாரஸ்யமான உடைகளுக்காவும் அவள் அந்த பள்ளியில் பிரபலமானவள். லேண்டன் விரும்பித்தான் சேவை செய்ய முன் வந்திருப்பதாக நினைத்து நட்பு பாராட்ட அவள் முயல, லேண்டன் அதை நிராகரிக்கிறான். அவனுடைய நண்பர் குழாம் அவளுடனான இவனுடைய நட்பை ஏற்காது. அது அவமானமாகவும் கேலியாகவும் கருதப்படும்.
ஆயினும், சேவை மையத்திலும் சரி, அவர்கள் காதலர்களாக நடிக்கும் அந்த நாடகத்தின் ஒத்திகையிலும் சரி, அவளின் உதவி இவனுக்கு தேவைப்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அவளுடைய நண்பனாகிறான். ஜேமி ஒரே ஒரு நிபந்தனை விதிக்கிறாள் – தன்னை காதலிக்கக் கூடாது என்று. லேண்டனுக்கு அடங்க மாட்டாமல் சிரிப்பு வருகிறது – இந்த பெண்ணை யார் காதலிப்பார்கள். நண்பர்கள் இல்லை – தோழிகள் இல்லை – ஆடைகளில் நல்ல தேர்வு இல்லை – அழகு தான் ஆனாலும் – லேண்டனின் கற்பனைக்கு எட்டாத ஒரு அதிசயம் மட்டுமே அவனை அவள் மேல் காதல் கொள்ள வைக்குமென நம்புகிறான்.
அந்த அதிசயமும் நிகழ்கிறது.
ஜேமி யாரும் அறியாத ஒரு புதையலைப் போல இருக்கிறாள். அமைதியான அழகு, அடக்கமான அறிவு், வயதை மீறிய தெளிவு – அத்தனையும் அவளிடம் கொட்டிக்கிடக்கிறது. மெல்ல மெல்ல அவளை காதலிக்கத் தொடங்குகிறான். இதை அறிந்த அவனுடைய நண்பர்கள் அவளை பள்ளியில் மிகவும் கேவலமான முறையில் கேலி செய்ய, அவர்களை எதிர்க்கிறான். ஜேமிக்கு ஆதரவாக நிற்கிறான்.
ஜேமி தன் வாழ்நாளில் தான் செய்ய வேண்டிய wish list ஒன்று வைத்திருக்கிறாள். முன் பின் தெரியாத ஒருவருக்கு காரில் லிஃப்ட் கொடுப்பதில் துவங்கி, ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருப்பது, ஒரு பேரதிசயத்தை காண்பது என வளரும் அந்த பட்டியலின் முதல் ஆசை் இறந்து போன அவளுடைய அம்மா திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது. இதை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குகிறான் லேண்டன். அவளை யாருடனும் வெளியே அனுப்ப மறுக்கும் அவனுடைய தந்தையுடன் வாதிட்டு அவளை வெளியே அழைத்துச்செல்கிறான். பள்ளி முடிகிற தருவாயில் காதலைச் சொல்கிறான்்.
தன்னுடைய நிபந்தனையை கண்ணீருடன் நினைவூட்டுகிறாள் ஜேமி. அவள் யாரையும் காதலிக்க முடியாது என மறுக்கிறாள். அவளுக்கு லுகீமியா. தன்னுடைய வாழ்நாளின் கடைசிகட்டத்தில் இருக்கிறாள் ஜேமி.
கண்ணீருடன் ஜேமி காட்டுத்தனமாக காரில் செல்கிறான். அவனுடைய அப்பாவிடமும்! அவர் ஒரு மருத்துவர். அவனுடைய அத்தனைக் கோபங்களும் உடைந்து அவரிடம் உதவி கேட்டு நிற்கிறான்!
வாழ்க்கையை அப்படியே ஏற்றுகொண்டு, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கிறான். தொடர்ந்து அவளின் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டே வருகிறான். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவளுடைய பெற்றோர் திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளை மணமுடிக்கிறான்.
ஒரு வருடம் அழகிய ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டு இறந்து போகிறாள் ஜேமி.
பின்னர் ஒரு நாளில், லேண்டன் ஜேமியின் தந்தையை சந்திக்கிறான். அவளுடைய இரண்டாவது ஆசையாக ஒரு பேரதிசயத்தை காண விரும்பினாள். ஆனால் அது நடக்காமல் போனதாக வருந்துகிறான். அவனுடைய அப்பா மறுக்கிறார். ஜேமி நிச்சயம் ஒரு பேரதிசயத்தை கண்டாள். அது நீ என்று சொல்கிறார். மனதை நிறைக்கும் இசையுடன் நிறைவு பெறுகிறது படம்.
தெளிவான இதமான ஒரு காதல் கவிதை இந்தப் படம்.
லேண்டனாக வருகிற Shane west, ஜேமியாக வருகிற Mandy moore இருவரும் கச்சிதம். அழகான ஜோடி. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.
இருவரின் பெற்றோர் நம் மனதை நெகிழ வைக்கிறார்கள். பெற்றோருடன் பிள்ளைகள் பேசுகிற சில காட்சிகள் அற்புதம். உடல்நிலை மோசமடைந்து ஜேமி மருத்துவமனையில் இருக்கும் போது அவளுடய அப்பா நினைவுகூறும் சிறு வயது ஞாபகங்களும், ஜேமிக்கு வீட்டிலிருந்தே மருத்துவம் செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செலவையும் லேண்டனின் தந்தை மேற்கொண்டதை அறிந்து லேண்டன் அவரைத் தேடிச் சென்று அத்தனை வெறுப்பும் கோபமும் மறந்து கட்டியணைத்து அழுகிற காட்சி அழகு.
கண்களை உறுத்தாத ஒளிப்பதிவும், இதமான பிண்ணனி இசையுமாக படத்தின் இரு தூண்களும் பலம்.
காதல் மெதுவாக மெதுவாக தலை காட்டத்துவங்கும் நாட்களின் உச்சமாக, லேண்டனும் ஜேமியும் காதலர்களாக அந்த மேடை நாடகத்தில் அரங்கேறுகிறார்கள். செம்மையான ஒப்பனையுடன், அற்புதமான உடையுடன் இந்தப் பெண் இத்தனை அழகா என்று நாமே வியக்கிற அந்த காட்சியில் அடக்கி வைத்த லேண்டனின் அத்தனைக் காதலும் வெடித்துச் சிதற படபடக்கிறது. காதல் வசனங்களும் அதை தொடரும் அற்புதமான மேடைப்பாடலுமாக லேண்டன் தவிக்கிற அந்த கணங்கள் படம் முடிந்தும் நம் நினைவில் இருக்கும்.
இதமான தரமான சுவையான காதல் படம் என்பதற்கு உறுதி....படம் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.
January 31, 2010
THE BUCKET LIST (2007) - எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் தன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.
கார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
கார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.
எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.
எட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.
December 2, 2009
THE OTHERS (2001)-தில்லர் ஒரு புதிய கோணத்தில்

****IMDB RATING:7.8/10****
ரொம்ப நாளா... பதிவு ஏதும் போட முடியல... உண்மையை சொன்னால் இப்போழுது எல்லாம் படங்கள் பார்ப்பது குறைவு.. இருந்தும் என் பதிவில் போட ரொம்ப நாளாய் எழுத நினைத்த ஒரு படம் ..
நாம் வாழும் வீட்டில் நம் கண்ணுக்கு தெரியாமல் மற்றொரு குடும்பமும் வாழ்ந்து வந்தால்? அதுவும் அவர்கள் அனைவரும் இறந்தவராக இருப்பின்....?
வழக்கமான பேய்ப்படங்கள் போல் அல்லாமல், வெறும் அமைதியை வைத்தே மிரட்டுகிறார் டைரக்டர் Alejandro Amenabar....ரத்தம், கொலை, கொடூரமான மேக்கப், துரத்தும் மர்மப்பேய், இவை எதும் இல்லாமல் நம்மை மிரட்டும் த்ரில்லர் திரைப்படம் "THE OTHERS".
முழுப்படமும் ஒரே வீட்டுக்குள் நடந்து முடிகிறது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்குவதாய் கதை. தன் வீட்டில் வேலை செய்து வந்த பணியாட்கள் அனைவரும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போக, புதிதாக வரும் மூன்று பணியாட்களுக்கு வீட்டை சுத்தி காண்பிப்பதிலிருந்து ...... ஒவ்வொரு அறைக்கும் செல்லும் முன் முன்னிருந்த அறையை பூட்டிவிடுகிறார் Grace. காரணம் அவளின் இரு குழந்தைகள்... Grace-ன் குழந்தைகளுக்கு Photo sensetive அலர்ஜி, எனவே பகல் வேளைகளில் அவர்கள் இருக்கும் அறைகளின் திரைகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். அறைகள் அனைத்தும் பூட்டபட்டே இருக்க வேண்டும். இதனாலேயே படம் முழுவதும் விளக்கு வெளிச்சத்திலேயே நகர்கிறது. ஆரம்பம் முதலே Grace-ன் காரக்டர் சற்று வித்தியாசத்துடனே கையாளப்படுகிறது. அதே போல் வரும் மூன்று பணியாட்கள், சற்று மர்மத்துடனே நடமாடும் ஆட்கள்.
முதல் இருவது நிமிடங்கள் படம் வெகு அமைதி. Anne, Graceயிடம் இந்த வீட்டில் நம்மை தவிர இன்னும் சிலர் இருப்பதாக கூறும்போது தான் படம் சற்று விறுவிறுப்புடன் தொடங்குகிறது. Victor என்ற சிறுவனை தான் அடிக்கடி பார்ப்பதாகவும் அவனுடன் பேசுவதாகவும் சொல்லும் Anne-யை நம்ப மறுக்கிறாள் Grace. பொய் சொல்வதாக தண்டிக்கவும் படுகிறாள் Anne .... Victor அவ்வப்போது Anne-ன் கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கிறான். இது அவனுடைய வீடு, நீங்கள் இந்த வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் தெரியப்படுத்துகிறான். முதலில் Anne சொல்லும் கதைகளை நம்ப மறுக்கிறார் Grace, ஆனால் அதற்க்கு பிறகு வரும் நிகழ்வுகளால், Grace Anne சொல்வது உண்மை தானோ என நம்ப தொடங்குகிறாள்.
Anne தினமும் இவர்களை இந்த வீட்டுக்குள் பார்ப்பதாக நான்கு உருவங்களை ஒரு தாளில் வரைந்து காண்பிக்கிறாள். ஒரு அப்பா,அம்மா மற்றும் சிறுவன் Victor. இவர்களுடன் சூநியிக்காரி போல் இருக்கும் ஒரு கிழவி. யார் அவர்கள் என்ற ஆராய்ச்சியிலும் சிறிது நேரம் இறங்குகிறார் Grace.
யார் இந்த நான்கு பேர் ? மூன்று பணியாகளின் மர்மங்கள் ? Grace-ன் வித்தியாசமான கேரக்டரிசம் எதனால்...? - இவைதான் மீதிப் படம்.
படம் நகர நகர, எப்படி முடியுமோ என்று எதிர்பார்ப்பு கடைசி நிமிடங்கள் வரை கூடிக்கொண்டே தான் போகிறது. கடைசியில் படத்தின் முடிவு படு வித்தியாசம்.
படத்தின் மூழுக்கதையும் எழுத வார்த்தைகள் வரவில்லை..நான் பார்த்த தில்லர் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று..படத்தில் குறிப்பிட பட வேண்டிய விஷயங்கள்:
*மொத்தமே ஆறு கேரக்டர்ஸ் தான். இந்த ஆறு கேரக்டர்ஸ் நடிப்பு oowh...குறிப்பாக குழந்தைகள் நடிப்பு.. பிரதான கேரக்டர் Grace-யாக (Nicole Kidman).
*காமெரா மற்றும் படத்தின் பின்னனி இசை படத்தின் உயிர் நாடி என்றே சொல்லலாம். அந்த தனி வீடு, அது அமைந்துள்ள பனி மூட்ட லொகேஷன்,
*என்ன படத்தின் சில காட்சிகள் Sixth sense படத்தை நினைவூட்டுக்கிறது.
*குழந்தையின் அழுகுரல், பியானோ வாசிப்பது இந்த இரு காட்சிகளும், அற்புதம்.
etc etc. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்...!!
October 24, 2009
KILL BILL- VOL I & II - விறுவிறுப்பான அதிரடி & பழிவாங்குதலும்
****IMDB RATING: (VOL-I)-8.2/10****TOP 250#143***
****IMDB RATING: (VOL-II-8.0/10****TOP 250#233***
சற்றும் ஒரு புள்ளியை கொண்டு 360 டிகிரி ஒரு வலையம் வரைந்து,அந்த வலையத்தை வலைமாக பார்க்கும் தட்டையான மனபாங்கு கொண்ட படைப்பாளிகிளுக்கு நடுவே வேறுகோணத்தில் அந்த வட்டத்தை புள்ளி, புள்ளியாக பிரித்து பார்க்கமுற்படுபவர்களை மனநிலை பிறழ்ந்தவன் என சமுதாயம் முத்திரை குத்தும்.
நாள் முழுதும் நடக்கும் நிகழ்ச்சிகளை மனது அட்டவணைப்படுத்துகையில் சில காட்சிகள் முன்னுக்கு பின்னாக பதியும், காலக்குழப்பம், காட்சிக்குழப்பம் என ஒரு தெளிவான அட்டவணை அமைய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்.அப்படி ஒரு தேர்ந்த புதிரைப்போல மிகுந்த ஆவலை நம்முள் கிளர்த்தும் திறன் கொண்டவை Quentin-னின் படைப்புகள். திரைமொழி அரிச்சுவட்டில் ஒரு திரையில் பல புதிய வார்த்தைகளை, கதைவேறு, களம் வேறு, அனுபவம் வேறு என்று புகுத்திய பெருமை இவருக்கு உண்டு. தன் படைப்புகளுக்கென கட்டமைக்கப்பட்ட படிமங்களுடனே ஒவ்வொரு புதுமுயற்சியையும் தருவதால், பழைய மொந்தை பழைய கள் என ஒதுக்கிவிட முடியாது.
இப்படி பழைய மொந்தை பழைய கள்(ளில்) ஒன்று தான் 2003 மற்றும் 2004-ல் வெளிவந்த KILL BILL VOL I & II.. இரண்டாம் பாகத்தில் கதைக்கான பின்புலனும், முதல் பாகத்தில் அரைவாசி கதையும் சொல்லப்படும் மிகவும் ஆர்வத்திற்குரிய படம்.
முதல் பாகத்தில் மண ஒத்திகை கோலத்தில் கொல்லப்படும் ஒரு பெண், தப்பி பிழைத்து தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் கதை பழிவாங்கல் ஒரு கலையாக, மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம். அறுந்து விழும் கால்கள் கைகள் தலைகள், ரத்தம், கத்தி என படம் ஒருவித வன்முறை உலகில் நமை ஆழ்த்துகிறது.
இரண்டாம் பாகத்தில் அந்த மணப்பெண் யார் எதற்காக கொல்லபடுகிறால் என விரிகிறது. முதல் பாகத்தின் விறுவிறுப்போ, ஈர்ப்போ இந்த படத்தில் இல்லை, எனினும் பார்த்தாக வேண்டிய படம். இந்த படத்தைப் பற்றியோ அல்லது படத்தின் கதையையோ எழுத ஆரம்பித்தால், பக்கம் பக்கமாக எழுத வேண்டிவரும்.
இவரது படத்தில் அவர் கையாலும் அடிப்படை யுத்திகள் என்னை பொறுத்த வரை:
*கேமராக்கோணம் என பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகவும் இயல்பான கோணங்கள் ஆனால் பாத்திரங்கள் வித்தியாசமான கோணங்களில் தென்படுகிறார்கள்.
*கூர்மையான வசனம், இயல்பான மொழியில் பக்கம் பக்கமாக பேசும் பாத்திரங்கள் பார்க்கும் போது நமக்கு எதோ ஒரு நாவல் படிப்பதை போன்ற உண்ர்வு வரும்..
*கதைக்களத்தில் நம்மை மெதுமெதுவாக மூழ்கடிக்கும் அவசரமற்ற கதைநகர்த்தல்.
*பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்.
*ஒருவர் பேசும்போது, பேசுபவரி விட்டு கவனிப்பவரை காண்பிப்பது.
*ஒரு படைப்பிற்கும் அடுத்த படைப்பிற்கும் படிமங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்துவது.
*பழைய இசையின் மீதான் அதீத விருப்பம். எப்போழுதும் கார், பப்’களில் வழியும் jAZZ, Country types.
இவரது மற்ற படைப்புகள்: Pulp Fiction, Resrvior Dogs, Jackie Brown, Death Proof & Inglourious Basterds.
மனதை உருக்கும் படங்கள் ஆயிரம் இருக்கிறது. வெவ்வேறு மொழிகளில், அவரவர் கலாச்சாரத்தை முன்வைத்து அவை செல்லும் கருத்துக்கள் ஆயிரம் இருக்கலாம். Quentin-னின் படைப்புகள் அத்தகையன அல்ல. நிச்சயம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் ஒரு மிக சிறந்த சினிமா அனுபவத்திற்காக..
திரையுக்தி, ஒருவித அழகியல் வன்மம், அதிர்ச்சி எனும் பிரிவிகளில் தவிர்க்க முடியாத இயக்குனர். அவரின் அனைத்து படங்களையும் நீங்கள் ரசிக்கலாம். திரையனுபவத்தின் இன்னொரு பரிமாணம் Quentin Tarantino
My Rating: 8.5/10
September 27, 2009
மெமண்டோவிலிருந்து.....கஜினிக்கு (எனது பயணம்)

எல்லோருக்கும் தெரிந்த செய்தியாக இருந்தாலும்....ஏனோ இப்டத்தை பற்றி எழுதனும் தோனுச்சு....என் மனசுல....
"மெமண்டோ” - கிறிஸ்டோபர் இயக்கத்தில், 2000-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான. இந்தப் படத்தினை தழுவி, முருகதாஸ் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் “கஜினி”.
நினைவுகள் மறப்பது என்ற பொதுவான அம்சம் இந்த இரண்டு படங்களிலும் இருந்தாலும், கதை சொல்லிய விதத்தில், இரண்டு படங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
தலையில் பலமாக அடிபட்ட கதாநாயகனால், புதியதாக நினைவுகள் எதையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை. பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை, அந்த பதினைந்து நிமிடங்களில் நடந்த அனைத்தும் மறக்க, மீண்டும் புதிய நினைவுகளுடன் அடுத்த பதினைந்து நிமிடங்களை எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. இந்த நிலையிலும், தனது மனைவியை கொன்றவனின் முகம் மட்டுமே நினைவினில் இருக்க, அவனை பழிவாங்கும் நோக்கத்தில் கதாநாயகன் போராடுவதுதான் இரண்டு படங்களின் கதை.
ஆனாலும், கதை சொன்ன விதத்தில் மெமண்டோ பல படிகள் கஜினியை விட மேலே நிற்கிறது. எப்போதும் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி இப்படி பார்த்த நமக்கு, கடைசி காட்சியில் ஆரம்பித்து முதல் காட்சியை நோக்கி கதையைக் கொண்டு செல்கிறது மெமண்டோ.
தவிர, ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யும் போது, தமிழுக்கு ஏற்ப கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பார் இயக்குனர் முருகதாஸ். இந்த மாற்றங்கள்தான் கஜினியின் வெற்றிக்குக் காரணமென நான் நினைக்கிறேன்.
•திரைக்கதை சொல்லும் பாணி-
ஒரு தமிழ் படத்தின் திரைக்கதை எவ்வாறு இருக்க வேண்டுமோ, அதன்படி கஜினியில் திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர். ஒரு புள்ளியில் ஆரம்பித்து, முற்றுப் புள்ளியை நோக்கி நகரும் வழக்கமான பாணிதான். மெமண்டோவைப் போல திரைக்கதையை இடியாப்பச் சிக்கல் ஆக்கியிருந்தால் படம் பப்படம் ஆகியிருக்கும்.
•சூர்யா-
அசின் காதல் காட்சிகள் - தமிழில் இது ஒரு குறிப்பிடத்தக்க அழகான மாற்றம். ஆங்கிலத்தில் காதல் காட்சிகளென்று எதுவும் கிடையாது. ஆனால் தமிழில் இரண்டு மூன்று டூயட்டுகள் இல்லையென்றால், படம் ஓடுவது கடினமாயிற்றே. அதனால் அசின் அறிமுகம். ஆனால் அந்தக் காட்சிகளும், "சுட்டும் விழி சுடரும்" படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
•வில்லன்-
தமிழ்க் கதாநாயகர்கள் அடித்து வீழ்த்த வில்லன்கள் தேவை (விஜய் போன்ற கதாநாயகர்களுக்கு குறைந்த பட்சம் 50 பேராவது தேவை!).கஜினியிலும், ஒன்றல்ல, இரண்டு வில்லன்கள். இப்பத்தின் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. அதிலும் இறுதி சண்டைக் காட்சியில் தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்பாக செய்திருந்தனர். ஆனால், மெமண்டோவில் சண்டைக்காட்சிகளே இருக்காது.
•மசாலாப் பாட்டு-
'சி' வகுப்பு ரசிகனையும் திருப்திப் படுத்த வேண்டுமே, அதற்காக நயன்தாராவும், அந்த ஒரு பாட்டும். இந்த மாதிரியான பாடல்களை வைக்க மட்டும் தமிழ் இயக்குனர்களுக்கு எப்படியாவது ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.
தமிழ்ப் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த காலங்களிலும், பத்திரிக்கைகளில் 'தமிழ் மசாலாத்தனங்கள் நிறைந்த படம்' என்று வரும் போது, பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரிந்ததில்லை. ஆனால், இப்போது மற்ற மொழிப் படங்களை பார்க்க ஆரம்பிக்கும் போதுதான் 'தமிழ் மசாலா'வின் அர்த்தம் தெரிகிறது. :) இப்படி, தமிழ்ப் படங்களுக்க்காக, தன் சுயத்தை இழந்த நல்ல திரைக்கதைகள் ஏராளம்.
இவ்வாறு திரைக்கதையில் வித்தியாசம் காட்டிய மற்ற தமிழ் படங்கள் ஆய்த எழுத்தும், விருமாண்டியும் ஓரளவுக்கு வெற்றி பெற்றன.
MY Rating: 8 / 10 (Memento)
September 8, 2009
Casablanca - 1942 (காலத்தை வென்ற காதல் / காவியம்)
எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை........உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் இந்த திரைப்படம்
Humphrey Bogart நடிப்பு- வசன உச்சரிப்பு, Ingrid Bergman அழகு, வசனங்கள், இனிமையான பின்னணி இசை, பாடல்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் - Casablanca திரைப்படத்தைப் பரிந்துரைக்க இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள Casablanca என்ற ஊரில் நடக்கும் கதை.
புரட்சியாளர்களும் பொதுமக்களும் Casablanca வழியாக, போலி விசா மூலமாக ஜெர்மன் நாசி படைகளிடமிருந்து அமெரிக்காவிற்கு தப்பிக்கிறார்கள். விக்டர் ஜெர்மனிக்கு எதிராக கலகம் செய்யும் புரட்சியாளன். மனைவி இல்சாவுடன் (Ingrid Bergman) அமெரிக்கா தப்பிச் செல்ல கேசபிளாங்கா வருகிறான். ஆனால் ஜெர்மன் இராணுவ அதிகாரி உள்ளூர் காவல் அதிகாரி மூலமாக அவர்களுக்கு விசா கிடைக்காமல் தடுக்க முயல்கிறார். ஒரு தரகன் மூலமாக போலி விசா வாங்குவதற்கு ரிக் (Humphrey Bogart) நடத்தும் கஃபே-விற்கு வருகிறார்கள். அந்த தரகன் விசா பத்திரங்களை பாதுகாப்பிற்காக ரிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வரும்போது போலீசாரால் கொல்லப்படுகிறான்.
ரிக் இல்சாவின் முன்னாள் காதலன். புரட்சியாளனான ரிக், சில வருடங்களுக்கு முன் இல்சாவை பாரீஸில் சந்திக்கிறான். ஏற்கனவே விக்டரை மணந்த இல்சா, விக்டர் போராட்டத்தில் இறந்துவிட்டதாக தகவலறிந்து துக்கத்தில் இருக்கிறாள். ரிக்-கும் இல்சாவும் காதல் வயப்படுகிறார்கள். பாரீஸை ஜெர்மன் ரானுவம் கைப்பற்றிய நாளில் ரிக்-கும் இல்சாவும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் விக்டர் உயிருடன் இருப்பதாக இல்சாவிற்கு செய்தி வருகிறது. ரிக்கைப் பிரிந்து விக்டரைத் தேடிச் செல்கிறாள் இல்சா. அவளைக் காணாத ரிக் கேசபிளாங்காவிற்கு தனியாகக் கிளம்பி வந்து கஃபே நடத்துகிறான். அங்கிருந்தபடியே போராளிகளுக்கும் மறைமுகமாக ஆதரவளிக்கிறான்.பல நாட்களுக்குப் பிறகு கஃபேயில் சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் ரிக்-கும் இல்சாவும் அதிர்ச்சியடைகிறார்கள். விக்டரும் இல்சாவும் தப்பிச் செல்லத் தேவையான விசா பத்திரங்கள் ரிக் வசம் உள்ளன. விக்டரும் இல்சாவும் பத்திரமாகத் தப்பிச் செல்வார்களா, ரிக்-இல்சா மீண்டும் இணைவார்களா, ஜெர்மன் இராணுவ அதிகாரியால் விக்டருக்கும் ரிச்சர்டிற்கும் இருக்கும் ஆபத்து நீங்குமா என்பதை வெள்ளித் திரையில் காண்க.
முக்கோனக் காதல் கதைகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறத்தக்க அளவு மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் Casablanca. அதே நேரத்தில் இதை காதல் படம் என்று வகைப்படுத்தவும் முடியாது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாஜிப்படைகள் செய்த கொடுமைகளையும், பொதுமக்கள் பட்ட அவதிகளையும், புரட்சியாளர்கள் சந்தித்த போராட்டங்களையும் வசனங்கள் மூலமாகவும் சிறுசிறு கதாபாத்திரங்கள், ரிக் நடத்தும் கஃபேயில் நடக்கும் காட்சிகள் மூலமாகவே உணர்த்தியிருப்பார்கள்.
அமெரிக்கா தப்பிச் செல்ல விசா வாங்குவதற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராய் இருப்பதும், ஜெர்மன் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தங்களை ஆங்கிலேயர்களாகக் காட்டிக்கொள்ள அரைகுறை ஆங்கிலம் பேசும் தம்பதிகளும், தனக்கு விசா கிடைக்காவிட்டாலும் தன் குடும்பத்தார் தப்பித்தால் போதுமெனத் துடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் மிகச் சிறப்பாக அன்றைய சூழலை படம்பிடித்திருக்கிறார்கள்.
இருதலைக் கொள்ளியாகத் துடிக்கும் இல்சா, அவள் மீது கொண்ட காதல் சற்றும் குறையாத ரிக், அதைப் பற்றி ஏதுமறியாமல் தன் மனைவி மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் விக்டர் என மூன்று கதாபாத்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
ரிக்-கிற்கும் இல்சாவிற்கு மிடையேயான காதல் காட்சிகளும் வசனங்களுமே இந்த படத்தைத் திரும்பத் திரும்ப என்னை பார்க்க வைக்கிறது.
ரிக்-காக (Humphrey Bogart). வசன உச்சரிப்பும் Body language Facial Expressions ...அவரின் ரசிகனாகிவிட்டன. அதே போல் Ingrid Bergman அழகு, நடிப்பு. ஒரே காட்சியில் வசனங்களுக்கேற்றவாறு சட்டென மாறும் முகபாவங்கள் ரசிக்கவைக்கும். படத்தில் பாடல்களும் உண்டு. குறிப்பாக ரிக்-கின் கஃபேயில் பாடகராக இருக்கும் சாம் இல்சாவின் விருப்பத்திற்காக பாடும் ஒரு பாடல். அந்த பாடலின்போது Ingrid Bergman நடிப்பும் பாடலின் முடிவில் போகார்ட்டின் எண்ட்ரியும் அட்டகாசம். ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும்.
My Rating: 9.5/10
June 23, 2009
Deck The Halls......100% பொழுது போக்கு
****IMDB RATING:4.4 /10****
கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட இரு அண்டை வீட்டுகாரர்களின் பூசல்தான் 2006 நவம்பர்-ல் வெளிவந்த நகைச்வை கலந்த குடுமப திரைப்படம் தான் "Deck The Halls"
சரி வாங்க கதையின் ஒரு சின்ன அறிமுகம்......
Steve தன் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிறன். அப்போது தான் அவன் பக்கத்துவீட்டிற்கு குடி வருகிறார்கள் Buddy Hall & family.
Hall ஒரு கார் விற்பனையாளார். மிக குறைந்த வருமானம். அவன் மனைவியோ எப்போதும் அவனை பணத்திற்காக அவனை நச்சரிக்கிறாள். Hall தான் எதாவது சாகசம் செய்து புகழ் பெறவேண்டும் என நினைக்கிறான். அதன் முயற்ச்சியாக கிறிஸ்மஸ் பண்டிகையின் போது வீட்டை விளக்குகளால் அலங்கரித்து வானில் இருந்து பார்த்தாலும் தெரியும் படி செய்ய பல முயற்சிகளை மேற் கொள்கிறான்.
ஆனால் பல ஆண்டுகளாய் வாழும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் Steve குடும்பமே கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சனையாக கொண்டாடி புகழ் பெற்று வருகின்றனர். இந்த தருணத்தில் புதிதாக குடி வந்த Buddy யின் முயற்சிகளை கெடுக்க Steve செய்யும் குளறுபடிகளும் அதை Buddy எப்படி முறியடிக்கிறான் என அடிக்கும் லுட்டிகள்...

என்னதான் இவர்கள் இருவரும் போட்டி பொறாமையுடன் இருந்தாலும்.... இவர்கள் குழந்தைகளும் மனைவிகளும் இதை விரும்புவதில்லை. அவர்க்ள் ஒரே குடும்ப்மாக இருக்க வேண்டும் என எவ்வளவோ முயற்ச்சிகின்றனர்.
ஆனால் Buddy , Steve இருவரும் அவர்களின் பேச்சை கேட்க மறுப்பதால் இரு மனைவிகளும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிறிஸ்மஸ் பண்டிகையை விடுதியில் கொண்டாட போவதாய் சொல்லி விட்டு போய் விடுகின்றன்ர். இறுதியில் Buddy & Hall தான் நினைத்ததை நிறைவேற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட நேரத்தை கொள்ளை கொள்ளும்....அத்தனை பேரின் இயல்பான நகைச்சுவை நடிப்பும் பார்பவர்களுக்கு 100% பொழுது போக்கு.....
குறிப்பாக கிறிஸ்மஸ் பாடல்கள் குறும்பாடல்களாக வந்து போவது இனிமை.
My Rating:6.5/10
June 6, 2009
UP-2009 (Summer Special)

****IMDB RATING:9/10**
****TOP 250#15****
இதோடு சேர்த்து மொத்தம் பத்தே படங்கள். போன ஒன்பது படங்களில் மொத்தம் 22 ஆஸ்கர் விருதுகள். ஒரு படம் கூட ஆஸ்கர் வாங்காமல் வந்ததில்லை. So...வரும் வருடம் இன்னும் ஒன்னு / இரண்டு.... வாங்க, UP இப்பவே ரெடி.
அது எப்படி... Pixer மட்டும்.. ஒவ்வொரு வருடமும் சொல்லி சொல்லி அடிக்குது? ஒவ்வொரு Pixer-ரின் படங்களும் அதனோட எதிர்பார்ப்பு எல்லையை உயர்த்திக்கிட்ட இருக்கும் இத்தருணத்தில், மனதில் பல கேள்விகள் ஏல...அதில் ஒன்று தான்....இவர்களால் மட்டும் வெற்றியின் சிகரத்தை எப்படி எட்டிப்பிடிக்க முடிகிறது தளராமல்?.....
Diseny-யின் (தனியான) தயாரிப்போ, Dream Works தயாரிப்போ.. Characterகளை திரையில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் போது, Pixer Films-ல் இருந்து வெளியே வரும் பொம்மைகள்,மீண்கள்,எறும்புகள்,எலிகள்,கார்கள், என எந்த ஒரு பொருளாக இருக்கட்டும்.. அந்த பாத்திரங்களோடு நமக்கு ஒரு இனம் புரியாத ஒட்டுதல் வந்திருக்கும்.
போன ஒன்பது படங்களில் இவ்வறான என அன்னியப்பட்ட Characterகளை வைத்து வித்தை காட்டி நம்மை கட்டி போட்டவர்கள், முதன் முறையாக மனிதர்களை மையமாக வைத்து எடுக்கும் போது... விட்டுவிடுவார்களா....என்ன??

கதையின் நாயகன் Carls..... ‘Pirate Falls’-ல் இருக்கும், "Swenni" என்கிற கற்பனையான ஒரு பறக்க முடியாத பறவையின் எலும்புக்கூட்டை Carls, விஞ்ஞானிகளுக்கு காட்ட, அவரை ஏமாற்றுகாரன் என் சொல்லி பட்டம் கட்டி அனுப்பி விடுகிறார்கள். எப்படியாவது ஒரு "Swen"-ஐ பிடித்து காட்டுறேனா இல்லையான்னு பாரு’-ன்னு Carl's சபதம் போட்டுவிட்டு சென்று விட...,
Carl-லும் Ellie-யும் இப்பொழுது வளர்ந்து, பலூன் விற்க ஆரம்பித்து, குழந்தையில்லாமலேயே வயதாகிவிட..., Ellie இறந்துவிட.. இப்பொழுது கார்ல் தனி ஆளாய் அந்த ப்யானோவின் பின்னணி இசை......, அற்புதம்.
Carl's Character நம்மோடு ஒன்றியது அப்போதுதான்!
ஒரு பிரச்சனையில் Carl-லுக்கு, முதியோர் இல்லத்துக்கு போக வேண்டிய கட்டாயம். Ellie-யோடு இருந்த, வாழ்ந்த வீட்டை விட்டு போக மனமில்லாத Carl's, சிறு வயது ‘Pirate Falls’ ஆசையை நிறைவேற்ற, பலூனை வீட்டு மேல் கட்டி, வீட்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தென் அமெரிக்கா கிளம்பிவிட, வேண்டாத ஒட்டுதலாக Charles என்ற சிறுவன் சேர்ந்து கொள்கிறான்.
பாலுன் உள்ள Helium இறங்குவதற்குள் வீட்டை சரியான இடத்திற்கு கொண்டு போக வேண்டிய கட்டாயத்தில் Carl's, வேட்டையாட துடிக்கும் நாய்களிடமிருந்து, Swen-னைப் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் Charle's,
தன் ‘ஃஏமாற்றுகாரன்’ பெயரை மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் Carl's....
Chaseing, Action, Adventure, செண்டிமெண்ட் (எப்பவும் போல்) என... தியேட்டரில்.. குட்டிகளுக்கும், அவ்வளவு ஏன்.... வளர்ந்தவர்களுக்கும் கொண்டாட்டம் தான்.
டெக்னிகல் தொழில் நுட்பங்களின் நேர்த்தியை, இனிமேல் வேறு யாராவது சொல்லித்தான் Pixer-ரை பற்றி தெரியத்தேவையில்லை என்றாலும்,....இது Pixer-ரின் முதல் 3D படம். சும்மா... புகுந்து விளையாடி கலக்கி இருக்காங்க சொல்ல நினைச்ச.....
Diseny-யின் Monsters VS Aliens -ல் வரும் 3D Effects கூட இல்லாத 3D படம் என்பது தான் பெரிய சோகம்.
இந்த படத்தின் Depth பெரும்பாலும் Flat-யாகவே இருப்பது, மொத்த படத்திற்கும் ‘திருஷ்டி பொட்டு’ வேச்சமாதிறி..
இதை 3D-ன்னு சொல்லி விற்றது, Diseny-யின் வியாபார தந்திரம்....
2D-யில் பார்த்திருந்தாலும் ஒன்றும் கெட்டிருக்காது; Atleast Title-காவது இன்னும் Better-யாக இருந்திருக்கும் என்பது என்னோட கருந்து.
இந்த படத்தில் மனிதர்களை ‘டீல்’ செய்வதாலோ என்னவோ... மற்ற ஒம்பது படங்களை விட இதில் செண்டிமெண்ட் அதிகம் (Wall-E -ஐ விடவும்). அதுவே படத்தின் வேகத்தையும் குறைக்கிறது. Wall-E-யில் முயற்சித்தை போலவே இதிலும், தொடர்ச்சியாக சில நிமிடங்களுக்கு வசனங்களே இல்லாத, பியானோ பின்னணியிசை காட்சிகள்.
ஆனால் Carl's-லோ, Charles-லோ சிரித்தால் நாமும் சிரிப்பதும், அவர்கள் சோகமானால் ஒட்டு மொத்த தியேட்டரும் சோகமாவதும் Pixer படங்களில் மட்டுமே நடக்கும் ஒரு அதிசயம்.
ஒரு ஆச்சரியம்/அதிர்ச்சி....! கார்ட்டூன் படங்களில், ‘காட்சி வன்முறை’ என்பது ரொம்ப சகஜம் என்றாலும்... எனக்கு நினைவு தெரிந்த வரை... முதன்முதலில் ‘இரத்தம்’ காட்டும் Pixer படம் இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன் இறப்பது மாதிரியான காட்சிகள் (Finding Nemo, The Incredibles) வந்திருந்தாலும் ‘இரத்தம்’ வந்திருக்காது. ஒருவேளை "Rated G" படங்களின் ‘அடுத்த கட்டம்’ போலிருக்கிறது.
Up... Pixer-ரின் (என்னை பொறுத்தவரையில்) ‘The Best' இல்லையென்றாலும், இது வரை வெளிவந்துள்ள கோடை விடுமுறை படங்களில், சந்தேகமில்லாமல் The Best..!
(ஒரு சிறு தகவல் Diseny-யின் எல்லா அனிமேசன் படங்களும் இனி 3D-யில் மட்டுமே வருமாம்).
June 2, 2009
Ratatouille... ஆசை யாருக்குதான் இல்லை.
**** IMDB RATING 8.2/10****TOP 250:#161****
Pixer தயாரிப்பில் 2007-யில் வெளிவந்த மற்றொரு படம் தான் Ratatouille நான் பார்த்து என்னை மறந்த ஒரு படம்.. ஒரு எலிக்கு சிறந்த சமையல்காரர் ஆகும் ஆசை வருகிறது. அதை எப்படிச் சாதிக்கிறது என்பது தான் கதை. இந்த படத்தை பற்றி உங்களுடன்....
உலகின் தலைசிறந்த உணவு வகைகள் செய்யும் நாடான பாரீஸ், அதில் தலைசிறந்த உணவகம் தான் Chef Auguste Gusteau உணவகம் என்றும்,,அவர் எழுதிய புத்தகம் "Anyone Can Cook "மிகவும் பிரபலம் என்று ஒரு தொலைக்காட்சியில் அவரை பற்றி .. என படம் தொடங்குகிறது...
REMY-இப்படத்தின் கதாநாயகன் அல்ல கதையின் நாயகன்.. இவன் மற்ற எலிகளில் இருந்து சற்று மாறுபட்டவன்..இவனிடன் வாசனை பிரிந்து பார்க்கும் சத்தி கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறது... இதனால் தன் வாழ்கையை உன்னும் உணவை பிரிந்து பார்த்து உன்னும் பழக்கம் கொள்கிறான்.இவனது திறமையை கண்டு அவன் அண்னன் மட்டும் ஆச்சிரியப்பட,வெறு யாரும் எற்று கொள்வதாய் தெரியவில்லை..
ஒரு கட்டத்தில் தன் திறமையை வைத்து தன் கூட்டத்தை ஒரு கட்டத்தில் உன்னும் உணவில் விசம் இருப்பாதாக கண்டு பிடித்து ஆபயாத்தில் இருந்து காப்பாற்ற.. உணவு பரிசோதிக்கும் பணியை கொடுக்கிறார் அவன் அப்பா "எலிகளின் தலைவர்"..... இந்த சம்பவம் நடந்த பிறகு,, தன் அப்பாவிடம் உணவை திருட தான் சாப்பிட வேண்டும்மென்றால் அதையை சமையில் இருந்து திருடலாமே என்று விவாதம் செய்ய,தன் அப்பா நாம் எலிகள்,மனிதர்களிடம் விலகி வாழ வேண்டும் என்று சொல்கிறார்,,

தன் அப்பாவுக்கும் தெரியாமல் சமையல் அறையில் செல்ல கழிக்க,,அங்கே உணவுகளின் வகைகள், அதனை தாயரிக்கும் முறை..எப்படி என்பதையும்
Chef Auguste Gusteau- வின் புத்தகங்களில் மற்றும் அவரது தொலைகாட்சி தொடரில் தெரிந்து கொள்ள தன் நேரங்களை கழிக்கிறான்.
ஒரு நாள் தன் அண்னனை அழைத்து சமையல் அறைக்கு செல்ல தன் குருவாக எற்று கொண்ட Gusteau பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதை சொல்லும் காட்சியை கண்டு அதிர உறக்கத்தில் இருந்த வீட்டின் உரிமையாளர் விழித்து கொள்ள....அவர்கள் இடத்தில் இருந்து தப்பிக்க முயலும் போது தன் குடும்பத்தில் இருந்து பிரிய நேர்கிறது..
தன்னை காப்பற்ற யாரேனும் வருவார்கள் என தன் கையில்யுள்ள புத்தகத்த வாசித்து கொண்டிருக்கிறது..நேரங்கள் நகர..யாரும் வரவில்லை..பசியும் தனிமையும் தன்னை கொள்ள உணவை தேடி புறப்படும் தருணத்தில் தான்... Gusteau-வின் உணவகத்தை கண்டு இத்தனை நாள் தான் பாரீஸ் நகரத்தில் வசிக்கிறோம் என்ற உண்மையை உணர்கிறது..

தன்னை காப்பாற்றிய ஒருவனை கொலை செய்ய மறுத்து Remy-யை விடுவிக்கிறான்.அதற்கு நன்றி கடன் செலுத்தும் வகையில், Linguini-க்கு உணவு தாயரிக்கும் பணியில் உதவுகிறது.


எல்லோரும் Egoவின் உணவை தாயரிக்க சொல்ல தடுமாறுகிறான். அப்போளுது Linguini உண்மையை சொல்ல எல்லோரும் அதனை எற்று கொள்ள மறுத்து சமையில் அறையில் இருந்து வெளியே செல்கிறார்கள்.
இதன் பின், Linguini எல்லாம் முடிந்து விட்டது என்று கவலை கொள்ள, Remy-யை தன் குடும்பத்தினர் வந்து அலைக்க... சற்று தடுமாறிய மீண்டும் உணவகத்திற்கு மீண்டும் உணவகத்திற்கு செல்ல வழியில் தலைமை Chef-யிடம் மாட்டிக் கொள்கிறது.
பின்னர் தான் குடும்பத்தின் உதவியுடன் விடுவிக்கப்பட்டு....பொத்த குடும்பமும் Ego மற்றும் மற்ற Customers காண உணவு வகைகளை தயாரிக்கும் பணியில் இடுபடுகிறார்கள். இதன் இடையில் Health Inspector ஒருவர் அங்கு வருகை தர.....
கோபித்து செல்லும் அவன் காதலி வழியில் Gusteauவின் "Anyone Can Cook " புத்தகம் கண்டு மனம் மாறி மீண்டும் திரும்ப....Remy-யுடன் சேர்ந்து Egoவிற்க்காண உணவை தயரிக்க உதவுகிறாள்.
உணவு Egoவிற்க்கு மிகவும் பிடித்து போக,.. Remy தயரித்த உணவை Linguini தயாரித்தாக எண்ணி பாரட்டுகிறார்.ஆனால் Linguini உண்மையை சொல்ல சற்று குழ்ப்பத்தில் செல்லும் Ego.. விமர்சனத்தில் proclaiming " the chef to be "the finest in Paris" while neglecting to reveal the chefs' true identity என எழுதிகிறார்.
ஆனால் சந்தோஷ்ச நிகழ்வுகள் நீண்ட நாள் நிடிப்பதில்லை,தலைமை Chef-வும், Health Inspector-யும் சேர்ந்து உணவகத்தில் சுகதார கேடு இருப்பதாக சொல்ல உணவகம் சீல் வைக்க படுகிறது.Ego-வும் தன் வேலை இழ்க்கிறார்.

May 30, 2009
One Flew Over The Cuckoo's Nest (1975)
**** IMDB RATING 8.9/10****TOP 250: #8****
ஒரு திரைப்படம் எற்படுத்தி செல்லும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு அதன் நிலைகுலையாமல் மனதில் நிற்கும் ஆனால் அது உலக அளவில் சிறந்த படமாக கருதப்படும். அப்படிபட்ட ஒரு சில படங்களில் ஒன்றுதான் ......
1975-ல் வெளியான இப்படம் ஆஸ்கரில் பல விருதுகளை (சிறந்த திரைக்கதை,சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை)என வாங்கிவிட்டது. இந்தபடத்தை பற்றி நான் தெரிந்துகொண்டது என் வலைதள நண்பர் திரு.சரவணன் தளத்தில் இருந்துதான். என்னை மீண்டும்..மீண்டும் பார்க்க தூண்டும் சில திரைபடங்களில் இதுவும் ஒன்று... ஒவ்வொரு முறையும் புது புது பரிமாற்றத்தில்.
மேலும் இப்படத்தை பற்றி பல கருத்துகளை பலர் எழுதிவிட்ட நிலையில் நான் இறுதியாக ஒரு சில வரிகள்....
ரம்மிமான இசையில் அழகான காலை பொழுதில் சாலையில் ஒரு கார் செல்கிறது... மன நல காபகத்தின் எல்லாம் உறங்கி எழுகின்றனர் என்று படம் துவங்குகிறது. (R.C McMurphy) கதையின் நாயகன் சிறைச்சாலையில் தன் அடங்காசம் தாங்க முடியாத அதிகரிகள்....மனநோய் இருப்பதாகச் சொல்லி மனநல காப்பகத்திற்குக் கொண்டுவரப்படுகிறான்.
அந்த மனநலக் காப்பகத்தில் மனநோயின் பல்வேறு கட்டத்தில் இருப்பவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். நாயகன் பதினேழு மன நோயாளிகள் இருக்கும் வார்டில் அனுபதிக்கபடுகிறான். (Ratched) என்னும் நர்ஸ் அந்த வார்டின் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். நோயாளிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களின் மனநோய்க்கான காரணத்தை நினைவூட்டியே அவர்களின் பயத்தை அதிகரித்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
வாழ்க்கையின் ஓவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்று கொள்கை கொண்ட McMurphy Ratched-ன் கண்டிப்புக்கு அடங்க மறுக்கிறான். Ratched அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் மன நோயாளிகளாகவே வைத்திருப்பதாகச் சொல்கிறான் McMurphy. இதனால் இருவருக்கும் இடையில் கருந்து வேறுபாடு எற்ப்படுகிறது.
Ratched-யுடன் சண்டை போடுவதும், கருத்தில் மறுத்து பேசுவதும் என சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பதை கண்ட மற்ற நோயாளிகள் அவனிடம் நட்பு கொள்கின்றனர். ஆரம்பத்தில் McMurphy வாழ்க்கை மேல் உள்ள பயம் காரணமாக ஊமை செவிடனாக நடிக்கும் Cheif என்ற நோயாளியிடம் நெருங்கிப் பழகுகிறான்.பின்னர் இவர்களின் நட்பு வலுவடைகிறது
அத்தனை நாட்களாக Ratched-ன் கட்டுப்பாட்டில் நோயாளிகளின் பயத்தை குறைக்க காபகத்தின் கண்னில் மண்னை தூவி-விட்டு, அந்த வார்டில் உள்ள நண்பர்களை அழைத்து கொண்டு கப்பல் ஓட்ட,மீன் பிடிக்க கற்றுதருதல்.. என ஒரு நாள் பொழுதை கழிக்க வைக்கிறான்.
இதனால் Ratched-க்கும் McMurphy-க்கும் சண்டை வலுக்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில்,Ratched இருக்கும்வரை தன்னால் காப்பகத்தில் இருந்து வெளியேற முடியாது என்று உணரும் McMurphy தனது நண்பன் Cheif தப்பிக்க முடிவெடிக்கின்றனர்.
தப்புவதற்கு முந்தைய இரவு நோயாளிகளுடன் குடித்து உல்லாசமாகக் கழிக்கிறான். இரவு எல்லாம் முடிந்து புறப்படம் நேரத்தில்.... அவர்களில் ஒருவன் தன் அழைத்து வந்த பெண்னிடம்..காதல் கொள்ள...அவர்கள் இருவரையும்...போதையில் அனைவரும் உறங்க அடுத்த நாள் அத்தனை பேரும் Ratched-யிடம் சிக்கிவிடுகின்றனர்.
அப்போது நடந்த உரையாடல் எல்லை தாண்ட...Ratched-ன் தோழியின் மகன் தற்கொலை செய்து கொள்கிறான்.இதனால் ஆத்திரம் அடைந்த McMurphy Ratched-யை தாக்க முற்படுகிறான். அதற்குள் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு தனியாக அழைத்துச் செல்லப்படுகிறான்.
பின்பு அறுவை சிகிச்சை மூலம் மூளையின் ஒரு பகுதியை துண்டித்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட நடைபிணமான நிலையில் அவனை மீண்டும் ஒரு விடியலில் கொண்டு வருகிறார்கள். அவனை அந்த நிலையில் காணத் தாங்காமல் Cheif McMurphy-யை கொன்றுவிட்டு தப்பிக்கிறான். வலிமையான பின்னணி இசையுடன் படம் முடிகிறது.
முடிவாக......திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாகக் கழிக்கும் McMurphy, காப்ப்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்டிப்பான நர்ஸ் Ratched, மனநோயின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் நோயாளிகள் என இப்படத்தின் கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் தங்குபவை.அத்தனை நடிகர்களுமே தங்கள் தேர்ந்த நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலுவூட்டியிருக்கிறார்கள். நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பல காட்சிகள் நம்மை கவரும். McMurphy மனநல காப்பகத்திற்கு வரும் ஆரம்பகட்ட காட்சிகள், நோயாளிகள் தங்கள் தயக்கம் நீங்கி அவனுடன் பழகும் காட்சிகள், அவன் தப்பிப்போகும் முன்னிரவு நோயாளிகள் உல்லாசமாக இருக்கும் காட்சி, இறுதியில் Cheif அவனைக் கொன்றுவிட்டு தப்பிக்கும் காட்சிகள் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் பெரிது.
One Flew Over the Cuckoo's Nest கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
My Rating: 10/10
May 27, 2009
WALL-E....
Best Animated Feature Film of the Year
Winner: WALL·E (2008) - Andrew Stanton
இந்த படத்தை பற்றி நான் சொல்ல வேண்டிதில்லை....நான் இப்படம் வெளிவந்த சில நாட்களில் பார்த்துவிட்டேன், அன்று என் டையிரில் எழுதியதை இன்று என் முதல் பதிவாக பதிக்கிறேன்,அது மட்டும் அல்ல PIXER-films தயரிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் அருமை... அனைத்தும் பார்த்து விட்டேன்... பின் வரும் நாட்களில் எழுதுகிறேன்...
உங்கள் ஆதரவு எப்பவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...

WALL-E அவர்களை மீண்டும் மனிதர்களாய் மாற்றும் அழகான கவிதை.
700 வருட விண்வெளி சொகுசு வாழ்க்கையில் மனிதர்கள் மெல்ல மெல்ல பொம்மைகளைப் போல மாறிவருவதை காலவரிசைப்படி தொங்கவிடப்பட்டுள்ள அவ்விமான கேப்டன்களின் புகைப்படங்களில் தெரிகிறது. பழுதடைந்த ஈவாவை சரி செய்யும் போது அதனுள் உயிருள்ள செடியைக் கண்டெடுக்கிறார்கள். முதன்முதலாக செடியைப்பார்க்கும் விமான கேப்டன் தனது கம்யூட்டரிடம் விளக்கம் கேட்டு செடிகளைப் பற்றிய புத்தகத்தைப் பெறுகிறான். புத்தகத்தை எப்படி பிரித்து படிக்க வேண்டும் என்பதைக் கூட அக்கம்யூட்டர் தான் சொல்லித்தருகிறது. செடியைப் பற்றி அறியும் போது, நடனம் என்னும் புது வார்த்தையையும் கேள்விப்படுகிறான். நடனம் என்றால் என்ன என்பதைக்கூட கம்ப்யூட்டர் தான் வீடியோவுடன் விளக்குகிறது. தனது முன்னோர்களின் நடனக் காட்சியைப் பார்த்து வியக்கும் கேப்டன் தன்னால் நடக்கக் கூட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறான். தொடர்ந்து முன்னோர்களைப் பற்றி அறியும் போது, பூமியைக் குறித்தும், தண்ணீர், கடல், தாவரம் இன்ன பிறவற்றை பற்றியும் தெரிந்து கொள்கிறான். இதுவரை, மனித குலம் இழந்த இயற்கையோடு இயைந்த வாழ்வை உணர்ந்து, மீண்டும் தாய்பூமிக்கு திரும்ப முயற்சிக்கிறான். தாயகம் திரும்ப விரும்பும் கேப்டனை அதுவரை அடிமாய் சேவகம் செய்த கம்ப்யூட்டர் அவர்களை பூமிக்கு திரும்பவிடாமல் தன் சுயரூபத்தைக் காட்டுகிறது. பசுமை பூத்த அச்செடியை சாவியாய் கொண்டு அனைவரும் பூமி திரும்ப WALL-Eயும், ஈவாவும் உதவுகிறார்கள்.





