தமிழில் சமிபத்தில் நான் கண்ட மெகா படங்கள் எல்லாம் என்னை கவிழ வைக்க.....சிறிய செலவில் கதையை மட்டும் நம்பி வெளிவந்த எனக்கு பிடித்த படங்கள் நாடோடிகள், சுப்பிரமணியபுரம், யாவரும் நலம்,......இப்போது இந்த பட்டிலில் இடம் பிடித்த படம் தான் "S" பிக்ச்சரிலிருந்து வெளிவந்திருக்கும் "ஈரம்"தமிழில் மீண்டும் ஒரு தில்லர்.
சிந்து மேனன் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.........
கள்ள காதல் தெரிய வந்த அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டதாக என்று அப்பார்ட்மென்ட் அக்கம் பக்கத்தினர் முதல், சிந்துவின் கணவன் 'நந்தா' வரை நம்புகின்றனர்.
இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் அசிஸ்டென்ட் கமிஷனர் 'ஆதி'. சிந்துவின் முன்னாள் காதலன். சிந்து இவரது முன்னால் காதலி என்பதால் இவர் கொஞ்சம் அதிகமா அக்கரை எடுத்து கொள்கிறார்.
பின்பு அந்த அப்பார்ட்மென்ட்டில் இருக்கும் சிலரும் தொடர்ந்து சாக தொடங்க, போலிசின் கவனம் தீவிரமாகிறது. எல்லா மரணத்திலும் இருக்கும் ஒரே தொடர்பு தண்ணீர். படம் மரணங்கள், விசாரணை, சிந்துவை திருச்சியில் கல்லூரியில் படித்த போது காதலித்த ஆதியின் நினைவுகள் என்று மாறி மாறி அழகாய் செல்கிறது.
ஒரு கட்டத்தில், இந்த மரணங்களுக்கு காரணம் "தண்ணீர்" என்னவென்பதை ஆதி அறிகிறார்.
என்ன நடந்தது? என்ன காரணம்? "Invesgation Begins".......
படத்தில் எனக்கு பிடித்ததே படத்தை குளிர்ச்சியா அழகா காட்டுது. மேலும் படத்தின் சுவாரஸ்யம் கெடாமல் படத்தை கொண்டு சென்றது.படத்தின் பின்னனி இசையும், ஒளிபதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டெக்னிக்கலா நல்லா இருக்கு.
படத்தின் மிக முக்கியமான கேரக்டர் தண்ணீர். அதுவும் செமையா இருக்கு படம் முழுதும். நாயகன் ஆதி செம ஸ்டைலா இருக்கிறார். நல்லாவும் நடிச்சிருக்கிறார். நந்தா திரையில் காதல் & நகைச்சுவை பார்த்த எனக்கு இதில் அழுத்தமான நடிப்புடன் கொஞ்சம் வித்தியாமாக தெரிகிறார்.
சிந்து மேனன், சரண்யா இவங்களும் நல்லா பண்ணி இருக்காங்க. (என்னை பொறுத்த வரையில் சிந்து இந்த ப்டத்தில் கொஞ்சம் அழகாய்.......!)
படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள், அதில் ஒன்று தீம் Music. இருக்கும் 'தரை இறங்கிய' மிக அழகான வரிகளை கொண்ட மிக அழகான பாடல்.
படத்தின் சில குறைகள் இருக்கு. படத்தின் நீளம் போன்றவை. ஆனா மேக்கிங் அதை மறைக்கிறது. சில கிளிஷே காட்சிகளை தவிர்த்திருந்தாலும், திர்ல்லர் படத்தில் அப்பார்மேன்ட்டை கீழிருந்து மேலாக எடுத்து போன்ற கிளிஷேக்களையும் தவிர்த்திருந்த்திருக்கலாம்.
படத்தை இன்னொரு பாதையில் பார்த்தால்........
பெண்களுக்கு எதிரான சமூக அவலத்தை படமாக்கி இருக்கிறார்கள். மேலும் இன்றைய நகர கலாச்சாரத்தில் எங்கோ நடக்கும் சில தப்புகளுக்கு, சில அப்பாவி பெண்களும் தவறுதலாக பலியாகின்றனர் என்பதையும்.... இந்த நுகர்வு கலாச்சாரத்தில் மனிதர்களின் குணங்கள் பற்றியும் பேசுகிறது "ஈரம்"- மனதில் ஈரம் இல்லாத மனிதர்களுக்காக.......
My Rating : 8.5/10
No comments:
Post a Comment