வெகு நாட்களாக இந்த திரைப்படம் எழுத வேண்டுமென்று என் நினைவில் இருந்தாலும்...இந்த திரைப்படம் என் மனதில் விட்டு சென்ற வலி இன்னும் பசுமையாய்...
நாம் நமது வாழ்வில் எத்தனை உறவுகளை இழந்திருப்போம், எத்தனை உறவுகளை பெற்றிருப்போம்..பழைய உறவால் தொலையும் வாழ்க்கையும், புது உறவுகளால் புதுப்பிக்கப்படும் வாழ்வும் சில நினைவுடளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது இந்த திரைப்படம்.
94 நிமிடங்களில் ஒரு வாழ்க்கை, மரணம், கண்ணீர், சோகம், பிரிவின் வலி எதிர்கொள்ளல், போன்ற பல உணர்வுகள்.
1993 ஆம் ஆண்டு வெளிவந்த புகழ்பெற்ற போலந்து நாட்டு இயக்குனர் Krzysztof Kieslowski Trois couleurs: Bleu (Three Colors: Blue).
இப்படத்தை பற்றி சுறுங்க சொன்னால்....
சாலை விபத்தொன்றில் தன் கணவனையும் சிறுவயது மகளையும் பறிகொடுத்த ஜூலி அத்துயரத்தை எவ்வாறு எதிர்கொள்கிறாள். அவள் வாழ்வின் இன்ப துன்பங்கள்,....அவள் இந்த சப்பவத்தை தொடர்ந்து உறவுகளின் பாசப்பிணைப்புகளிலிருந்து விடுதலை அடைய (Spritual Suicide)மனக்கொலை செய்துகொள்ள விரும்புகிறாள். ஆனால் பாரிஸ் நகரத்தில் தெரிந்தவர்களும் புதிய அறிமுகங்களும் விரிக்கும் நேசவலைகள் அவளது வாழ்வை மீட்டெடுக்கின்றன என்பதை இப்படம் சித்தரிக்கிறது.
இந்த திரைப்படத்தை மாற்று கோணத்தில் பார்தால்...
இந்த சப்பவகளுடன் பிரெஞ்சுப் புரட்சியின் விடுதலை கருத்துக்ககளுடன் ஒரு வாழ்வியல் அனுபவத்தையும் இணைந்து திரைப்படத்தின் கதை.
ஜூலி கதாபாத்திரத்ததில் Spiritual Suicide எனப்படும் மனக்கொலை நிலை வெளிப்படுத்தப்படும்போது சற்றே அதிர்ந்து போகிறது மனது. ஒரு நிமிடம் நாம் சொந்த உறவுகளின் பிரிவுகளால் ஏற்படும் நிகழ்வுகள் காட்சி ஓவியங்களாக விரிகின்றன, சற்று வலிகளுடன்.... நமது மனதிரையில்.
உணர்வுகளை எந்த விதத்திலும் விலகிவிடாதவாறு காட்சிப்படுத்தலின் முழுமையைமிக நேர்த்தியுடன் படத்தொகுப்பு படைக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் இனணந்து பயணப்பட்டிருக்கிறது கேமரா.
படத்தில் பயணிக்கும் போது ஒரு மெல்லிய சலிப்புத்தன்மை கொண்டிருந்தாலும் நெடுகிலும் பட காட்சிகளால் மறக்க செய்கிறார் இயக்குனர்.
வெளிவந்த அதே ஆண்டில் வெனிஸ் திரைப்பட விழாவில் முன்று விருதுகளை அள்ளியது.
Silver Ribbon, Sant Jordi Award,César Award,Goya Award,CEC Award, Guild Film Award போன்ற பல பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது.இப்படத்தை தொடர்ந்து White and RED அகியவை வெளிவந்தன.

நாயகி தன் பின்கரத்தை சுவற்றோடு உராசிச்சென்று சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி, இப்படத்தில் வரும் காட்சியைப் போன்று "இந்திரா" திரைப்படத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.(நமது தமிழ் சினிமா இந்த படத்தையும் வீட்டுவைக்கவில்லை)
*****BLEU - one of the world's preeminent flims*****
3 comments:
ஒரு அழகிய , அருமையான ட்ரையாலஜியில் ஒரு படம் . . இப்படங்களைப் பற்றி நான் எழுத ஆரம்பித்து, பாதியில் நிற்கிறது ஒரு பதிவு . . :-) . . கலக்குங்கள் . . !!
ஆஹா.. ரெண்டு நாள் முன்னாடி UTV World movies channel-ல போட்டாங்களே.. பாக்காம விட்டுட்டேனே.. :(
அருமையான பதிவு அஷ்வின்.. இன்னும் நிறைய எழுதுங்க..
@கருந்தேள் கண்ணாயிரம் எப்பொழுதும் முதல்ல இதே மாதிரி வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்க.. நன்றி
@ ஜெய்
பரவயில்லை.. வருந்ததிங்க.. நெட்-ல் தரைவிரக்கம் செய்திடுங்க.. என்னும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி
Post a Comment