July 1, 2010

La Haine (1995) -"The Hate"


Three Young Friends... One Last Chance.....


இப்போழுதுதான் நேரம் கிடைத்தது.. உங்களை சந்திக்க என்னை பின்னுட்டி கொண்டு இருப்பவர்களுக்கு நன்றி

La Haine தற்செயலாகப் பார்க்கக் கிடைத்து மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்த பிரெஞ்சு திரைப்படம்,

Vinz, அவனது நண்பர்கள் Saïd, & Hubert ஆகியோரின் கலவரத்திற்கு பின்னான 24 மணிநேர வாழ்க்கை திரையில்.....

Vinz, Saïd, & Hubert மூவரும் வேலையற்ற இளைஞர்கள். நண்பர்கள் ஆனாலும் மூவரும் தனித்தனி சுபவம் கொண்டவர்கள்

Vinz எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவன். எப்போதும் சண்டைக்குத் தயாராகயிருப்பவன்.

Hubert உடல்வலிமையுடையவன் என்றாலும் எந்த பிரச்சனையிலும் சிக்காது அமைதியான வாழ்க்கை வாழ விரும்புபவன். கலவரத்தில் தன் உடற்பயிற்சிக் கூடம் கொளுத்தப்பட்டதையும் அமைதியாக ஏற்றுக்கொள்பவன்.

Saïd எதைப் பற்றியும் கவலைகொள்ளாத மற்ற இருவர் அளவுக்கு முதிர்ச்சியடையாத சராசரி இளைஞன்.

இப்படி தங்கள் வாழ்க்கை தருணத்தில் ஒரு நாள் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் நடக்கும் கலவரத்தில் இளைஞன் போலீலால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அக்கலவரத்தில் காவல் அதிகாரி ஒருவர் தன் கைத்துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார். அத்துப்பாக்கி தக்கப்பட்ட இளைஞனின் நண்பனான Vinz கையில் கிடைக்கிறது. அத்துப்பாக்கி தன்னிடம் இருப்பதாக Vinz சொல்லும்போது அதனால் பிரச்சனை ஏற்படுமென்றும் அதை தூக்கியெறியுமாறும் Hubert கூறுகிறான்.அதை மறுக்கும் Vinz மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நண்பன் இறந்தால் ஒரு போலீஸையாவது சுட்டுக் கொல்லவேண்டுமென்று கூறுகிறான்.

மூன்று நபர்களும் துப்பாக்கியுடன் பாரீஸுக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் பல வகையான மனிதர்களை சந்திக்கிறார்கள்.
இனவெறி கொண்ட காவல் அதிகாரி, அவருக்கு எதிர்மறையாக நல்ல காவல் அதிகாரி, குடிகாரர்கள், கொலைகாரர்கள், போதை மருந்து கடத்துபவன், செல்வந்தர்கள், இனவெறியாளர்கள், முன்னாள் போர்வீரன் என பல்வகை மனிதர்களை சந்திக்கிறார்கள். ஒவ்வொரு நேரத்திலும் அத்துப்பாக்கி பயன்படுத்தத் தூண்டும் சம்பவங்கள் நடக்கின்றன. படத்தின் ஓட்டம் & பதட்டம் அதிகரிக்கின்றது. படத்தின் இறுதி வரை இப்பதட்டம் நம்மை உட்கொள்கிறது.

இப்பதட்டம் இறுதிக்காட்சியில் உச்சத்தை அடைகிறது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் வந்த இறுதிக்காட்சி அதிர்வை ஏற்படுத்தியது. அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை உங்களுக்கு..மன்னிக்கவும் படத்தின் இறுதிக்காட்சி இன்னும் சிலநாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்தபடியிருக்கும். திரையில் கான்க....

மூன்று மைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் Vincent Cassel, Hubert Kounde, Said Taghmaoui மூவரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல்மொழியும் வசன உச்சரிப்புகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்துயிருக்கிறார்கள். அதிலும் Vincent (Vinz) தன் கையில் துப்பாக்கி இருப்பதால் தெனாவெட்டுடன் அலைவதும் பின்னர் துப்பாக்கியைப் பயன்படுத்த நேரும்போது பயம்கொள்வதுமென அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வலியவர்கள் மீதான பயம் வெறுப்பாக உருமாறும் நிலை சிறப்பாக பதிவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். வித்தியாசமான காமிரா கோணங்களும் காட்சியமைப்புகளும் ரசிக்கும்படி உள்ளன.

இப்படத்தின் திரைக்கதை என்னவென்று சொல்ல ஆரம்பத்தில் வேலையின்றி அரட்டைகளில் பொழுதைக் கழிக்கும்போது மெதுவாக நகரும் காட்சிகள் நண்பர்களின் கையில் துப்பாக்கி கிடைத்து பாரிஸுக்கு சென்றபின் அசுர வேகத்தில் செல்கின்றன.

இந்த மூன்று கதாபாத்திரங்களும் படத்தின் இறுதிக்காட்சியும் யாரையும் நியாயப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி படமாக்கியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.

11 comments:

King Viswa said...

இன்னமும் பார்க்கவில்லை அஷ்வின்.

கேள்விப்பட வைத்தமைக்கு நன்றி.

ஜெய் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அஷ்வின்... நல்ல அறிமுகம்... த்மிழிஷ், தமிழ்மணம் பட்டையை இணைத்தால் இன்னும் நிறைய பேருக்கு சென்றடையும்...

கருந்தேள் கண்ணாயிரம் said...

//King Viswa said...

இன்னமும் பார்க்கவில்லை அஷ்வின்.

கேள்விப்பட வைத்தமைக்கு நன்றி.
//

வழிமொழிகிறேன். பார்த்துவிடவேண்டியதுதான் ! ;-)

அஷ்வின் நாரயணசாமி said...

//@king viswa & கருந்தேள்....
மிக்க நன்றி..
கண்டிப்பாக பார்த்துவிட்டு.. சொல்லுங்கள் எப்படி இருந்தது... ரொம்ப நல்ல படம்..

@ஜெய்...
மிக்க நன்றி..தொடர்ந்து வந்து கருத்தை சொல்லுங்க

ஒரு சிறிய வேண்டுகொள்... த்மிழிஷ், தமிழ்மணம் பட்டையை இணைத்தால் எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்க

ஜெய் said...

http://blog.tamilish.com/pakkam/5

http://blog.thamizmanam.com/archives/51

இந்த ரெண்டு பேஜ்லயும் வழிமுறைகள் இருக்கு... பாருங்க... புரியலைன்னா சாட் அல்லது மெயில் அனுப்பவும்... jaymoviereviews@gmail.com

geethappriyan said...

அஷ்வின்,
நல்லா எழுதியிருக்கீங்க,
எழுத்துப்பிழை நிறைய தென்படுகிறது,அதை குறைத்துக்கொள்ளவும்.

எனக்கு தெரிந்த வகையில் நாரயனசாமிக்கு பெரிய |ண| வரும்.
சினிமா வலைப்பூகள்-உங்கள் சைட் பாரில்

இதில் ஒரு க் சேர்த்து வலைப்பூக்கள் என ஆக்கவும்.
தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| இவை முக்கியமாக பார்க்க வேண்டியவை.

geethappriyan said...

அஷ்வின்,
நல்லா எழுதியிருக்கீங்க,
எழுத்துப்பிழை நிறைய தென்படுகிறது,அதை குறைத்துக்கொள்ளவும்.

எனக்கு தெரிந்த வகையில் நாரயனசாமிக்கு பெரிய |ண| வரும்.
சினிமா வலைப்பூகள்-உங்கள் சைட் பாரில்

இதில் ஒரு க் சேர்த்து வலைப்பூக்கள் என ஆக்கவும்.
தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| இவை முக்கியமாக பார்க்க வேண்டியவை.

ஜெய் said...

தமிழ் வளர்த்த எங்கள் அண்ணன் கீதப்பிரியன் வாழ்க... ;) :)

அஷ்வின் நாரயணசாமி said...

@கீதாப்பிரியன்

ரொம்ப நன்றிங்க முதல்முறையாய் வந்தமைக்கு... கண்டிப்பாக திருத்தி கொள்கிறேன் இந்த எழுத்து பிழைகளை... மீண்டும் வாருங்கள்.. கருத்துகளை சொல்லுங்க....

உங்கள் வலைபூவை தவறாமல் படிக்கும் ஒரு வாசகர்....

@ஜெய்
நன்றிங்க:)

வெடிகுண்டு வெங்கட் said...

நன்றாக எழுதுகிறீர்கள்

தொடருங்கள்.


வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

"உளவாளியும், கத்துக்குட்டியும் From Paris With Love 2010 - சினிமா விமர்சனம்

வெடிகுண்டு வெங்கட் said...

தல,

இந்த போஸ்டரை பார்த்தீங்களா?

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்